Puttalam Online
regional-news

லுலு சுப்பர் மார்க்கட் புத்தம் புதிய மோட்டார் சைக்கிளை பரிசாக வழங்கியது

  • 26 April 2016
  • 6,288 views

ரூஸி சனூன்  புத்தளம்

புத்தளம் பஸ் தரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள லுலு சுப்பர் மார்க்கட் அதன் வாடிக்கையாளர்களுக்கு பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்த பெறுமதி வாய்ந்த புத்தம் புதிய மோட்டார் சைக்கிள் புத்தளம் வான் வீதியில் வதியும் அபாயா சென்டர் உரிமையாளர் எம்.ஏ.எம். அசாருக் என்பவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

வடமேல் மாகாணத்தில் முதலாவது அதி சிறந்த சுப்பர் மார்க்கட்டாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் புத்தளம் லுலு சுப்பர் மார்க்கட்டானது தனது நிறுவனத்தில் ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமாக பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு அதிஷ்டம் மூலமாக பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை பரிசாக வழங்குவதாக அதிரடியாக அறிவித்திருந்தது.

அந்த வெற்றியாளர்களை தெரிவு செய்கின்ற நிகழ்வானது லுலு சுப்பர் மார்க்கட்டுக்கு முன்பாக திங்கட்கிழமை (25) மாலை மிக விமரிசையாக இடம்பெற்றது. பெருந்தொகையான பொது மக்கள் இந்நிகழ்வில் ஆர்வத்தோடு கலந்து கொண்டிருந்தனர்.

லுலு சுப்பர் மார்க்கட்டின் உரிமையாளர் ஏ.என்.ஏ. இனாசின் விழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதன் துணை உரிமையாளர்களான ஏ.என்.ஏ. சிமாக், ஏ.என்.ஏ. இதாப் மற்றும் அதன் முகாமையாளர் எஸ்.ஆர். நஸீர் உள்ளிட்ட அதன் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

பிரதான வெற்றியாளர்களை தெரிவு செய்ய முன்பு அங்கு பார்வையாளர்களாக கலந்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களிடம் சிறிய சிறிய வினாக்கள் தொடுக்கப்பட்டு  பெறுமதியான  பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இலங்கையின் ஆக சிறிய நாணயமாக தற்போதும் கருதப்படும் 25 சதம் ஒன்றினை பார்வையாளர்களிடம் கோரிய போது பஸ் சாரதி ஒருவர் அதனை உடனடியாக காண்பித்து பரிசு ஒன்றினை வென்றேடுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பெறுமதியான மோட்டார் சைக்கிளை தவிர ஏனைய பல பரிசில்களை கல்பிட்டி, ஏத்தாளை, கரைத்தீவு, மாம்புரி, கல்குளம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த வெற்றியாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

பெறுமதியான அந்த மோட்டார் சைக்கிளினை  பெற்றுக்கொண்ட அதிஷ்டசாலியான எம்.ஏ.எம். அசாருக் உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்டு லுலு சுப்பர் மார்க்கட் உரிமையாளர்களால் அந்த மோட்டார் சைக்கிள் அவரிடம் உத்தியோகபூர்வமாக  கையளிக்கப்பட்டது.

IMG-20160425-WA0045 IMG-20160425-WA0046 IMG-20160425-WA0047 IMG-20160425-WA0048 Photo0420 Photo0423 Photo0424 Photo0426 Photo0427 Photo0430 Photo0432 Photo0433 Photo0435 Photo0441 Photo0445 Photo0448


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All