Puttalam Online
regional-news

புத்தளத்தில் கனுதெனு வர்த்தகப்பத்திரிகை வெளியீட்டு வைக்கப்பட்டது

  • 19 November 2015
  • 975 views

கொள்வனவாளரையும் விற்பனையாளரையும் ஒன்றிணைக்கும் கனுதெனு வர்த்தகப்பத்திரிகை புத்தளம் நகரில் அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

“உங்களிடம் விற்பனை செய்யக்கூடிய பல பொருட்களும் சேவைகளும் இருக்கும். அதேநேரம் உங்களுக்கு ஒரு பொருளோ சேவையோ பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். இந்த இரண்டு பிரிவினரையும் சந்திக்கச் செய்யும் தளமாக இந்த கனுதெனு பத்திரிகை இருக்கும்” என இதன் வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்பத்திரிகை  வெளிவரும் எனவும் மேலும் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு தொழில், வியாபார துறைகளைச் சேர்ந்தவர்கள் கனுதெனு பத்திரிகை மற்றும் இணைய வழி வெளியீடுகளின் பணியை பாராட்டியதுடன் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

WAK

ganudenu 1 ganudenu 2 ganudenu 3 ganudenu 4 ganudenu 5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All