Puttalam Online
puttalam-notice

ரமழானின் வசந்தத்தை மறக்கடிக்க வருகிறது ஷைத்தானிய களியாட்டம் – 03.07.2016

அன்புள்ள இஸ்லாமிய நெஞ்சங்களே.!

அல்லாஹ் அருளிய புனிதமிகு ரமழான் மிக சிரமத்தோடு பசியையும், தாகத்தையும் இச்சையையும் அடக்கி அல்லாஹ்வுக்கு பயந்து அடிப்பணிந்து வணக்க வழிபாடுகளில் தான தருமங்களில் திளைத்து வழியனுப்பிய கையோடு ஷைத்தானிய தாஜ்ஜாலிய சிந்தனைகளை ஊரில் அரங்கேற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

நேற்று வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரத்திலிருந்து சில வரிகள்..!

WAK

thundu

முஸ்லிம்களே! விழிப்படையுங்கள்!

ரமழானின் வசந்தத்தை மறக்கடிக்க வருகிறது ஷைத்தானிய களியாட்டம்!!

அன்புள்ள இஸ்லாமிய நெஞ்சங்களே!

அல்லாஹ் அருளிய புனிதமிகு ரமழான் மிகச்சிரமத்தோடு பசியையும், தாகத்தையும், இச்சையையும் அடக்கி அல்லாஹ்வுக்குப் பயந்து, அடிபணிந்து வணக்க வழிபாடுகளில், தான தருமங்களில் திளைத்து வழியனுப்பிய கையோடு ஷைத்தானிய, தஜ்ஜாலிய சிந்தனைகளை ஊரில் அரங்கேற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹ் ரமழானில் கட்டுப்போட்டு வைத்திருந்த ஷைத்தான்கள் ஷவ்வாலில் விடுவிக்கப்படும் போது நம்மூரில் தான் அவைகளுக்கு வரவேற்பும், விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

சமூகத்தை வழிகெடுத்து தீமைகளை பரவச் செய்யும் இவர்களை இனங்கண்டு கொள்ளுங்கள்.“ஷைத்தான்கள் ஜின்களிலும் இருக்கிறார்கள், மனிதர்களிலும் இருக்கிறார்கள்…” “இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை…” (அல்குர்ஆன்)

எமது கல்லூரியிலிருந்து நாம் எதிர்பார்ப்பது என்ன?

எமது முன்னோர்கள் கட்டிக் காத்து வளர்த்தெடுத்த சாஹிரா கல்லூரி பல அர்ப்பண சிந்தனையுள்ள ஆசிரியர்களாலும், அதிபர்களாலும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பாடடைந்திருந்ததை நீங்கள் அறிவீர்கள். இன்று கல்லூரியின் ஒழுக்கமும், கட்டுப்பாடும் சீராக இல்லை. அதனை கட்டிக் காத்து மிகப் பெரிய இபாதத்தான அமானிதத்தை மிகச் சரியாக செய்யவேண்டிய ஆசிரியர்களில் சிலர் ஊரில் தமக்கு கிடைத்துள்ள உல்லாசபுரியாக கல்லூரியைக் கருதி அமானிதத்தை பாழ்படுத்தி வருகின்றனர். தங்களின் தகுதிக்கு மேற்பட்ட கதிரைகள் அவர்களுக்கு.. அதற்கான பதவிபட்டங்கள் வேறு.. மாணவர்களுக்கு நிறைவேற்றவேண்டிய கல்வி எனும் அமானிதத்தை பாழ்படுத்தியும் வருகின்றனர்.

எமது கல்லூரியின் மேற்குறித்த சீரழிவை சீர்படுத்தவேண்டிய கல்லூரியின் நிருவாகக்குழுவும், தகுதியுள்ள அதன் அதிபரும், கல்லூரியின் மாணவர் ஒழுக்கத்தை அதல பாதாலத்திற்கு கொண்டு செல்லும் மேற்குறித்த கானிவெல் விடயத்தில் முனைப்புடன் செயல்படுவது வியப்பையும் விசனத்தையும் ஏற்படுத்துகிறது.

இஸ்லாமிய ஒழுக்கங்கங்ளை கட்டிக் காத்து மாணவர்களை திறமையும், ஆற்றலுமுள்ள ஒழுக்க சீலர்களாக பயிற்றுவித்து சமூகத்திற்கு வழங்க வேண்டியவர்கள், ஊரை வழிநடாத்தும் சமூகத் தலைமைகளை உருவாக்க வேண்டியவர்கள், இன்று தங்கள் பொறுப்பை மறந்து, மாணவர்கள் மென்மேலும் இஸ்லாத்தின் விழுமியங்களில் இருந்து தூரமாகும் மாபெரும் பாதகத்தை செய்ய முற்படுகிறார்கள். இதனை சமூகம் ஒரு போதும் மன்னிக்காது! ஏற்காது! என்பதை அவர்கள் அவசியம் கருத்தில் கொள்ளவேண்டும்.

கல்லூரியின் கல்வியும், ஒழுக்கமும் இவ்வாறு சீர்கெட்டிருக்க கல்லூரிக்கு இப்போது தேவை ஒரு ‘பஸ்’ஸாம். இது வேடிக்கையாய் இல்லை!? ஒரு மில்லியனுக்கு வாய் பிளந்து ஏமாளிகளாக இவர்கள் ஏன் மாறினார்கள்?

சிறந்த முன்மாதிரி இதோ! எமதூரின் சகோதர ஜனாதிபதி கல்லூரி ஒரு சிறிய இப்தார் நிகழ்வோடு 3 மில்லியன் ரூபாய் கிட்டும் வாக்குறுதியை பெற்றுள்ளதே!!

சாஹிரா நிருவாகக்குழு மாணவ ஒழுக்கத்தையும், சமுதாய கலாசாரத்தையும், இஸ்லாமிய சமூக விழுமியங்களையும் கேள்விக்குட்படுத்தும் இழிசெயலை செய்து பெறப்போவதுதான் என்ன?

பெற்றோரே சிந்தியுங்கள். இது ஒரு சீறிய சிந்தனையற்ற, தரங்கெட்ட, ஷைத்தானிய வயப்பட்ட, ஈனச் செயல் என்பதை அவர்களுக்கு புரியவையுங்கள்.

இஸ்லாத்தை விரும்பும் சகோதர சகோதரிகளே!

புத்தளத்தின் சமூக மற்றும் சமயத் தலைமைகள் அனைத்தையும் புறந்தள்ளி, ஊரின் மத்தியில் இடம்பெற இருக்கும் மேற்படி களியாட்டத்தை முற்றாக புறக்கணியுங்கள்..! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்..!

 நன்றி

சமூக நலன்விரும்பிகள்


One thought on “ரமழானின் வசந்தத்தை மறக்கடிக்க வருகிறது ஷைத்தானிய களியாட்டம் – 03.07.2016

  1. The most common trick of shaitan is inviting you to shamelessness

    Be wise what you choose for and reflect Islam in every action take towards to build a future of Puttalam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All