Puttalam Online
historical-notes

புதையல் 7 : மஸ்ஜிதுஸ் சாலிஹீன் – ஒரு வரலாற்று சுருக்கக் குறிப்பு

  • 7 June 2015
  • 1,031 views

 

masjid saliheenமஸ்ஜிதுஸ் சாலிஹீன் பள்ளிவாசல் 9.12.1983 வெள்ளிக் கிழமை அன்று அஸர் தொழுகைக்குப் பின் வக்பு செய்யப்பட்டது. புத்தளம் ம மு முகம்மது சாலிப் மரைக்கார் அவர்களின் சொந்த செலவில் கடமையான் குளம் வீதியில் இப் பள்ளி கட்டப்பட்டுள்ளது. பள்ளி வளவில் நான்கு கடைகளும் கட்டப்பட்டுள்ளன. maanaa moonaa Salih Maraikar

 

 

வக்பு செய்யப்பட்டபோது அல்லாஹ்வுக்காக வக்பு செய்யும், ஊரவர்களுக்கு கையளிக்கும் பிரகடனம் அதிபர் AMM ஹனீபா (அஹதியா தாபகர்) அவர்களால் வாசிக்கப்பட்டது. ஸாஹிரா கல்லூரி ஆசிரியர், காத்தன்குடியைச் சேர்ந்த அப்துல் கரீம் அவர்களால் துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது. அசர் தொழுகையை S அப்துல் முனாப், (சதகதுள்ளாஹ்வின் மகன்) நடத்தினார். தொழுகையைத் தொடர்ந்து ஆசிரியர் அப்துல் கரீம் அவர்கள் (கரீம் மாஸ்டர் ) பள்ளியின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார்.maanaa moonaa salih maraikar 2

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னரே இப் இப்பள்ளிக்கான அடிக்கல் புத்தளம் மவ்லா மகாம் பள்ளி பேஷ் இமாமாகக் கடமையாற்றிய இந்தியா அதிராம் பட்டினத்தை சேர்ந்த அல் ஹாஜ் MOM அப்துல் காதர் அவர்களால் (ஹாஜியார் அப்பா) நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(ஆசிரியர் AMM ஹனீபா அவர்களின் குறிப்பைத் தழுவி எழுதப்பட்டது.)

புதையல்கள் தோண்டப்படும் . . .

masjithu saaliheen old mosque

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All