Puttalam Online
kids

சர்வதேச தாதியர் தினம்

  • 12 May 2015
  • 562 views

இன்று சர்வதேச தாதியர் தினமாகும். “மாற்றத்துக்கான சக்தியாக – பயனுள்ள பராமரிப்பு” என்ற தலைப்பின் இவ்வாண்டு தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது.

தாதியர் அனைவரையும் சமமாக மதித்து செய்து வரும் அரும் பெரும் சேவைகளையும் தியாகங்களையும் நினைவு கூரும் வகையில் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. 1965ஆம் ஆண்டு முதல் சர்வதேச செவிலியர் அமைப்பு (International Council of Nurses) சர்வதேச தாதியர் தினத்தை அனுஷ்டித்து வருகிறது.

1953 இல் ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர் இத்தினத்தை செவிலியர் தினமாக அறிவிக்க வேண்டுமென என கோரிய போதும் அப்போதைய ஜனாதிபதி ஐசன்ஹோவர் அக்கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

இருப்பினும் 1965 ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த கொண்டாடும் வகையில் இன்றைய தினம் சர்வதேச தாதியர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை (The Lady with the Lamp) விளக்கேந்திய சீமாட்டி´, ´கை விளக்கேந்திய காரிகை´ என்று போற்றப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள் சர்வதேச தாதியர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இதே சமயம் சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு இன்று (12) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நிகழ்வொன்று அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் தாதியர் தினத்தினை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் தாதியர்கள் அனைவரையும் கௌரவிக்கும் பொருட்டு  பொதுச் சேவைகள் ஐக்கிய தாதிமார் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த சனிக்கிழமை (09) சுகதாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1988ஆம் ஆண்டு முதல் இன்று வரை சர்வதேச தாதியர் தினம் ஆண்டுதோறும் வெவ்வேறு தொனிப்பொருள்களில் சர்வதேச செவிலியர் அமைப்பினால் அனுஷ்டிக்கபடுகிறது. முதற்தடவையாக 1988 ஆம் “பாதுகாப்பான தாய்மை”  என்ற தொனிப்பொருளில் சர்வதேச தாதியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தொடர்ந்து 1989 இல் “பாடசாலை சுகாதாரம்’, 1990 இல் “தாதியர்களும் சுற்றுச்சூழலும்” போன்ற தொனிப்பொருற்களின் கீழ் தாதியர் தினம் கொண்டாடப்பட்டது.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All