Puttalam Online
kids

கந்தனும் வேலனும் – “நமக்கு நல்ல காலம்தான்”

  • 11 January 2016
  • 480 views

கந்தனும் வேலனும் நண்பர்கள். இருவரும் அடுத்த ஊருக்கு நடந்து சென்றார்கள்.வழியில் ஒரு பணப்பை கிடந்தது. அதில் பணம் நிறைய இருந்தது. கந்தன் அதை எடுத்துத் தன் பையில் வைத்துக் கொண்டான்.

“நமக்கு நல்ல காலம்தான்” என்றான் வேலன்.

“நமக்கு என்று சொல்லாதே உனக்கு என்று சொல் இரண்டும் வௌ;வேறு சொற்கள்” என்று திருத்தினான் கந்தன்.

வேலன் பதில் சொல்லவில்லை. இருவரும் நடந்து கொண்டிருந்தனர். திடீரென்று வழிப்பறித் திருடர்கள் வந்தனர். அவர்கள் கந்தனையும் வேலனையும் நிறுத்தினர். ” நாம் தொலைந்தோம்”என்றான் கந்தன்.

“நாம் என்று சொல்லாதே நான் என்று சொல். இரண்டும் வௌ;வேறு சொற்கள்” என்று சொல்லிக்கொண்டே ஓட்டம் பிடித்தான் வேலன். கந்தன் அச்சத்தினால் நடுங்கினான். தான் கண்டு எடுத்த பணப்பையையும் தான் வைத்திருந்த பணத்தையும் திருடர்களிடம் கொடுத்தான்.

“செல்வம் உள்ளபோது தன்னைப் பற்றி மட்டும் நினைப்பவனுக்கு துன்பம் வந்தபோது நண்பர்கள் இருக்க மாட்டார்கள்” என்ற உண்மையை உணர்ந்தான் கந்தன்.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All