Puttalam Online
kids

ஏன் எங்களுக்கு இந்நிலை?

  • 14 June 2015
  • 515 views

உலகலாவிய ரீதியில் சுமார் 150 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் தொழிலாளர்கள் உள்ளதுடன் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே கூடுதலாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினமான வெள்ளிக்கிழமை(12) யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சுமார் 28 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் அயல் நாடான இந்தியாவில் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுளதாக அந்த நிறுவனம் கணிப்பிட்டுள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள சட்டமானது, 14 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் பாரமான வேலைகளை செய்யும் சிறுவர் தொழிலாளர்களாக மாறுவதை தடைசெய்கின்றது. நாட்டில் குழந்தை தொழிலாளர்களை முற்றாக இல்லாது செய்வதற்கான சட்டங்களை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, மே மாதத்தில் அங்கிகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது . இலங்கையில் இந்நிலை காணப்பட்ட போதிலும் ஒப்பீட்டு ரீதியில் குறைவாகவே காணப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All