Puttalam Online
current

ஏப்ரல் 02 – இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

  • 2 April 2016
  • 752 views

Autism-copyஇன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாகும் (ஏப்ரல் 02). இற்றைக்கு சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னரே ‘ஒட்டிசம்’ பற்றி உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் பிரகடனம் செய்யப்பட்டது.

பிள்ளைகளின் மூளை வளர்ச்சியில் காணப்படும் அசாதாரணத் தன்மை மற்றும் பின்னடைவு காரணமாக ஏற்படும் ஒருவகை நோய் நிலைமையே “ஒட்டிசம்” என அழைக்கப்படுகின்றது.

சிறு பிள்ளைகள் ஒட்டிசம் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகும் தன்மை உலகில் அதிகரித்து வருவதாக கொழும்பு – சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் மனநல விசேட நிபுணரான டொக்டர் சுவர்ணா விஜேதுங்க குறிப்பிட்டார்.

இலங்கையைப் பொறுத்தவரை 2009 ஆம் ஆண்டிலேயே சிறுவர்களிடையே காணப்படும் ‘ஒட்டிசம்’ பற்றி முதன் முதலில் கற்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி இலங்கையில் பிறக்கும் நூறு குழந்தைகளில் ஒன்று ஒட்டிசத்திற்கு உள்ளாவது கண்டறியப்பட்டது.

இலங்கையில் வருடாந்தம் பிறக்கும் 03 இலட்சத்து 75 ஆயிரம் சிசுக்களில் 3 ஆயிரத்து 750 சிசுக்கள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் 93 பிள்ளைகளில் ஒருவர் ஒட்டிசம் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அமைச்சு நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட கணக்கெடுப்புகளின்படி 05 வயதுக்கு குறைந்த சுமார் 18 ஆயிரத்து 750 ஆட்டிசம் சிறுவர்கள் இலங்கையில் உள்னர். ஆனால் 05 வயதுக்கு மேற்பட்ட ‘ஒட்டிசம்’ நபர்கள் பற்றிய எந்தவொரு கணக்கெடுப்பும் இல்லாதது மிகவும் துரதிஷ்டவசமானதேயாகும்.

மேலும் 2020 இல் ‘ஒட்டிசம்’ நபர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஒட்டிசம் ஏற்படுவதற்கான காரணம் இதுவரை சரியாகக் கண்டறியப்படவில்லை என்றபோதிலும், மரபணு மற்றும் சூழலில் ஏற்படும் உள்ளக செயற்பாடுகள் காரணமாக இந்த நோய்த் தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

உரிய சிகிச்சைகளின்றி இந்த நோயினால் பீடிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை சமூகமயமாக்குவதில் பெற்றோருக்கு பாரிய பங்கிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை உச்சத்தில் ஏற்றிவைப்போம்” என்பதை தொனிப்பொருளாகக்கொண்டு, அந்த குறைப்பாட்டை அறிந்து ஒட்டிசம் நோய் குறித்து தெளிவுபடுத்துவதற்காக சர்வதேச தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.engalthesam.lk


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All