Puttalam Online
kids

பன்டா கரடியும் பனிப்பொழிவும்

  • 26 January 2016
  • 664 views

கடுமையான பனிப்பொழிவு காரணமாக, அமெரிக்காவின் பல மாகாணங்களில் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ள போதிலும், பல விலங்குகள், இவ்வானிலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளன. வொஷிங்டனிலுள்ள தேசிய மிருகக்காட்சிச் சாலை, அங்குள்ள விலங்குகள், இந்த வானிலையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் புகைப்படங்களையும், காணொளியையும் வெளியிட்டுள்ளது.

இதில், பன்டா கரடியொன்று, பனியில் உருண்டு புரண்டு மகிழ்ச்சியுடன் விளையாடும் காணொளி, இணையத்தில் அதிக வரவேற்பைப் பெற்றது. பன்டா கரடி தவிர, சிவப்புப் பன்டா, சிவப்பு வால் குரங்குகள், காட்டெருது, யானைகள், கடல் நாய் ஆகியன, பனியில் விளையாடும் புகைப்படங்களையும், அந்த மிருகக்காட்சிச் சாலை வெளியிட்டுள்ளது.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All