Puttalam Online
calendar

பூரண சூரிய கிரகணமும் பிறை அவதானமும்

  • 8 March 2016
  • 1,063 views

(அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் கவனத்திற்கு  அனுப்பிய மடல்)

ஹிஜ்ரி கமிட்டி கிளை
புத்தளம்
29 ஜ.அவ்வல் 1437
08.03.2016

கெளரவ பிறை குழு செயலாளர்
பிரைக்குழு
அகில இலங்கை ஜமியத்துல் உலமா
கொழும்பு

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்

நிகழும் 1437ம் ஹிஜ்ரி ஆண்டின் ஜ அவ்வல் மாதம் இன்ஷா அல்லாஹ் நாளை 09.03.2016 புதன் அன்று 30 நாட்களால் பூர்த்தியடையும். 09.03.2016 அன்று காலையில் பூரண சூரிய கிரகணம் ஏற்படுமென்று வானவியல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜமியதுல் உலமா  இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் அறிவிக்கும்  பிறை கணக்குப்படி 09.03.2016 அன்று பிறை 28 ஆகும்.

அமாவாசை ஏற்படும் நாளில் புவி மைய சங்கமம் நேர்கோட்டில் அமையும் போது சூரிய கிரகணம் ஏற்படும். இது நிரூபணமான பிரபஞ்ச நியதியாகும்.

தங்கள் வானொலில் அறிவிக்கும் பிறை கணக்கு இதற்கு பொருந்தவில்லையே! அது ஏன்?

தாங்கள் அமைப்பு மாதாந்தம் பிறைகளை அறிவிக்க கையாளும் வழி முறையில் கோளாறு உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. தாங்கள் பின்பற்றும் வழிமுறையை இனியாவது மீள்பரி சீலனை செய்து மக்களுக்கு  சரியான திகதியை (பிறை) அறிவிக்க முன் வருவீர்களா?

 

நன்றி.

வஸ்ஸலாம்

இப்றாஹிம் நிசார்
செயலாளர்
ஹிஜ்ரி கமிட்டி கிளை
புத்தளம்

05-j-awwal-1437 06-j-akhir-1437


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All