Puttalam Online
kids

இதுவும் சிறுத்தைத்தான்

  • 1 October 2015
  • 467 views

தாகத்துக்காக நீர் தேடி அலைந்து கொண்டிருந்த சிறுத்தையொன்றின் தலை, எதேற்சையாக பானையொன்றுக்குள் மாட்டிக்கொண்ட  சம்பவம், ராஜஸ்தான், ராஜ்சமுந்த் எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இராஜஸ்தானில் அமைந்துள்ள சர்துல் கேதா எனும் கிராமப்பகுதியிலேயே இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இந்த சிறுத்தையின் தலை, சுமார் 3 மணித்தியாலங்களாக பானைக்குள் மாட்டிக்கொண்டிருந்ததாகவும் குறித்த பகுதியின் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, சம்பவ இடத்துக்கு வருகை தந்த பலர், புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்துக்கொண்டு விநோதமடைந்ததாக, அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

99

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All