Puttalam Online
star-person

வாசிப்பை சளைக்காது தொடரும் “இன்சுன்நகார் டீச்சர்”

  • 21 June 2016
  • 2,085 views

insunnahar

பேரப் பிள்ளைகளைக் கண்டுவிட்டால் மாத்திரமில்லையே வயசு போனாலும் ஆண்கள் எல்லாம் ” அப்பா” மார் தான், பெண்கள் எல்லாம் ” கண்ணா ” மார்தானே. தம் இனிமையான காலங்க‌ளைக் கண்டுவந்துள்ள ”அப்பா” ”கண்ணா” மார் பற்றி எழுதிக் கொண்டு வரும் நமது தொடரில் இன்றைய ” கண்ணா” இவர்தான்.
”படிச்ச கண்ணா” என்ற நான் சொன்னால் கொஞம் ஒரு தினுசாகப் பார்க்க வேண்டாம். நம்ம நல்ல ஊர்லே பிள்ளைகள் கொஞம் எத்தக் குத்தா பேசினா ” படிச்ச பய” , படிச்ச குட்டி“ என்றெல்லாம் சொல்லுவாங்களே அந்த வகை இல்லை. இது படிச்ச கண்ணாவேதான்.

அந்தக் காலத்திலே இப்போதைய சாகிரா ஆரம்பப் பாடசாலை அரசினர் பெண்கள் பாடசாலை. அங்குதான் ப‌ல கண்ணாமார் படித்தார்கள். அந்தக் காலப் பகுதியிலே இந்த கண்ணா படு சுட்டி அந்தக் காலத்து சிறுமிகள் அந்தப் பெண்கள் பாடசாலையில் ஒவ்வொரு வகுப்பா பாஸ் பண்ணியபோது இவர் மட்டும் ஒன்றில் இருந்து மூன்றுக்கு, மூன்றிலிருந்து ஐந்துக்குக்கு , ‌ஐந்தில் இருந்து ஏழுக்கு என்று இரட்டைக் கால் பாய்ச்சலில் பாய்ந்தவர் என்றால் பாரத்தக் கொள்ளுங்களேன்.
இந்த இரட்டைப் பாய்ச்சலுக்கு அப்பால் இன்னுமொரு பெரிய நீளப் பாய்ச்சலையும் பாய்ந்து இருக்கிறார். அதுதான் 1956 ஆம் ஆண்டு அதவது அறுபது வருசங்களுக்கு முன்யும் ஸ்கொலர்சிப் பரீட்சையில் சித்தியடைந்து படிப்பதற்காக அழுத்மக மத்திய கல்லூரிக்குப் போனவர்.

அந்தக் காலத்திலே புத்தளத்தில் இருந்து அழுத்கம போவது என்றால் என்ன அவ்வளவு சாமானியமான காரியமா? இப்போது சொப்பிங் கொம்ளெக்ஸ் அமைந்துள்ள இடத்தில் அந்த நாட்களில் இருந்த பஸ் நிலையத்தில் இருந்து பச்சை நிற பஸ் அதிகாலை 3.00 மணிக்கு கொழும்புக்குப் புரப்படும். அது ஒன்றுதான் பஸ். ஓட்டை உடசல் ரோட்டில் பாய்ந்து பாயந்து போய் கொழும்பை அடைந்து அங்கிருந்து அழுத்தமகவுக்குப் போவது ஒரு சிறு பிள்ளையைப் பொறுத்தவரையில் எவ்வளவு சிரமமாக காரியம்.

G.C.E என்ற பரீட்சை அப்போ இல்லை. அப்போது இருந்தது SSC தான். அது வரை படித்து பின்னர் புத்தளம் வந்து கொஞ்சக் காலம் சாரா நெசவு சாலையில் கைத்தறி இயந்திரத்துடன் போராடி பின்னர் முன்னாள் கல்வி அமைச்சர் பதியுத்தீன் மஹ்மூத் அவரகளால் அறிமுகம் செயப்பட்ட “Pupil Teacher” மாணவ ஆசிரியர் சேவையில் 1968 ஆண்டு சேர்ந்திருக்கிறார். மாதந்த சம்பம் 100 ரூபா. முத்தி‌ரைக்கு 50 சதம் போனால் 99.50 சதம் கையில் கிடைக்கும் இனிமையான காலம் அது.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து அழுத்கம மத்திய கல்லூரிக்குப் போனவர் தனது ஆசிரயர் பயிற்சிக்காக அழுத்கம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குப் போயிருக்கிறார். தனது சே‌வைக் காலத்தில் படிப்பித்தது இரண்டு இடங்களில்தான். ஒன்று சாகிரா கல்லூரியின்ன் ஆரம்பப் பிரிவு மற்றயது புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி.

விடுமுறைகள் வீங்கிப் பருத்த இந்த இலங்கைத் திருநாட்டில் ஒவ்வொரு அரசாங்க சேவையாளருக்கும் ‌அரச விடுமுறைக்கு அப்பால் 45 நாள் பிரத்தியேக விடமுறை உரிமை உண்டு. இந்த ஆசிரியர்களுக்கு வருடத்திலே மூன்று நீண்ட பாடசாலை விடுமுறைகள் . அதற்கு அப்பால் 45 நாள் சொந்த விடமுறை அதையும் தாண்டி “நோ பே” லீவில் போகும் ஆசரியப் பெருந்தகைகள் இப்போது மட்டுமல்ல அன்றும்தான் இருந்தார்கள். அப்படியான தொழிற்பற்றடைய ஆசிரியர்களுக்கு மத்தியிலே இவர் ஒரு தனி ரகம். 1968 முதல் 1975 வரையில் இவர் பெற்றுக் கொண்ட பிரத்தியேக விடுமுறை ஏழே ஏழு நாட்கள் என்றால் இவரின் சேவை மேன்மையைப் பற்றிச் சொல்ல வேறு என்னதான் வேண்டும்?

திருமணமாகி பிள்ளை குட்டிகள் பெற்ற பின்னர்தான் அத்தியாவசியத் தேவைகளுக்காக சொந்த விடுமுறையை அனுபவித்துள்ளார். அப்போது கூட எல்லை தாண்டாது அதிலும் பெரும் பகுதி மீதம் இருந்ததாம்.
அன்ற தொட்டு இன்று வரைக்கும், இந்த 70 வயது பாட்டியின் வாழ்வோடு தொடரந்து வரும் பழக்கம்தான் வாசிப்பு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்கும் இவர் பொல் ஊண்றி நடக்கும் இந்த வயதிலும் புத்தளம் பொது நூலகத்துக்கு வந்து புத்தகங்களைத் தெரிவு செய்த வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசிக்கிறார். தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரை போகுமாமே.

எனது ஆக்கத்தின் கடைசிப் பகுதி வரையில் உங்களை அழைத்து வந்துவிட்டேன் .இன்னும் இந்த படித்த கண்ணாவை அறிமுகம் செய்யவில்லை தானே. அறிந்தவர்கள், தெரிந்வர்கள், அன்பு நண்பிகள் என்று பலரும் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளலாம். அனால் புரியாதவர்களுக்கு இரண்டொரு வரிகளில் ஒரு அறிமுகம்.

இவர் இன்சுன்நகார் டீச்சர். தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் மர்ஹும் எஸ்.எம்.ஏ.மலிக் அவரகளின் அன்பு மனைவி, மாகிரா, ஹாலிரா டீச்சர்மார், மிஹ்லார், நகர சபை நாஸிர் அகியோரின் அன்புத் தாய்.
கண்ணா நலமாயிருக்கப் பிரார்தித்ப்போமா?

நன்றி: Newton Isaac


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All