Puttalam Online
business

வெளிப்புறங்களின் உலகு

  • 22 December 2015
  • 674 views

தெற்காசியாவின் முன்னணி மழைக்கால  உடைகளுக்கான வர்த்தக நாமமான ரெயின்கோ, ‘வெளிப்புறங்களின் உலகு’ எனும் எண்ணக்கருவிலான அதன் முன்னணி விற்பனை நிலையத்தினை இல 185, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 04 எனும் முகவரியில் ஆரம்பித்து வைத்துள்ளது.

இவ்விற்பனை நிலையத்தில் அதன் மிகப் பிந்திய வெளிப்புற தளபாட மற்றும் இதர வெளிப்புற உற்பத்திகளின் வரிசை உள்ளடக்கப்பட்டிருக்கும்.  இவ்விற்பனை நிலையத்தினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் SLIAயின் துணைத்தலைவர் கட்டடக் கலைஞர் பேர்னாட் கோமஸ் பிரதம அதியாகக் கலந்து கொண்டார். அதேவேளை, நாட்டின் முன்னணி வடிவமைப்பாளர்கள், உள்ளக வடிவமைப்பாளர்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் உயர் மட்ட சமூக நிறுவனங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ரெயின்கோவின் முகாமைத்துவப் பணிப்பாளர் பஸால் பௌஸ், ‘வெளிப்புறங்களின் உலகானது வெளிப்புறங்களின் வாழ்க்கை முறையினை அனுபவிப்பதற் கேற்றவாறான நவீன தளபாடங்கள் மற்றும் இதர பொருட்களின் வரிசையினைக் கொண்டது. அதிக ஈரப்பதன், வெப்பம் மற்றும் மழை போன்ற காலநிலைகளுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன’ என்றார்.   ‘வெளிப்புறங்களின் உலகு’ விற்பனை நிலையத்தி;ல், அனைத்து தளபாடங்கள் மற்றும் துணிவகைகள் விற்பனைக்காகவும் உற்பத்தி தேவைகளுக்காகவும் நேரடியாக ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம், இந்தோனேஷியா, துருக்கி மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில்  இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

விற்பனைக்கான பொருட்களில் சூரிய சாய்வு நாற்காலிகள், கடற்கரை நிழற்குடைகள், மிதக்கும் குடைகள், தேக்கு தளபாடங்கள், பிளாஸ்திக் தளபாடங்கள், செயற்கை பிரம்புத் தளபாடங்கள், உருக்கு மற்றும் அலுமீனியம் தளபாடங்கள், துணியினாலான தளபாடங்கள், செயற்கை புல்வகைகள், வலையாலான ஊஞ்சல்கள், குஷன்கள், வெளிப்புற விளக்குகள், முகாமிடலுக்கான கருவிகள், பசுமைச் சுவர்கள் என்பன அடங்கும். ‘எங்கள் உற்பத்திகள் வீடுகள், ஹோட்டல்கள், ரிசோர்ட்டுகள், வில்லாக்கள், உணவகங்கள், வீட்டுமனைத் தொகுதிகள் என்பனவற்றுக்கு கச்சிதமாகப் பொருந்துகின்ற அதேவேளை, நாட்டின் அநேக கட்டடக் கலைஞர்கள், பொறியியலாளரகள், உள்ளக வடிவமைப்பாளர்கள் ஆகியோர் தங்களது அனேக தேவைப்பாடுகள் எங்களிடம் இருப்பதை அல்லது எங்களால் இறக்குமதி செய்யப்படுவதை இனம் கண்டு எங்களிடம் வருவர் என்றார் பௌஸ்.

அதனை இரசனைப் பாங்குடன் இரசிக்க விரும்புவோருக்கு ஏற்ற அதிநவீன உற்பத்திப்பொருட்களின் வரிசையினை நாங்கள் வழங்குகின்றோம். செயற்கைப் பிரம்பு மற்றும் தேக்கு என்பனவற்றாலான உள்ளுர் தேவைப்பாடுகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான உற்பத்திகள் எங்களுடையவை’ என்றார் செயற்பாட்டுப் பொறுப்பாளர் ரஸீன் மஹ்ரூப்.  ‘வெளிப்புறங்களின் உலகு’ எனும் தொனிப்பாருளில் பயிற்றப்பட்ட விற்பனைக் குழு, மாலைதீவு, சீஷெல்ஸ், மொரீஷஸ், மற்றும் மத்திய கிழக்கு ஆகிய நாடுகளில் ஹோட்டல்கள், ரிசோர்ட்டுகள்,   உணவகங்கள் மற்றும் வீட்டுமனைத் தொகுதிகள் என்பனவற்றில் தங்களது கவனத்தை குவிமையப்படுத்தியுள்ளது. இங்குள்ள எந்தவொரு சிறிய மற்றும் பாரிய திட்டங்களுக்கும் ஏற்ற வகையிலான தளபாடங்களை வடிவமைப்பதோடு, எங்கள் நிபுணர் குழு வாடிக்கையாளர்களுக்கான வெளிப்புற வெளியையும் திட்டமிடுகின்றது.  ‘வெளிப்புறங்களின் உலகு’ எனும் எண்ணக்கருவுக்கு வலுச்சேர்ககும் வகையில் எங்களிடம் 300 க்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஆளணியுடன், அதி நவீன உபகரணங்கள் மற்றும் எந்த இடத்துக்கும் எந்தக் காலநிலைக்கும் பொருந்தக் கூடியவகையிலான முலாமிடல்களை மேற்கொள்ளக்கூடிய உபகரணங்கள் என்பனவும் காணப்படுகி;னறன. அதனால் எந்தவொரு பெரிய திட்டத்தினைiயும் எங்களால் வெற்றிகரமாகப் பூர்த்திசெய்ய முடியும். செயற்கை பிரம்பு மற்றும் தேக்கு என்பனவற்றிலான தனித்துவமான வெவ்வேறுபட்ட வகையிலான வடிவமைப்புகளை எங்களால் செய்ய முடிந்திருக்கின்றது’ என்றார் மஹ்ரூப்.  ‘வெளிப்புறங்களின் உலகு’ ஆனது  சிறந்த தரத்துக்கான அதீத அர்ப்பணிப்பினைக் கொண்டது. போட்டிகளுக்கப்பால் இத்தனித்துவத்தன்மையே அதனை சிறந்த வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றாக நிலைநிறுத்தியிருக்கின்றது. இதனை நாங்கள் மிகவும் கடுமையான தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளின் மூலமே  எய்தியிருக்கின்றோம். கொள்முதல் உற்பத்தி, களஞ்சியம், விநியோகம் என்பனவற்றில் தொடர்ச்சியான கண்காணிப்புகள், வாடிக்கையாளர்களுக்கான குறித்த காலத்துக்கான உத்தரவாதம், என்பனவற்றின் மூலம் நாங்கள் தரத்தினை ஊர்ஜிதம் செய்கின்றோம். உத்தரவாத காலப்பகுதியில் அவ்வுற்பத்திப்பொருள் பழுதானால் அதனை மாற்றீடு செய்கின்றோம் அல்லது திருத்திக் கொடுக்கின்றோம்.’ என்றார் பௌஸ். வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீட்டுச்  சொந்தக்கார்கள் ஆகியோர் தங்களது நவீன போக்குக்கமைவான, தேவைகளுக்கு ஏற்ப  பரந்த வீச்சுக்கொண்ட உற்பத்திகளில் தமக்குத் தேவையானவற்றைத் தெரிவுசெய்யலாம். அவ்வாறான தெரிவுகளை’ வெளிப்புறங்களின் உலகு’ காட்சியறையிலும் ரெயின்கோவின் ஏனைய காட்சியறைகளிலும் மேற்கொள்ளலாம்.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All