Puttalam Online
other-news

குருநாகல் மாவட்டத்திலுள்ள தென்னந்தோட்டங்களில் உற்பத்தியை மேம்படுத்தல்

  • 9 May 2015
  • 618 views

குருநாகல் மாவட்டத்திலுள்ள பாரிய மற்றும் நடுத்தர அளவிலான தென்னந்தோட்டங்களில் உற்பத்தி செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் கொமர்ஷல் வங்கி அண்மையில் செயலமர்வு ஒன்றினை நடத்தியது. இந்த மாவட்டத்தினைச் சேர்ந்த 75க்கும் அதிகமானவர்கள் இதில் பங்கேற்றனர்.

கொமர்ஷல் வங்கியின் குருநாகல் கிளையும் அபிவிருத்திக் கடன் பிரிவும் இணைந்து தென்னை அபிவிருத்திச் சபை மற்றும் வடமேல் மாகாண மிருக உற்பத்தி மற்றும் சுகாதாரப்பிரிவு என்பவற்றின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த செயலமர்வின் நோக்காக தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு தென்னை உற்பத்தி அபிவிருத்தி பற்றிய அறிவை மேம்படுத்துவதும், கால்நடை அபிவிருத்திகளை மேம்படுத்துவது தொடர்பான அறிவூட்டலை வழங்குவதே இதன் நோக்காகும்.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All