Puttalam Online
kids

மணல் + நீர் விளையாட்டு – KEC

  • 10 May 2015
  • 799 views

மணல் + நீர் விளையாட்டு

மணல் + நீர் விளையாட்டு – இவ்விரண்டு பொருட்களும் ஒன்றோடொன்று சேர்க்கும்பொழுது ஒரு மூன்றாம் விளையாட்டான ஈர மணல் விளையாட்டை அதிகரிக்கிறது. (மேம்படுத்துகிறது)
இவ்விரண்டு பொருட்களும் ஒன்றின் அருகே மற்றொன்றை வைக்கும்பொழுது பிள்ளைகள் அவற்றைத் தனித் தனியாகவோ சிலவேளை அவற்றை சேர்த்தோ உபயோகிக்க முடியும். DSC_2500

மணலுடனும் நீருடனுமான பிள்ளைகளின் ஆய்வுகள் இயற்கையாகவே அவர்களின் பல்வேறு திறன்களை நிர்மாணிக்க உதவுகின்றன. மற்றவர்களுடன் சேர்ந்து குழுளிகளை ஊதும்போதோ அல்லது மணல் மாடி நிர்மாணிக்கும் போதோ பிள்ளைகள் சமூகத் திறன்களை அபிவிருத்தியடையச் செய்ய உதவுகிறது. அதேவேளை அச்செயற்பாடுகள் பிள்ளைகளின் அறிவுத் திறன்களைக் கூட்டி, ஏன் சில பொருட்கள் நீரில் அமிழ்கின்றன இன்னும் சில பொருட்கள் மிதக்கின்றன என்பதை ஆராய உதவுகின்றன.

ஈர மணல் விளையாட்டு பிள்ளைகளின் கணித, விஞ்ஞானக் கொள்கைகளைத் தூண்டுவதற்கு முதற்படியாகவே இடமளிக்கின்றது. பிள்ளைகள் மணலை நீருடன் கலக்கும் பொழுது அவை இரண்டினதும் குணாதிசயங்கள் மாறுபடுகின்றன என்பதை கண்டுபிடிக்கின்றனர். காய்ந்த மணல் உறுதியாகி நீர் உறிஞ்சப்படுகின்றது.

இரண்டு பொருட்களினதும் அமைப்பின் தன்மையும் மாறுபடுகின்றன. காய்ந்த மணலைப் போலவோ அல்லது திரவ நீரைப் போலவோ அல்லது ஈர மணலை உருவமைக்கப்பட உபயோகிக்க முடியும். தனிப்படவோ அல்லது கூட்டமாகவோ மணலும் நீரும் பிள்ளைகளின் மனங்களையும் உடல்களையும் வினைத்திறனோடு மிருதுவாக்க முடியும்.

நீர் + மணல் விளையாட்டின் பயன்கள்.

சமூக + மனவெழுச்சிகளின் அபிவித்தி

  • மற்றப் பிள்ளைகளுடன் கூட்டாக விளையாடுவது தங்களின் நீர் விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்துகொள்வது.
  • சமூக வகிபாகங்களை வளர்த்துக் கொள்ளுதல்.(பொம்மைகளை கழுவுதல், தட்டுக்களை கழுவுதல்)

DSC_2779

அறிவூக்க அபிவிருத்தி

  • எவ்வாறு பொருட்கள் ஒத்திருக்கின்றன, வேறுபடுகின்றன என்பதைக் காண அவதானிப்பது. (நீரை காய்ந்த மணலுடன் சேர்க்கும் போது அவை மாற்றமடைகின்றன)
  • காரணிகள் – பிரதிபலன்கள் இவை இரண்டிற்குமான தொடர்புகள் அறிதல். (சவர்க்கார நுரையை நீருடன் சேர்க்கும்போது விளைவது என்ன என்பதை அறிய பயிற்சி எடுத்தல்)
  • கொள்ளளவைப் பாதுகாத்தலுக்கான அவதானிப்பு.
  • பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கான திறன்களை அபிவிருத்தி அடையச்செய்தல். (ஈர மணலில் சுரங்கம் அமைக்கும் பொழுது அது இடிந்து விழாது காப்பது பற்றிய படம் வரைதல்)
  • ஆகத் திறனை அபிவிருத்தி அடையச் செய்தல். (ஈர மணலினால் பல்வேறு வகைகளில் உருவங்கள் அமைத்தல்)

இயக்கும் சக்தியை அபிவிருத்தியடையச் செய்தல்.

  • இயக்கும் சக்தியைக் கட்டுப்படுத்தும் தன்மை பலப்படுத்தல்.
  • கண் + கை இயக்கங்களை அபிவிருத்தியடையச் செய்தல்.
  • ஒன்றோடொன்று இணைக்கும் திறன்களை மேம்படுத்தல். (அளக்கும் கோப்பைகள், கரண்டிகள் என்பவற்றை நிரப்புதல்)

Mrs. Asmara Azhar

(Dip. in Early Childhood and Primary Education

OUSL – Nawala)

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All