Puttalam Online
regional-news

ஆசிரியர் வழிகாட்டல் கருத்தரங்கு

  • 17 May 2015
  • 800 views

கடந்த 12.05.2015 அன்று மேசி கல்வி வளாகத்தில் மெல்லக் கற்கும் மாணவர்களின் திறன்களை விருத்தி செய்தல் என்ற தொனிப்பொருளில் க.பொ .த சாதரண தரம் மற்றும் தரம் 10 ஆகியவற்றில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.

இக்கருத்தரங்கு புத்தளம் வலய கல்விப் பணிமனையின் தமிழ் பிரிவின் உதவி கல்விப்பணிப்பாளர் திரு Z.A.சன்ஹிர் அவர்களின் தலைமையில், மேசி கல்வி வளாக பணிப்பாளர் திரு. பெளஸுர் ரஹ்மான் அவர்களின் அனுசரனையுடன், ஆசிரியர் வாண்மை விருத்திக்கு வழிகாட்டும் கல்வியாளர்களின் ஆக்கங்களை தாங்கி வெளிவரும் அகவிழி சஞ்சிகை ஆசிரியர் திரு. இந்திரகுமார் அவர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது.

இதில் புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலை ஆசிரியர்களும், மேசி கல்வி வளாக ஆசிரியர்களும் கலந்து பயன்பெற்றனர். இக்கருத்தரங்கில் ஆசிரியர்களுக்கு பயனளிக்கும் கீழ்வரும் இணையதளங்களை பயன்படுத்தல் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

http://www4.schoolnet.lk/edusoft/

http://www.skoool.lk/

மேலும் பங்குபற்றிய பாடசாலைகளுக்கு மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் குறுந்திரைப்படங்கள் அடங்கிய இறுவெட்டுக்களும் வழங்கப்பட்டன.

இதை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் தமிழ் பிரிவை தொடர்பு கொள்ளலாம்.

photo171335681936828908 photo171335681936828909 photo171335681936828910 photo171335681936828911 photo171335681936828912 photo171335681936828913 photo171335681936828914 photo171335681936828915 photo171335681936828916


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All