Puttalam Online
other-news

ஹிஜ்ரி 1437 ரமழான் பிறை உங்கள் சிந்தனைக்கு!

  • 4 June 2016
  • 1,204 views

 அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த நாட்டில் பிறைகளை தீர்மானித்து மாத ஆரம்பத்தை அறிவிக்கும் உத்தியோக பூர்வ சபையாகிய அகில இலங்கை ஜம்மியதுல் உலமா எதிர்வரும் 06.06.2016 திங்கள் மாலை பிறை பார்த்து அறிவிக்கும் படி அறிவித்துள்ளது.

நிகழும் ஷஃபான் மாதம் 05.06.2016 ஞாயிறு அன்று 30 நாட்களால் பூர்த்தி அடைகின்றது, எனவே 06.06.2016 பஜ்ரோடு ராமழான் மாதம் ஆரம்பிக்கும். அன்று மாலை வானிலை தெளிவாக இருந்தால் மறையும் ரமழான் முதற் பிறை தென்படும். பிறை கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும். இது இறை நியதி விஞ்ஞான உண்மையும் கூட. நாள் பஜ்ரில் ஆரம்பித்து மறுநாள் பஜ்ரில் முடிவடையும். இது ரசூல் (ஸல்) அவர்கள் காட்டிதந்த வழிமுறை. (அவர்களின் இஃதிகாப் இதற்கு உதாரணம்) அவர்களின் கூற்றுபடி ரமழானின் முதல் நாளை நாம் இழக்க நேரிடும். இது மகத்தான நஷ்டமில்லையா?

தயவு செய்து அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பிறை அறிவிக்கும் பொறுப்பாளர், மற்றும் அவர்களின் செய்திக்கு சார்பாக மிம்பரில் முழங்கும் கதீப்மார் களும் மேற்குறித்த பின்வரும் கேள்விகளுக்கு விடைதந்து தெளிவு படுத்துவார்களா?

அல்லாஹ் அவர்களுக்கு அருள்வானாக.

  1. பிறை எத்திசையில் தோன்றி எத்திசையில் மறையும்?
  2. இஸ்லாதில் நாளின் ஆரம்பம் பஜ்ரிலா? மஃரிபிலா?

 

ஷஃபான், ரமழான் மாதத்திற்கான பிறை நாட்காட்டி இணைக்கப்பட்டுள்ளது,

Sahban -  1437

Sahban – 1437

Ramazaan - 1437

Ramazaan – 1437

 

நன்றி

 

இப்ராகிம் நிசார்

செயலாளர்

ஹிஜ்ரி கொமிட்டி, புத்தளம்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All