Puttalam Online
regional-news

IMARA Software Solution (Pvt) Limited இன் மற்றுமோர் மைற்கல்

20160328_105243

புத்தளத்தில் கடந்த  07 வருடங்களாக இயங்கி வரும்  Imara Software Solution (Pvt) Limited இன் பெண்களுக்கான தனியான Software Development Centre இன்று திங்கட்கிழமை (28.03.2016)  காலை 10:00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட்டது.

இந்நிகழ்வில் Imara நிறுவனத்தின் ஸ்தாபக உறுப்பினரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான M.F. Rinsad Ahmed Bsc, (Eng) , MBA மற்றும் Imara நிறுவனத்தின் சக ஊழியர்களும், விஷேட விருந்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது கருத்து கூறிய IMARA வின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான Rinsad Ahmed

இறைவனின் உதவியால் Imara நிறுவனம் கடந்த 07  வருடங்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.  இதனூடாக சுமார் 50  IT Professionals இணை உருவாக்கியுள்ளது,  இவர்கள் இன்று Imara விலும், வேறு நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும், சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்த வெற்றிகளின் பின்னால் பலரின் உழைப்பையும், உதவியையும், தியாகங்களையும் நினைவூட்டினார். விசேடமாக IMARA வில் பணி புரியும் சக ஊழியர்கள், இந்த நிறுவனத்தின் ஸ்தாபக உறுப்பினரும் பணிப்பாலருமான M.S.A. Sharoofie மற்றும் அவரது குடும்பம் ஆகியோர் இதில் பிரதானமானவர்கள் என குறிப்பிட்டார்.

அவ்வாறான ஒரு உழைப்பை எமது புதிய பெண்கள் பிரிவில் இருந்து எதிர்பார்பதாகவும், அதனூடாக பெண்களிள் இருந்து இன்னும் அதிகமான IT Professionals உருவாக்கி இந்த சமூகத்தை  நன்மையடைய செய்யாலாம் என நம்பிக்கை வெளியிட்டார்.

விஷேட விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிய புத்தளத்தின் தனித்துவமான தொழில் அதிபரும் மற்றும் Cake Centre நிருவனத்தின் உரிமையாளருமான சகோதரர் ஹம்சா, Imara வின் வளர்ச்சியை வெகுவாக பாராட்டியதுடன். ஒரு நிறுவனம் வேகமாகவும்  ஆரோக்கியமாகவும் வளர்வதற்கான சிறந்த ஆலோசனைகளை வழங்கினார்.

20160328_101424
20160328_103405

20160328_101616

20160328_105243

20160328_103414


2 thoughts on “IMARA Software Solution (Pvt) Limited இன் மற்றுமோர் மைற்கல்

  1. Mohamed minhaj says:

    Masha allah ட்
    உங்கள் நிறுவனம் மேலும் முன்னேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    உங்களுடைய நிறுவனத்தில் இணைவதற்கு நான் ஆசைப்படுகிறேன்.
    இணைந்து கொள்ள முடியுமா?
    எனது வாட்ஸ்அப் இலக்கம் 0754127633

  2. H.N.M.M.Yahyakhan says:

    உங்களுடைய முயற்சி திறன்பட செயற்பட இறைவனை பிரர்த்திக்கின்ரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All