Puttalam Online
kids

ஈபிள் டவரும் அதன் அதிசயமும்

  • 29 April 2015
  • 698 views

இவ்வளவு பெரிய கோபுரத்தை உருவாக்க நிறையச் செலவாகியிருக்கும் அல்லவா? நிச்சயமாக! ஈபிள் டவரை முழுவதுமாக வடிவமைக்க பிரான்ஸ் அரசுக்கு ஆன ஒட்டுமொத்தச் செலவு 7,799,401.31 பிராங்குகள்.

உலகமே அண்ணாந்து பார்க்கும் பாரீஸ் ஈபிள் டவருக்கு வயது 126. ஆம், கடந்த மாதம் தனது 126–வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது இந்த இரும்பு அதிசயம்.

பிரான்ஸ் நாட்டின் ‘இரும்புப் பெண்’ என அழைக்கப்படும் ‘ஈபிள் டவர்’, உலக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா மேற்கொள்ளும் மக்கள் இந்த வரலாற்று புகழ்பெற்ற ஈபிள் டவரை காணத் தவறுவதில்லை. வருடத்துக்கு சுமார் 70 லட்சம் மக்கள் ஈபிள் டவருக்கு வந்து செல்வதாக சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது.

1889–ம் ஆண்டு மார்ச் மாதம் 31–ம் தேதி பாரீசில் உலக கண்காட்சி நடைபெற்ற நாளில்தான் ஈபிள் டவர் திறந்து வைக்கப்பட்டது.

இந்த ஈபிள் டவர் குறித்த சில சுவாரசியமான தகவல்கள்…

1887–ம் ஆண்டு ஈபிள் டவரை எழுப்ப தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 2 வருடங்கள், 2 மாதங்கள் மற்றும் 5 நாட்களுக்கு பிறகு முடிவு பெற்றன.

ஈபிள் டவரின் ஒட்டுமொத்த உயரம் 324 மீட்டர்கள் ஆகும். இதில் உச்சத்தில் உள்ள ஆன்டெனா மட்டும் 24 மீட்டர்கள் ஆகும்.

கோடை காலங்களில் ஈபிள் டவர் மீது அதிகப்படியான வெப்பம் பதிவாவதால் இரும்பு விரிவடைந்து, இது சுமார் 6 அங்குலம் வரை வளர்கிறது. அதேபோல், குளிர்காலங்களில் அதே அளவு சுருங்குகிறது. இந்த மாற்றத்தை வெறும் கண்களால் காண முடியாது.

 ஈபிள் டவரின் ஒட்டுமொத்த எடை சரியாக 10 ஆயிரம் டன்கள்.

பிரெஞ்சுப் புரட்சியை நினைவுபடுத்தும் விதமாகவும், நாட்டின் தொழிற்துறையின் வலிமையை காட்டவும் கஸ்டாவ் ஈபிள் என்பவரால் ஈபிள் டவர் கட்டப்பட்டது.

20 வருடங்களுக்கு பிறகு, அந்த இடத்தை விட்டு ஈபிள் டவரை நீக்கிவிடும் நோக்கில்தான் கட்டப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஈபிள் டவர் உலக பிரபலம் அடைந்ததால், அதை நீக்கும் எண்ணத்தை கைவிட்டனர்.

 ஈபிள் டவரின் உட்புறத்திலிருந்து மக்கள் மேல்நோக்கிச் செல்லும் வகையில் ‘லிப்ட்’ வசதி உள்ளது. இது மேலும் கீழும் பயணம் செய்யும் தூரம் ஒரு ஆண்டில் 1,03,000 கிலோ மீட்டர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஈபிள் டவர் நிர்மாணிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை அதற்கு 18 முறை வண்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது.

ஈபிள் டவர் உருவாக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து 41 வருடங்களாக ‘உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் அல்லது கோபுரம்’ என்ற பெயருடன் விளங்கியது.

1889–ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 25 கோடி மக்கள் ஈபிள் டவரை நேரடியாகப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற 1944–ம் ஆண்டில், ஈபிள் டவரை தகர்க்குமாறு பிரான்ஸ் கவர்னருக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார்.

பலமாக காற்று வீசும்போது ஈபிள் டவரின் உச்சிப்பகுதி சுமார் 6 முதல் 7 மீட்டர்கள் வரை முன்னும் பின்னும் நகர்கிறது.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All