Puttalam Online
kids

சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு வாழ்க்கைப் பயணம் அமைய வேண்டும்

  • 25 February 2016
  • 1,102 views

சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு வாழ்க்கைப் பயணம் அமைய வேண்டும். இலட்சியம் அற்ற வாழ்வு ஆகாயத்தில் தூவப்பட்ட விதைக்கு ஒப்பானது. சாதிக்க வேண்டும் என்ற இலக்குடையவர்கள் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினை, தாம் சாதிக்க விரும்பும் இலக்கை எப்படி, எங்கு ஆரம்பிப்பது? எவ்வாறு நகர்த்திச் செல்வது? என்பவைகளாகும்.

இது விடயத்தில் சில பொறுப்பற்ற இளைஞர்கள் திடீரென எடுக்கின்ற பலவீனமான முடிவுகளால் பாதக விளைவுகளை சந்திக்கின்றனர். எதிர்காத் திட்டங்களைக் கட்டி எழுப்ப முடியாது பல தோல்விகளைச் சந்திக்கின்றனர். இதிலிருந்து விடுபட்டு நீங்கள் உண்மையாகவே அடைய விரும்புகின்ற இலட்சியத்தை வெற்றி கொள்ள இதோ முத்தான பத்துப் படிமுறைகள்.

1. இலட்சியத்தைத் தெளிவாக்கிக் கொள்ளல்

நீங்கள் அடைய விரும்பும் குறிக்கோளை பெரிதாகவும் அடிக்கடியும் கனவு காணுங்கள். அக்குறிக்கோளை அடையத் தடையாக இருக்கக்கூடிய காரணிகளை இனங் காணுங்கள். இக்குறிக்கோளை அடைவதால் பெறக்கூடிய திறன்கள் மற்றும் குறிக்கோளை அடையும் பாதையில் நீங்கள் சந்திக்க விரும்பும் மனிதர்கள் என மனதிற்கினிய அம்சங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

2. திட்டமிடல்
உங்களுடைய குறிக்கோளை அடைவதற்கான வழிமுறை என்ன? அது எவ்வளவு செலவை ஏற்படுத்தும்? அக்குறிக்கோளை அடைவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? இவ்விடயத்தில் உங்களுக்கு உதவி புரியக் கூடியவர்கள் யார்? இப்பாதையில் நேரிடும் சவால்களுக்கு முகம் கொடுப்பது எப்படி? தடைகளை முறியடிப்பது எவ்வாறு? போன்ற வினாக்களுக்கு விடைகாணும் வகையில் ஒரு திட்டத்தை உருவாக்கிக் கொள்வது முக்கியமான விடயமாகும்.

3. பிறரின் ஆலோசனையைப் பெறல்
நவீன தொடர்பு சாதனங்கள் இராட்சத வளர்ச்சி கண்ட ஒரு புது யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறNhம். உங்களுடைய குறிக்கோளை அடைவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அனுபவங்களையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு உலகின் எப்பாகத்தில் இருக்கும் ஒருவரையும் தொடர்பு கொள்ள நீங்கள் தொலைபேசி, தொலைநகல், சிதுழிஷ்யி அல்லது ணூஐமிஐமி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களை தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆகவே உங்களுடைய நோக்கத்தை எட்ட துறைசார் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

4. பிறரிடம் எடுத்துக் கூறல்
உங்களது குறிக்கோளை, திட்டத்தை, கனவை அடையும் பாதையில் பிறரின் வழிகாட்டலையும் உதவியையும் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளும் வகையில் தகுதியானவர்களிடம் உங்களுடைய குறிக்கோள்களை முன்வைப்பது முக்கியமான அம்சமாகும். உங்களது கனவை, கற்பனையை, குறிக்கோளை பிறரிடம் சொல்ல எந்தவொரு பிரதிநிதியையும் நியமிக்க வேண்டாம்.
நீங்களாகவே முன்வைக்கும்போது உங்களுடைய திட்டத்தில் உங்களுக்கிருக்கும் பற்றுறுதி மேலும் வலுப்பெறுகிறது. ஆகவே நீங்கள் எதை நோக்கிப் பயணிக்கிறீர்கள்? எதை அடைய விரும்புகிறீர்கள்? என்று மட்டுமல்ல எதிர்காலத்தில் நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்ற விடயங்களையும் பிறருக்குக் கூறுங்கள். விளைவாக உங்களுடைய வெற்றி நோக்கிய பயணப் பாதை, நெடுகிலும் உங்களுக்கு உதவி செய்யக் கூடிய மனிதர்களைக் கண்டு கொள்வீர்கள்.

5. செயற்படுத்தல்
உங்களுடைய எதிர்காலத் திட்டம் எதுவாக இருந்தாலும் அதை அடைவதற்கான முதற்படி இன்றே ஆரம்பித்துச் செயற்படுவதாகும். இது விடயத்தில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் உங்களுடைய திட்டத்தைச் செயற்படுத்தும் விடயத்தில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தொலைபேசி வாயிலாகவும் கடிதங்கள் மூலமாகவும் ஏனைய தொலைத் தொடர்பு சாதனங்கள் ஊடாகவும் தொடர்புகளை பெற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த ஆலோசகர்களைக் கண்டு கொள்வீர்கள். அத்தகையவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது தொடர்பான நூல்களை வாசியுங்கள்.
“நல்ல ஆரம்பம் என்பது அவ்வேலையின் அரைவாசி முடிவடைந்ததற்குச் சமமாகும்” என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.

6. காலத்தை நிர்ணயித்தல்
உங்களுடைய குறிக்கோள் சிறியதோ பெரியதோ நீண்டகால அல்லது குறுகிய கால இடைவெளியைக் கொண்டதோ எதுவாயினும் அதை அடைவதற்கு ஒரு கால வரையறையை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இலக்கை அக்கால வரையறைக்குள் முடிப்பதற்கு எப்போதும் முயற்சியுங்கள்.

7. பராக்காக்கும் விடயங்களை விட்டும் தவிர்ந்திருத்தல்
இது ஒரு கஷ்டமான காரியமாகும். வரலாற்றில் வெற்றியைத் தமதாக்கிக் கொண்டவர்களை, கொண்டிருக்கின்றவர்களை வாழ்க்கையில் பராக்கை ஏற்படுத்துகின்ற விடயங்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை.

8. அறிவார்ந்த சேமிப்பு
இவ்வுலக வாழ்க்கையில் வெற்றியைத் தட்டிக் கொள்கின்ற மனிதர்கள் அத்தகைய வெற்றி என்பது நேரம், பணம், சக்தி போன்றவற்றை முதலீடு செய்ய வேண்டியதன் தேவையின்பால் உள்ளது என்பதை உணர்கின்றனர். இதனால் சமூகத்தில் பெறுமதிமிக்க மனிதர்களாக உருப் பெறுகின்றனர்.
உங்களுடைய கனவு எதுவாக இருப்பினும் அது நேரம், காலம், பணம், சக்தி மற்றும் தியாகம், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு போன்ற இன்னோரன்ன விடயங்களையும் முதலீடு செய்ய வேண்டிய தேவையுடையதாக இருக்கும். எனவே அவற்றை முதலீடு செய்யுங்கள்.

9. நெகிழ்ந்து கொடுத்தல்
உங்களுடைய குறிக்கோளின் வெற்றி என்பது பல நெகிழ்வுகளை வேண்டி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
நீங்கள் தயார் செய்த நேர அட்டவணைகள், முன்னாயத்தங்கள், பொருளாதார விவகாரங்கள் அல்லது உங்களுடைய சக்தி எதுவாக இருப்பினும் வெற்றியை நோக்கிய பாதையில் இவற்றில் ஏற்படக்கூடிய சிக்கல், பிரச்சினைகளுக்கேற்ப நெகிழ்ந்து செல்ல வேண்டிய தேவை ஏற்படும்.
எனவே, உங்களுடைய குறிக்கோளை நோக்கிய பாதையில் இவற்றைக் கருத்திற் கொண்டு செயற்படுவது அவசியம்.

10. நம்பகரமான ஒரு வழிகாட்டலை எடுத்துக் கொள்ளல்
உண்மையில் வெற்றியை நிதர்சனமாக்கிக் கொண்ட ஒவ்வொரு மனிதனும் பொதுவாக ஒரு வழிகாட்டியைக் கொண்டிருக்கின்றான். மிகச் சொற்பமானவர்களே சுயமாக வெற்றி பெற்றிருக்கின்றனர்.

நாம் அனைவரும் நம்பகமான, ஊக்கப்படுத்தக்கூடிய, சவால்களை முறியடிக்கும் பாங்கினை விளக்கக்கூடிய முன்னுதாரணம் மிக்கவர்களை நமது வழிகாட்டியாக எடுத்துக் கொள்வது முக்கியமானதாகும்.

வெற்றி என்பது ஒரு விபத்து அல்ல எதிர்பாராத விதமாக நிகழ்வதற்கு. அது என்றும் எங்களுடைய சிறந்த விடாமுயற்சியின் பெறுபேறாகவே அமைகிறது. அது நேரம், சக்தி, காத்திரமான சிந்தனை மற்றும் கடின உழைப்பின் பெறுபேறாகும். திட்டமிடல், செயற்படுத்தல், தவறிழைத்தல், அவற்றிலிருந்து பாடம் பெறல், மீண்டும் மீண்டும் முயற்சித்தல் என்பவற்றினதும் பெறுபேறாகும்.

மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில் பல புதிய சாதனைகளைத் தட்டிக் கொள்ள திட்டமிட்டுச் செயற்பட முயலுங்கள். வெற்றி முயற்சியாளர்களுக்கு மாத்திரமே என்பதை மறந்து விடாதீர்கள்.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All