Puttalam Online
regional-news

ஷஃபான் இறுதிப் பிறை அவதானமும், ரமழான் தீர்மானமும்!

நாம் புனித மிகு ரமழானை எதிர்நோக்கி இருக்கின்றோம். ரஸூல் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை மிக விளிப்பாக இருந்து கணக்கிட்டு வந்தார்கள். ரமழானை முழுமையாக அடைவதில் கரிசனையுடன் உச்ச கவனம் செலுத்தினார்கள்.

15.06.2015 திங்கள் இன்று ஃபஜ்ர் நேரத்தில் கிழக்கு வானில் ஷஃபான் பிறையின் இறுதி வடிவத்தைக் காணக்கூடியதாக இருந்தது. அல் குர்ஆன் இருதிப்பிறையை உருஜூனில் கதீம் என்று சூரா யாசீன் 39 வசனத்தில் குறிப்பிடுகின்றது.

( பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது ex, Sri Lanka, Saudi Arabia, India )

மேற்குறித்த  இறுதி வடிவம் தென்பட்டால் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை 16.06.2015 அமாவாசை நாளாகும். அன்று சந்திரன் மறைக்கப்படும் (சங்கமம் நிகழும்) இவ்வாறு சந்திரன் மறைக்கப்படுவதைதான் ரஸூல் (ஸல்) அவர்கள் கணக்கிட்டு கொள்ளுங்கள் என்று கூறி மாதத்தை பூர்த்தி யாக்குங்கள் என்று பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள்.

இன்ஷா அல்லாஹ் ஷஃபான் மாதம் ஹிஜ்ரி 1436, 29 நாட்களாக செவ்வாய்க்கிழமை பூர்த்தி அடையும். அடுத்த நாள் 17.06.2015 புதன் அன்று ஃபஜ்ரோடு நோன்பு ஆரம்பமாகும்.

இதில் எந்த சர்ச்சையும், குழப்பமும் இல்லை மார்க்கம் தெளிவானது. அறிவோடும், தெளிவோடும் மார்க்கத்தைப் பின்பற்றி எதிவரும் ரமழானை முழுமையாக அடைய அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக வஸ்ஸலாம்.08-shahban 09-Ramdan

இந்தியா ஹிஜ்ரி கமிட்டி

புத்தளம் கிளை


7 thoughts on “ஷஃபான் இறுதிப் பிறை அவதானமும், ரமழான் தீர்மானமும்!

 1. m naufer says:

  bro ..AMR ..
  READ THIS AND THINK DEEPLY
  பிறையைக் கண்ணால் பார்த்தல்!
  Filed under 2015 ஜூன்,பிறை by அந்நஜாத்
  இப்னு ஹத்தாது

  உலகளாவிய அளவில் ஒட்டுமொத்த ஆலிம்கள், மவ்லவிகள் விரல் விட்டு எண்ணப்படும் ஒருசிலர் தவிர, பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் துவங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல. காலை கிழக்கில் உதித்து மாலை மேற்கில் மறையும் பிறையை மஃறிபில் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் துவங்க வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறி வருகிறார்கள். பிறையைக் கண்ணால் பார்த்து மாத்தைத் துவங்குவது இபாதத்-வணக்க வழிபாடுகளில் உள்ளது என்று மூடத்தனமாகப் பிதற்றுகின்றனர். மாலையில் மஃறிபு நேரத்தில் பிறை பார்க்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்ன தாகவோ, மஃறிபு தொழுகையை விட்டுவிட்டு சூரியன் மறையும் வேளையில் மேற்கில் பிறை பார்த்ததாகவோ, பார்க்கச் சொன்னதாகவோ ஒரேயொரு ஆதாரபூர்வமான ஹதீஃதும் இல்லவே இல்லை.

  அப்படியானால் இம்மவ்லவிகள் யாரைப் பின்பற்றுகிறார்கள்? ஆம்! கி.மு. 383ல் யூதர்கள் மூடநம்பிக்கையில் நடைமுறைப்படுத்தியதையே முஸ்லிம் மதகுருமார்களும் பிடிவாத மாகக் கடைபிடிக்கிறார்கள். யூதர்களை சானுக்கு சான், முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள், அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் நுழைந்திருந்தால், நீங்களும் நுழைவீர்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையை நிராகரித்துச் செயல்படுகிறார்கள். (பார்க்க : புகாரீ 3456, 7319, 7320, முஸ்லிம் 5184) ஆம்! முஸ்லிம் மதகுருமார்கள் அனைத்து வகையிலும் யூத கிறித்தவர்களையே பின்பற்றுகிறார்கள். இந்த மவ்லவிகளைக் கண்மூடிப் பின்பற்றும் முஸ்லிம்களும் யூத கிறித்தவர்களையே பின்பற்றுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு குர்ஆன், ஹதீஃத் போதனைகள் ஒருபோதும் பலன் தராது. இது எமது கூற்றல்ல. எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கூறும் உண்மை.

  அதற்கு மாறாக 2:186 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து 7:3, 18:102-106, 33:36, 59:7 குர்ஆன் வசனங்கள் கூறுவதை ஏற்று, மனிதர்களில் யாரையும், எந்த மவ்லவியையும் இடைத் தரகராகக் கொள்ளாமல், நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் பார்த்து விளங்கி அதன்படி நடக்கும் முஃமின்களுக்கு மட்டுமே குர்ஆன், ஹதீஃத் போதனைகள் பலனளிக்கும். இதையும் நாம் கூறவில்லை. அல்குர்ஆன் 51:55 இறைவாக்கே உறுதியாகக் கூறுகிறது. எடுத்துப் படித்துப் பாருங்கள்!

  மாலையில் மேற்கில் மறையும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் துவங்க வேண்டும் என்று கூறும் ஒட்டுமொத்த மவ்லவிகளும் அல்குர்ஆனின், சூரியனும், சந்திரனும் கண்ணின் பார்வைக்குக் கட்டுப்பட்டோ, கணிப்பின் அடிப்பையிலோ சுழலவில்லை. அதற்கு மாறாகத் துல்லிய கணக்கீட்டின்படியே சுழல்கின்றன என்றும், அவை முழுக்க முழுக்க அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மனிதனின் புறக்கண்ணின் கட்டுப்பாட்டில் இல்லவே இல்லை என்று கூறும் 6:96, 7:54, 10:5, 13:2, 14:33, 16:12, 21:33, 29:61, 31:29, 35:13, 36:40, 39:5, 55:5 ஆகிய 13 குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி மனிதனின் புறக்கண் ணின் கட்டுப்பாட்டில்தான் பிறையின் சுழற்சி இருக்கிறது. மனிதக் கண்கள் பிறையில் படாத வரை சந்திரன் சுழலாமல் அங்கேயே நிற்கும் என்று விதண்டாவாதம் புரியும் இந்த மவ்லவிகள் எந்தளவு வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை மேற்படி குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் நிச்சயம் உணர முடியும். எனவே 51:55 இறைவாக்குக் கூறும் உண்மையான இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த குர்ஆன் வசனங்கள் பலனளிக்கும்; அப்படிப்பட்ட, 6:153 இறைவாக்கு கூறும் ஒரே நேர்வழி நடக்க முற்படும் மக்களுக்கே இந்த விளக்கம்.

  இன்றைக்கு 1450 வருடங்களுக்கு முன்னர் தொலைதூர பிரயாணங்களுக்கு ஒட்டகம், எப்படிப் பயணக் கருவியாக இருந்ததோ, தொழுகை நேரத்தை அறிந்து தொழுவதற்கு சூரியன் கருவியாக இருந்ததோ, தூரத்துச் செய்திகளை அறிய மனிதன் நேரடியாக வந்து சொல்லும் நிலை இருந்ததோ, பக்கத்து ஊர்களில் நடப்பதை அறிய முடியாத காலகட்டமாக இருந்ததோ அதேபோல் சந்திர மாத துவக்கத்தை முடிவை மனிதக் கண்ணால் பார்த்து அறியும் கட்டாயம் இருந்தது. சந்திரன் ஒரு கருவியாகப் பயன்பட்டது. அதுவும் சூரியனைத் தினசரி நேரம் அறிய பார்த்து வந்தார்களோ, அதே போல் சந்திர மாதத்தின் நாட்களை அறிய தினசரி சந்திரனைப் புறக்கண்ணால் பார்த்து வந்தார்கள்.

  நபி(ஸல்) அவர்கள் ரமழானில் இஃதிகாஃபில் நுழைந்து, வெளியே வந்தது பற்றிச் சொல்லும் ஹதீஃத்கள், நபி(ஸல்) அவர்கள் இதர மாதங்களைவிட ஷஃபான் மாத நாட்களை மிகக் கவனமாகப் பார்த்து வந்தார்கள் என்று ஆயிஷா(ரழி) கூறும் ஹதீஃத் இவற்றைக் கவனமாக உன்னிப்பாகப் படித்து அறிகிறவர்கள், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திர நாட்களை அறிய அன்றாடம் பிறையில் தோற்றத்தை (பார்க்க : 2:189) அவதானித்து வந்துள்ளனர் என்ற ஆதாரம் கிடைக்கிறதே அல்லாமல், மாதத்தின் இறுதியில் மட்டும் மேற்கில் அதுவும் காலையில் பிறந்து மாலையில் மறையும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மாதத்தைத் துவங்க நபி(ஸல்) அவர்கள் ஏவியதாக ஒரேயொரு ஆதாரத்தையும் இம்மவ்லவிகள் ஒரு போதும் தரமுடியாது. தூய மார்க்கத்தில், சந்திர மாதம் துவங்குவதை இவ்வளவு தெளிவாக குர் ஆன் வசனங்களும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களும் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெளிவு படுத்தும் நிலையில், ஒட்டுமொத்த மவ்லவி களுக்கும் இந்தத் தடுமாற்றம் ஏன்? கி.மு. 383-ல் யூதர்கள் நடைமுறைப்படுத்திய மூட நம்பிக் கையை அதாவது நாள் மஃறிபில் ஆரம்பிக் கிறது, கண்ணுக்கு தெரியும் கிழக்கில் காலையில் உதித்து மேற்கில் மாலையில் மறையும் 2-ம் நாள் பிறையை முதல் பிறையாகவும், அடுத்த நாளே முதல் நாள் என்றும் இம்மவ்லவிகள் வீண் பிடி வாதம் பிடிக்கக் காரணம் என்ன?

  ஆம்! இங்குதான் இந்த மவ்லவிகளின் சுய ரூபம் அம்பலத்திற்கு வருகிறது. இந்த ஒட்டு மொத்த மவ்லவிகள் குர்ஆனின் போதனைகளையும், நபியின் உண்மை நடைமுறைகளையும் புறக்கணித்துவிட்டு, யூத, நசாராக்களை சானுக்கு சாண், முழத்திற்கு முழம் பின்பற்றுவதால், ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளும் இம்மவ்லவிகளின் வயிற்றைக் கலக்குகிறது. அவர்கள் முஸ்லிம்களை ஏமாற்றிப் பிழைப்பது வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என குலை நடுங்குகிறார்கள்.

  தங்களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள். தங்கள் வீடுகளின் அடுப்புகளில் பூனை தூங்க ஆரம்பித்து விடுமோ எனப் பயப்படுகிறார்கள். அதனால் ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கண்டு அஞ்சி அவற்றைக் கடுமையாக விதண்டாவாதங்கள் செய்து எதிர்க்கிறார்கள்.

  ஹலாலான முறையில் உழைத்துச் சாப்பிடும் வழிமுறைகள் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படாததால், வறுமைக்கு அஞ்சி இப்படி எல்லாம் விதண்டாவாதம் செய்து, நேர் வழியை-சத்தியத்தை இருட்டடிப்புச் செய்யத் துணிகிறார்கள்.

  இதோ அந்த உண்மையை வரிசையாகப் பாருங்கள்.
  இப்ராஹீம்(அலை) அவர்கள் காலத்திலி ருந்து நபி(ஸல்) அவர்கள் காலம் வரையில், ஏன் அதன் பின்னரும் ஒட்டகம் அல்லாத தூரப் பிரயாண வாகனங்கள் கண்டுபிடிக்கும் வரை மக்கள் ஒட்டகங்களில்தான் ஹஜ்ஜுக்கு வந்தார்கள். நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் மதீனாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ்ஜுக்காக ஒட்டகத்தில் தான் வந்தார்கள். அல்லாஹ்வும் அல்குர்ஆன் அல்ஹஜ் 22:27ல் வெகு தொலைவிலிருந்து ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்றே கூறுகிறான். இந்த நிலையில் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டு முதன் முதலாக நவீன வாகனங்கள் மூலம் மக்கள் ஹஜ்ஜுக்கு வருவதை இம்மத குருமார்களால் ஜீரணிக்க முடியவில்லை. அல்லாஹ்வே அல்குர்ஆன் 22:27ல் ஹஜ்ஜுக்கு தொலைவிலிருந்து ஒட்டகத்தில் வரக் கட்டளையிட்டிருக்க நீங்கள் எப்படி நவீன வாகனங்களில் செல்லலாம் என்று விதண்டாவாதம் செய்தனர். ஒட்டகம் தூரம் கடக்க உதவும் ஒரு கருவியே-சாதனமே அல்லாமல் ஒட்டகத்தில் போவது இபாதத் வணக்க-வழிபாட்டுக்கு உட்பட்டது அல்ல என்று அறிவார்த்தமாக எடுத்துச் சொல்லியும் இம்மதகுருமார்கள் ஏற்றார்களா? இல்லவே இல்லை. மக்கள் மாறியதால் அவர்களும் மாறினார்கள்.

  அதேபோல் நபி(ஸல்) அவர்களது காலத்தில் ஐங்காலத் தொழுகைகளின் நேரத்தைச் சூரிய ஓட்டத்தைப் புறக்கண்ணால் பார்த்தே முடிவு செய்யும் கட்டாயம் இருந்தது. வேறு வழி இல்லை. அறிவியல் முன்னேற்றம் காரணமாக நேரம் அறிய கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலாக கடிகாரம் மூலம் நேரம் அறிந்து தொழ ஆரம்பித்தவுடன் இம்மதகுருமார்கள் குய்யோ முறையோ என கதற ஆரம்பித்து விட்டார்கள். சூரியனைப் புறக்கண்ணால் பார்ப்பது இபாதத்-வணக்க வழிபாடு. அதைப் புறக்கணித்துவிட்டு கடிகாரம் பார்த்து தொழுவது ஹராம் என விதண்டாவாதம் செய்தனர். நீங்கள் வேண்டுமென்றால் கடிகாரம் கூறும் தொழுகை நேரங்களை அவை சரிதானா என்று முன் வழக்கப்படி சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள் என்று கூறியதை ஏற்கவில்லை. சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்தே தொழவேண்டும். அது நபிவழி-இபாதத் என விதண்டாவாதமே செய்தனர். அவர்கள் மாறவில்லை. மக்கள் மாறியதும் வேறு வழியின்றி அவர்களும் மாறினார்கள். இன்று ஒவ்வொரு பள்ளியிலும் தொழுகை நேர அட்டவணை என எழுதி அறிவிப்புப் பலகைகள் தொங்குகின்றன.

  தொலைத் தொடர்பு அறிவியல் கண்டு பிடிக்க முன் தொலைவில் இடம்பெறும் மரண செய்தியை ஆள் நேரில் வந்து அறிவிக்கும் முறையே இருந்தது. ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்ற இடத்தில் மரணித்துவிட்டால், அவர் கூடச் சென்றவர்கள் திரும்பி வந்து நேரில் சொல்லும் வரை மரணித்ததை அறிய வழியில்லை. இந்த நிலையில் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்ட பின் மக்காவில் ஒருவர் இறந்த செய்தி அடுத்த நிமிடமே அவரது வீட்டுக்குத் தெரிந்து விடும். தொலைத் தொடர்பு வசதி அறிமுகப் படுத்தியவுடன் இம்மதகுருமார்கள் அதை எற்றார்களா? அதுதான் இல்லை. வழமைபோல் அதை மறுத்து விதண்டாவாதமே செய்தனர். அச்செய்தியை ஏற்க முடியாது. வழமைபோல் கூடச் சென்றவர்கள் நேரில் வந்து சொன்ன பின்னரே ஏற்கவேண்டும் என விதண்டாவாதமே செய்தனர். மக்கள் மாறிய பின்னரே அவர்கள் மாறினார்கள்.

  ஒலிபெருக்கி கண்டுபிடிக்கப்பட்டு முதன் முதலில் நடைமுறைக்கு வந்த போதும் இதே கதைதான். இப்படி ஒவ்வொரு அறிவியல் நவீன புதுக்கண்டுபிடிப்பும் நடைமுறைக்கு வரும் போதும், இம்மவ்லவிகள் இப்படித்தான் அலறுவார்கள். தங்கள் ஹராமான வயிற்றுப் பிழைப்புக்கு ஆப்பு வைத்து விடுமோ என அஞ்சி நடுங்குவார்கள். அதே வரிசையில்தான் அதி நவீன கணினி (Computer) கண்டுபிடிக்கப்பட்டு, அதன் மூலம் பல நூறு ஆண்டுகளின் மாதங்கள் எப்போது ஆரம்பித்து எப்போது முடியும் என்பதை இன்று கணக்கிட்டு அறிய முடிகிறது. அந்தக் கணக்குத் துல்லியமாக இருந்தால்தான் 50,100, 200 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற இருக்கும் சூரிய, சந்திர கிரகணங்களை இன்று திட்ட மாகக் கூற முடிகிறது. அப்படி முன்னர் அறிவித்த சூரிய, சந்திர கிரகணங்கள் சொன்னபடி இடம் பெற்றதை சொந்த அனுபவ மூலம் அறிகிறோம்.

  மூன்றாம் பிறையை முதல் பிறையாக நடை முறைப்படுத்தும் மூட முல்லாக்களே இந்த உண்மையை ஏற்று தங்கள் இதழ்களில் எழுதுவதோடு, இன்னும் அடி மூடர்களாகி இக்கணக்கீடு நூற்றுக்கு நூறு சரி என்று ஏற்றுக் கொண்டு, ஆனால், நபி(ஸல்) அவர்கள் பிறையைப் புறக் கண்ணால் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்கக் கட்டளையிட்டுள்ளதாக ஜமுக்காளத்தில் வடித்தெடுத்தப் பொய்யை அவிழ்த்து விடுகிறார்கள்.

  இந்த அளவு பெருத்த வழிகேட்டில் செல்வதற்கு காரணம் என்ன தெரியுமா? நாங்கள் தான் படித்துப் பட்டம் பெற்ற மவ்லவிகள்- ஆலிம்கள், அவாம்களான பாமரர்கள் ஒரு போதும் குர்ஆனை, ஹதீஃதை விளங்க முடியாது என்ற தார்ப்பாயில் வடித்தெடுத்தப் பொய்யைக் கூறுவதோடு, நியாயமோ, உண்மையோ இன்றி வீண் பெருமை கொள்வதால் அல்லாஹ்வே இம்மதகுருமார்களை குர்ஆன் வசனங்களை விட்டும் திருப்பி விடுகிறான். அவர்கள் குர்ஆன் வசனங்களை நேரடியாகக் கண்டாலும் அவற்றை நம்பி ஏற்கமாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால் அதைத் தங்களுக்குரிய வழியாக எடுக்கமாட்டார்ள். ஆனால் தவறான வழிகளைக் கண்டால் அவற்றையே தங்களுக்குரிய நேர்வழியாக எடுத்துக் கொள்வார்கள்….. என்று 7:146 குர்ஆன் வச னத்தை மீண்டும் மீண்டும் படித்து இம்மதகுரு மார்களின், வழிகேட்டின் ஆழத்தை அறிந்து கொள்ளுங்கள்.

  அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே வழி கெடுக்கும் இம்மதகுருமார்களை நம்பி மோசம் போய் நரகில் உங்கள் இருப்பிடத்தைத் தேடிக் கொள்ள முற்படாதீர்கள். எம்மைப் போன்ற சாமான்யர்களையோ, ஆலிம் அல்லாமா மவ்லவி என்று வீண் பெருமை பேசும் வீணர்களையோ நம்பாமல் 2:186 இறைக்கட்டளைப்படி அல்லாஹ்வை மட்டுமே முழுமையாக நம்பி மேலே எடுத்தெழுதியுள்ள வசனங்களை நேரடியாகப் படித்து இறை போதனைப்படியும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்படியும் செயல்பட முன் வாருங்கள்.
  துல்லியக் கணக்கீட்டின்படி (மூட முல்லாக்கள் தொடர்ந்து கூறி வருவது போல் கணிப்பீடு அல்ல) 1436ம் ஆண்டின் ரமழான் மாதம் 17.6.2015 புதன் அன்று ஆரம்பித்து 16.7.2015 வியாழனோடு முடிவடைகிறது. 17.6.2015 புதன் அன்று நோன்பு நோற்றவர்களாக இருக்க வேண்டும். இம்மூட முல்லாக்களை நம்பி முதல் இரண்டு நோன்புகளைத் தவறவிட்டு அல்லாஹ்விடம் பாவிகளாகாதீர்கள். 17.7.2015 வெள்ளி அன்று ஷவ்வால் முதல் நாள் ஹராமான அன்றைய நாளில் நோன்பு நோற்று பெரும்பாவிகள் ஆகாதீர்கள்.

  ஷஃபான் மாத இறுதியில் நிகழும் சங்கமம் (Conjunction) 16.6.15 செவ்வாய் சர்வதேச நேரம் (UT) 14:04:59ல் அரேபியாவுக்கு மேற்கே இடம் பெறுவதால், நாள் மாலையில் ஆரம்பிக்கிறது என்ற மூட நம்பிக்கையில் சவுதி அரசு இருப்பதால் 17.6.15ஐ முதல் நாளாகக் கொள்ளமாட்டார்கள். அதற்கு மாறாக ரமழான் இறுதி நாள் 16.7.15 வியாழன் சர்வதேச நேரம் (UT) 01:24:06 சவுதிக்கு மிகவும் கிழக்கே இடம் பெறுவதால் அடுத்தச் சரியான நாள் 17.7.15 வெள்ளியை ஷவ்வால் ஒன்றாக பெருநாள் தினமாக சவுதி அரசு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்.

  • Eng. AMR says:

   சகோதரரே உங்கள் அலரல்களைப் பார்த்தால் பாவமாக உள்ளது.

   உங்களது குர்ஆன் ஹதீதை விளங்கிக் கொள்ளும் திறன் இத்தனை துாரம் மட்டகரமாக இருக்கிறதே என்று பரிதாபமாகரமாக சிந்திக்க விளைகிறது.

   அவை என்ன என்ன என்று இன்சா அல்லாஹ் விரைவில் தரவிளைகின்றேன்.

 2. Eng. AMR says:

  தயவுசெய்து

  இன்ஷா அல்லாஹ் ஷஃபான் மாதம் ஹிஜ்ரி 1436, 29 நாட்களாக செவ்வாய்க்கிழமை பூர்த்தி அடையும். அடுத்த நாள் 17.06.2015 புதன் அன்று ஃபஜ்ரோடு நோன்பு ஆரம்பமாகும்.

  என்பது எப்படி என்று குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் விளக்கம் தரவும்

  • Hijri committee says:

   இந்த பகுதியில் உள்ள கட்டுரைகளை முழுமையாக வாசித்து விளக்கம் பெறலாம்

   http://puttalamonline.com/category/calendar/

   • Eng. AMR says:

    சகோதரரே
    என்னுடைய கேழ்விக்கு இப்படி ஒரு மொட்டையான விளக்கத்தை நான் எதிர்பார்க்கவில்லை. இது எப்படி என்றால் – ஒருவர் தன்னுடைய ஒரு பிரச்சினைக்கு குர்ஆனில் இருந்து ஆதாரம் காட்டும்படி கேட்டால் குர்ஆனை புரட்டிப் பாருங்கள் அதில் ஆதாரம் உள்ளது – என்பது போன்றுதான் உங்களுடைய பதில் அமைந்துள்ளது. வருந்துகின்றேன்.

    மற்றயது என்னுடைய கேழ்வி

    பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1907
    என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

    “ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்.”
    என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

    என்ற ஹதீதுக்கு முரணாக – உங்கள் பிறை பற்றிய தீர்ப்பு அமைந்துள்தால்தான் அவ்வாறு கேட்டேன். பரவாயில்லை.

    தவிர உங்கள் பிறைக் கணிப்பீட்டின்படி – இன்று 30-06-2015 ம் திகதி பூரண சந்திர தினமகாக உள்ளது. ஆனால் நான் இன்று இரவு சந்திரனை அவதானித்தேன். அதன் வடிவம் உங்கள் கலன்டரில் காட்டப்பட்டுள்ள கிட்டத்தட்ட பிறை 12 இற்கான தோற்றத்திலேயே அது காட்சி அளித்தது. அதன் வடிவம் நிட்சயமாக பூரண வடிவில் காணப்படவில்லை. சிலவேளை சந்திரனின் அத்தேற்றம் பிறை 12க்கு உரியதாக இருந்தால் – அதன் பிறை 13க்கான வடிவத்தை இன்றும் நாம் அவதானிக்க் கூடியதாக இருக்கும்.

    இல்லை என்றால்கூட இன்றுதான் பிறை 14 ஆக இருக்கும்.

    ஆக மொத்தத்தில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான உங்கள் பிறை பற்றிய தீர்ப்பும் பிழை கணிப்பீடும் பிழை என்கதையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். இன்சா அல்லாஹ்.

 3. Eng. AMR says:

  மார்க்கம் தெழிவானது என்று அவற்றின் வழிகாட்டுதல்களை புறக்கணித்து அதில் குழப்பம் செய்ய முனைய வேன்டாம் – பின்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் அதனை தெழிவுபடுத்துகிறது.

  2:185……………………ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;

  புகாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1909
  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

  “பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.”
  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

  பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1906
  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

  “ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.”
  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

  பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1907
  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

  “ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்.”
  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

  Muslim
  Muslim :: Book 6 : Hadith 2391
  Kuraib reported that Umm Fadl, daughter of Harith, sent him (Fadl, i. e. her son) to Mu’awiya in Syria. I (Fadl) arrived in Syria, and did the needful for her. It was there in Syria that the month of Ramadan commenced. I saw the new moon (of Ramadan) on Friday. I then came back to Medina at the end of the month. Abdullah b. ‘Abbas (Allah be pleased with him) asked me (about the new moon of Ramadan) and said: When did you see it? I said.: We saw it on the night of Friday. He said: (Did) you see it yourself? -I said: Yes, and the people also saw it and they observed fast and Mu’awiya also observed fast, whereupon he said: But we saw it on Saturday night. So we would continue to observe fast till we complete thirty (lasts) or we see it (the new moon of Shawwal). I said: Is the sighting of the moon by Mu’awiya not valid for you? He said: No; this is how the Messenger of Allah (may peace be upon him) has commanded us. Yahya b. Yahya was in doubt (whether the word used in the narration by Kuraib) was Naktafi or Taktafi.

  எனவே இவை போன்ற குர்ஆன் ஹதீஸ்களின் வழிகாட்டுதல்களை மறந்துவிட்டு நோன்புபற்றி முடிவெடுக்க மக்களைத் துான்ட வேன்டாம்.

  • Hijri committee says:

   இந்த ஹிஜ்ரி கலண்டர் பின்வரும் குர்ஆன் மற்றும் நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸ்களின் சரியான மொழிபெயர்ப்புகளின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டது. எனவே இதனை முழுமையாக முதலில் படியுங்கள். யாரையும் இதனை கண்மூடித்தனமாக பின்பற்ற சொல்லவில்லை.

   இது தொடர்பான ஏராளமான கட்டுரைகள் இங்கே பதியப்பட்டுள்ளன. அனைத்தையும் திறந்த மனதோடும் உலமாக்களின் விளக்கங்களோடும். தயவு செய்து படியுங்கள்

   குர்ஆனில் இருந்து பிறைகள் தொடர்பான வாசனைகள் கீழே தரப்பட்டுள்ளன

   2:189 – பிறைகளின் படித்தரங்கள் “கலண்டர்” என்று நேரடியாக சொல்கிறது. அது இப்போது நடைமுறையில் இருக்கிறதா?

   ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்கிறது? செய்கிறோமா?

   இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. ஆரோக்கியமாக கலந்துரையாடுவோம். இன்ஷா அல்லாஹ்!

   பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்? நீர் கூறும் அவை மக்களின் தேதிகளுக்காகவும், இன்னும் ஹஜ்ஜுக்காகவும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)

   உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளையை போல் திரும்பிவரும் வரை சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். அல்குர்ஆன் (36:39)

   அவன்தான் சூரியனைச் ஒளியாகவும், சந்திரனை பிரகாசமாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல தங்குமிடங்களை விதியாக்கினான். அல்லாஹ் உண்மை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அறிந்து கொள்ளும் சமூகத்திற்காக அத்தாட்சிகளை விவரிக்கின்றான். அல்குர்ஆன் (10:5)

   இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் – ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் – மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம். அல்குர்ஆன் (17:12)

   நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் (9:36)

   (போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் (9:37)

Leave a Reply to Eng. AMR Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All