Puttalam Online
historical-notes

புதையல் 5 : கண்கானிக் குளம் பள்ளி (AMM ஹனீபா அவர்களின் 1983 ம் ஆண்டுக் குறிப்பில் இருந்து)

  • 3 May 2015
  • 1,020 views

கண்கானிக்குளம் பள்ளி

(AMM ஹனீபா அவர்களின் 1983 ம் ஆண்டுக் குறிப்பில் இருந்து)

தற்போது நாம் காணும் மேற்படி பள்ளி புதிதாகக் கட்டப்பட்டது. இதே பள்ளியிருந்த இடத்தில் இருந்த பழைய பள்ளியும் கிணறும் முற்றாக உடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப் பள்ளியில் முஅத்தினாக “கவி அப்பா” என்று அழைக்கப்படும் (ஹமீது ஹுசைன் கம்பனி தாபகர், ஹமீது ஹுசைனின் மூத்த சகோதரர்) முகம்மது இஸ்மாயில் என்பவர் முன்னர் இருந்த பள்ளியில் நெடுங்காலம் கடமையாற்றினார்.

முகம்மது ஹனீபா என்பவர் பேஷ் இமாமாகவும், குர்ஆன் போதனாசிரியாரகவும் கடமையாற்றினார். இவரை “சர்க்கரை” என்று இடுகுறிப் பெயர் கொண்டு அழைத்தனர்.

இப்பள்ளியின் டிரஸ்டியாக ஜலால்தீன் மரைக்கார் கடமையாற்றி வந்தார். புதிய பள்ளி கட்டிய பின்னரும் கூட அவர் டிரஸ்டியாராக இருந்து வந்தார். தற்போது அவரது மகள் வயிற்றுப் பேரர் ஆசிரியர் மஹ்ரூப் அவர்கள் டிரஸ்டியாக கடமையாற்றி வருகின்றார். இப் பள்ளிக்கு எதிரே உள்ள மைதானத்திலே இரு பெருநாள் தினங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் குதூகலமாக நடைபெற்று வருகின்றன.

இந்த மைதானத்திலே தற்போது TOWN HALL ஒன்று கட்டப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. இனி ரேசுக்கு இடமில்லை.

குறிப்பு:
1. இங்கு குறிப்பிடப்படும் பள்ளிகள் தற்போது கட்டப்பட்டு இருக்கும் பள்ளிகளுக்கு முன்னர் இருந்த இரு பள்ளிகளுமாகும். அவை K K வீதிக்கு மறுபுறம் இருந்தன.

2. TOWN HALL எனக் குறிப்பிடப்படுவது IB M ஆகும். (இப்னு பதூதா மஹால்).

3. பெருநாள் ரேஸ் இடம்பெறும் தரவை: Poles வீதி, குருநாகல் வீதி, KK வீதி, IBM Lane (பஞ்சிகாவத்த லேன்) என்பனவற்றை எல்லைகளாகக் கொண்ட பிரதேசம்.

4. மஹ்ரூப் ஆசிரியர். (சாஹிரா கல்லூரி முன்னாள் அதிபர்)

5. ஹமீது ஹுசைன் கம்பனி ஹிஜ்ரி மினாராவுக்கு முன்னால் இருந்தது. இப்போது முழுமையான கடையாக இல்லை.

Jalaaldeen Maraikar

Jalaaldeen Maraikar

புதையல்கள் தோண்டப்படும் . . .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All