Puttalam Online
kids

அன்னை தெரசா

  • 23 November 2015
  • 510 views

சமூக சேவை என்றதுமே நன் மனதில் உதிப்பவர் அன்னை தெரசா, ஆதரவற்ற மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.

இந்த உலகத்தையே தன் குடும்பமாக பாவித்து தெருவோரத்தில், கவனிப்பாரின்றி கிடந்த மக்களுக்காக சேவை செய்தவர் என்றால் அது அன்னை தெரசாவை தவிர வேறு யாரால் முடியும்.

1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 தேதி, அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசாவிற்கு பெற்றோர் இட்ட பெயர் “ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ”.

தன்னுடைய பதினெட்டு வயதில் “லொரேட்டோ சகோதரிகளின் சபையில்” மறைப்பணியாளராகத் தன்னை இணைத்துக் கொண்டவர், ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், எய்ட்ஸ், தொழுநோயாளிகள், காச நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னுடைய இறுதி மூச்சு உள்ளவரை உழைத்தார்.

1970-களில் அன்னை தெரசாவின் சேவையை இந்தியா அறிந்திருந்தாலும், உலகம் முழுவதும் தெரிவதற்கு காரணமாக இருந்தது மேல்கம் முக்கெரிட்ஜ்ன் “Something Beautiful For God” என்ற ஆவணப்படம் தான். இந்திய குடியுரிமை பெற்ற இவருக்கு, இவரது சேவைக்காக இந்திய அரசு “பாரத ரத்னா” விருது வழங்கி கௌரவப்படுத்தியது.

1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு பரிசாக கொடுக்கப்பட்ட தொகை முழுதையும், ஏழைகளுக்கே செலவிட்டார்.

ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லை, ஜாதி மத பேதமில்லை, நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவனையும் சக மனிதனாய் நினைத்து எல்லோர் இடத்திலும் அன்பு செலுத்தியதாலேயே இன்றளவும் அன்பின் மறு உருவமாய் போற்றப்படுகிறார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All