Puttalam Online
other-news

புல்மோட்டை கல்வி அபிவிருத்தி மையத்தின் (EDC) ஏற்பாட்டில் மாபெரும் பாராட்டு விழா

  • 3 May 2015
  • 729 views

(ஏ.ஸீ. முஸம்மில்)

புல்மோட்டை கல்வி அபிவிருத்தி மையத்தின் (EDC) ஏற்பாட்டில் கடந்த 2014ம் ஆண்டில் புல்மோட்டையிலிருந்து பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான மாணவர்களையும் 2014 ல் நடைபெற்ற க. பொ.த (சா.த)ப் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று புல்மோட்டை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் கௌரவிக்கும் மாபெரும் பாராட்டு விழா கடந்த 30.04.2015 (வியாழக்கிழமை) பி.ப. 04:00 மணிக்கு புல்மோட்டை- கணிஜவெளி சிங்கள மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜனாப். MTA. நிஸாம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மேற்படி விழாவில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். MAM. உனைஸ், கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் வர்த்தகத்துறைப் பணிப்பாளர் ஜனாப். MSM. ராசிக், சட்டத்தரணி ஜனாப்: A.இல்யாஸ், புல்மோட்டை பொலிஸ் நிலைய இரண்டாம் நிலைப் பொறுப்பதிகாரி திரு. பொடி பண்டார, இலங்கை கனிய மணல் லிமிடெட்டின் இயந்திரப் பொறியாளர் திரு. ராஜபக்ஸ, மற்றும் பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

புல்மோட்டையின் பாரம்பரிய கலை நிகழ்வான கோலாட்டத்துடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு நடாத்தப்பட்ட மேற்படி பாராட்டு விழாவில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள், க.பொ.த.(சா.த.)ப் பரீட்சையில் 9A மற்றும் 8A,1B பெற்ற மாணவர்கள் ஆகியோர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜனாப். MTA. நிஸாம் அவர்களினால் பதக்கம் அணிவிக்கப்பட்டும் பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் க.பொ.த.உ.தரம் கற்க தகுதிபெற்ற மாணவர்களும் விழாவில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கபட்டார்கள்.

மிகவும் ஏழ்மையான நிலையிலும் தனது விடாமுயற்சியினால் க.பொ.த. (சா.த.)ப் பரீட்சையில் ஏழு பாடங்களில் சித்தியடைந்து க.பொ.த. (உ .தரம்) கற்க தகுதி பெற்ற மாணவியொருவருக்கு வருகை தந்திருந்த அதிதிகள் பணப் பரிசில்கள் வழங்கி பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாலை 07:00 மணி வரை நடைபெற்ற இப்பாராட்டு விழாவில் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள், தனியார் கல்வி நிலைய நிர்வாகிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், தாதிய அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாய மத்திய நிலைய உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை நிர்வாகிகள், இலங்கை கனிய மணல் லிமிடெட் ஊழியர்கள், மாணவர்கள், பெற்றார்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தகவல்:
ஏ.ஸீ. முஸம்மில்
செயலாளர்
கல்வி அபிவிருத்தி மையம் (EDC)
புல்மோட்டை.

3 4 20150430_181821


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All