Puttalam Online
historical-notes

புதையல் 8 : ரமழான் இரவுகளிலே… – “உட்டோ கண்ணா” வின் ” பாவா உட்டோ உட்டோ”

  • 20 June 2015
  • 1,577 views

ரமழான் இரவுகளிலே…

1925 – 1935 க்கு இடைப்பட்ட காலங்களிலே ரமழான் இரவுகளிலே சாமத்திலே புத்தளத்துக்  குடியிருப்பின் வீதிகளிலே ஓர் ஒலி எழும்பும். அந்த ஒலி மக்களை  சஹர் உணவுக்காக எழுப்பும் நோக்குடன் எழுப்பப்படும்.

Harican

Harican

இந்த ஒலியை எழுப்பியவர் ஒரு மூதாட்டி. பெயர் தெரியவில்லை. “பட்டாணி மனுஷி” என்று சொல்வார்கள். இவர் வட இந்தியாவிலிருந்து வந்தவராயிருக்கலாம்.

தெருக்களிலே விளக்கே இல்லாத இருள் நிறைந்த இரவிலே ஒரு கையிலே “ஹரிக்கேன்” விளக்கும், மறு கையிலே கோலும் கொண்டு செல்லும் அவர், எழுப்பும் ஒலி அப் பிரதேசத்திலுள்ள அனைவரையும் எழுப்பிவிடும்.

அவர் கூறும் “பைத்து” போன்ற தொடரின் இறுதியிலே வரும் ” பாவா உட்டோ உட்டோ” என்ற தொடரை உச்சஸ்தாயில் ஒலி  எழுப்புவார். எனவே அவரை அனைவரும் “உட்டோ கண்ணா” என்று செல்லமாக அழைப்பார்கள்.

Abdur Raheem Moulavi

Abdur Raheem Moulavi

அவர் பாடும் அத் தொடரை மனனம் செய்து  நீண்ட காலம் நினைவில் வைத்திருந்த ஒருவர் மர்ஹூம் மெளலவி T அப்துல் ரஹீம் அவர்களாவார். அவர் 14.04.1983 வியாழன் அன்று  காலை ஆசிரியர் மர்ஹூம் AMM ஹனீபா அவர்களுக்கு  அப்பாடலை (பைத்து)  தந்து உதவினார்.

 அது பின்வருமாறு:
ஓறான நாஸல் நபீ பரவ
         ஹபீபே அல்லாஹ் கானா
தூரே ஸபர்மா ஸந்தே பந்தே
          தூரே மலாயிகே சுன்னத்தை சோர்
 
ஸால்பர்  ஸால ஹயாத்
          ரோஸே நமாஸ்
மாஹே பாப ஹயாத்
பாவா உட்டோ உட்டோ

இவருக்குப் பின்னர் பக்கீர்கள் ரபான் (கொட்டு ) அடித்து பைத்து பாடிச் செல்வதன் மூலம் சஹருக்கு மக்களை  எழுப்பும் பணியை மேற்கொள்கின்றனர்.

Bawaa 2Baawaa 1

புத்தளம் பெரிய பள்ளிவாசல் கட்டப்பட்ட பின்னர் பள்ளியில் உள்ள மணிக்கூட்டில் இலிருந்து இரவு 3 மணிக்கு அலாரம் எழுப்பும் நடைமுறையும் இருந்தது.

Graand Mosque Clock

Graand Mosque Clock

(ஆசிரியர் மர்ஹூம் AMM ஹனீபா அவர்களின் குறிப்புக்களைத் தழுவி எழுதப்பட்டது)

புதையல்கள் தோண்டப்படும் . . .

AMM Haniffa

Mrhoom AMM Haniffa


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All