Puttalam Online
historical-notes

புதையல் 6 : சல்லிப் பிட்டு – அதற்குப் பெயர் இவ்வாறுதான் வந்தது

புத்தளம் மக்களின் காலை உணவுகளுள் ஒன்று ‘சல்லிப் பிட்டு’ ஆகும். ஆனால் இன்று அது அருகி வருகின்றது. ‘சல்லிப் பிட்டு’ என்ற பெயர் எவ்வாறு வந்தது என்று நீங்கள் அறிவீர்களா?

அக்காலத்தில் பணப் புழக்கத்தில் கால் சதம், அரை சதம், ஒரு சதம் என்பனவும் இருந்தன. இவை செம்பினால் வார்க்கப்பட்டவை. சல்லி,பணம், துட்டு போன்ற பதங்கள் புத்தளத்தவர்களால் பயன்படுத்தப்பட்டன. 50 சதத்தை அரைப் பணம் என்பர். நாலு பணம் என்பது 25 சத்தத்தைக் குறிக்கும். 1 சல்லி என்பது அரை சதத்தைக் குறிக்கும்.

1 துட்டு = 1/4 பணம்
1 பணம் = 6 சதம்
4 பணம் = 25 சதம்
8 பணம் = 50 சதம்
16 பணம் = 1 ரூபா
1 சல்லி = 1/2 சதம்
செம்பினால் வார்க்கப்பட்ட அரை சதத்துக்கு ஒரு பிட்டு வாங்கலாம். அதாவது ஒரு பிட்டின் விலை ஒரு சல்லியாகும். எனவே சல்லிப் பிட்டு என அதனை அழைத்தனர். இது ஒரு காரணப் பெயராக இன்றும் நிலவி வருகின்றது.

இன்று (10.05.2015) ஒரு சல்லிப் பிட்டு 10 ரூபாய் ஆகும். அதுவும் எல்லா தேநீர் கடைகளிலும் இப்போது அது விற்பனைக்கு இல்லை.

(Z.A. Zanhir)

புதையல்கள் தோண்டப்படும் . . .

Sallip pittu (3) Sallip pittu (2) Sallip pittu (1)


One thought on “புதையல் 6 : சல்லிப் பிட்டு – அதற்குப் பெயர் இவ்வாறுதான் வந்தது

  1. Aman Rizvi says:

    Good news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All