Puttalam Online
star-person

போற்றப்படக்கூடிய மாமனிதர் மர்ஹூம் ஐத்ரூஸ்

  • 25 June 2016
  • 1,516 views

13522538_1119630358110490_204626510_n

தனது 76வது (22.06.2016) பிறந்த தினத்தில் இவ்வுலக வாழ்க்கையை விட்டு விடைபெற்றார் மர்ஹூம் ஐத்ரூஸ் அவர்கள்.இவரின் இழப்பால் கடற்கரை வீதியே சோகத்தில் மூழ்கியது.

22.06.1940 புத்தளத்தில் பிறந்த அன்னார் தனது வாழ் நாளிலே அதிகமான நேரங்களை மஸ்ஜிதிலேயே செலவளித்தார் என்பதற்கு கடற்கரை மக்கள் சான்று பகிர்வார்கள். ஐந்து நேர தொழுகைகளையும் தவராது தொழுது வந்த மர்ஹூம் ஐத்ரூஸ் அவர்கள் கரையோர மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாய்மை உரைத்தல்,பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல்,சிறார்களிடத்தில் அன்பு காட்டுதல்,பணிவு,எழிமையான நடவடிக்கை,ஸலாத்துக்கு முந்திக்கொள்ளல்,யாருடைய மனதையும் புண்படுத்தாத பேச்சு,அழகிய புண்முறுவல் போன்ற இன்னும் பல நற்பண்புகளுக்கு சொந்தக்காரர் மர்ஹூம் ஐத்ரூஸ் அவர்கள்.

சுமார் 40 வருடங்களுக்கு மேலாக புத்தளம் மிஹ்ராஜ் மஸ்ஜிதின் நிர்வாக கட்டமைப்பில் உயர்ப்பீட உறுப்பினராக(உபத்தலைவர் உட்ப்பட) தியாகத்துட பணியாற்றியவர். அன்னார் இறையடி எய்துவதற்கு கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு முன்பதாக தனது நிர்வாக பொறுப்புக்களில் இருந்து விலகியதாக அவரின் உறவினர்கள் மூலம் அறியக்கிடத்துள்ளது.

புத்தளத்தின் பிரபல உதைப்பந்தாட்ட வீரர்களான முஹம்மத் அலி, முஹம்மத் போன்றவர்களை புத்தளம் லிவர்பூல் அணிக்காக தியாகம் செய்த பெருமை அன்னாரையே சேரும் அல்ஹம்துலில்லாஹ்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பாவங்களை மண்னித்து நல்லறங்களை ஏற்று உயர்தரமான் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற சுவர்க்கத்தை வழங்குவானாக. ஆமீன்.

ஹமீட் உஸாமா(பர்ஜீஸ்)
செயலாளர்,
முள்ளிபுரம் பழைய மாணவர் அமைப்பு.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All