Puttalam Online
international-affairs

துருக்கிய மிலிட்டரி கூஃப்பின் பின்புலங்கள்….!

  • 21 July 2016
  • 600 views

துருக்கியின் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு எத்தனத்திற்கு பின்புலத்தில் அமெரிக்க C.I.A.-யின் மறைகரங்கள் தொழிற்பட்டுள்ளன. அமெரிக்க நேட்டோ அணியின் கூட்டாளி தேசத்திற்கு எதிராக அமெரிக்க ஏன் இதனை செய்ய வேண்டும்..?

அமெரிக்கா, ஐரோப்பாவில் அதன் அணு ஆயுதங்களுக்கான மிகப்பெரிய ஆயுத கிடங்குகளைக் கொண்டுள்ள மூலோபாய முக்கியத்துவம் கொண்ட “இன்செர்லிக் (Incirlik)” விமான தளத்தை அணுகும் உரிமையை அமெரிக்க போர்விமானங்களுக்கு பதிலாக, ரஷ்ய போர்விமானங்களுக்கு வழங்க எர்டோகன் முற்பட்டிருந்தார்.

இதனால் ஏற்படும் அமெரிக்காவிற்கான ஜியோ மிலிட்டரி பின்னடைவுகள் எவ்வாறானதாக இருக்கும். மத்திய கிழக்கில் இந்த தளம் ரஷ்யா வசம் சென்றால் என்ன நடக்கும், அதே போல ஐரோப்பாவில் என்னவாகும் என்பது பென்டகன்னிற்கு நன்றாகவே தெரியும். இருப்பது ஒரே ஒப்சன் தான். அதனால் அதனை அக்டீவ் பண்ணியது.

அத்தளத்தின் துருக்கிய தளபதி இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் ஒரு தலைவரென்றும், இப்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்ச்சியின் பின்னால் அமெரிக்க உளவு ஏஜென்சிகளின் பொறி முறையை உணர்ந்து கொண்ட துருக்கிய அரசு உடனடியாகவே, சிரியாவினுள் உள்ள ISIL க்கு எதிராக அவர்களது இன்செர்லிக் (Incirlik) விமானத் தளத்திலிருந்து அமெரிக்க விமானங்கள் மற்றும் டிரோன்களை, துருக்கியின் மீது ஏற்படுத்தப்பட்டிருந்த “விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியில்” செலுத்தக்கூடாது எனறது.

துருக்கிய அரசாங்கத்தின் இந்த செயற்பாடானது பெண்டகனை ஆச்சரியத்தில் ஆழ்ந்தியது. இன்னும் மோசமாக, அந்த இராணுவத் தளத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தண்ணீர் துண்டிக்கப்பட்டது. விமான ரன்வேயில் விமானங்கள் ஏறி இறங்காதவாறு துருக்கிய இராணுவம் பார்த்துக் கொண்டது. பின்னர் அந்த துருக்கிய விமானத் தளத்தின் தளபதி கைது செய்யப்பட்டார்.

இது அமெரிக்க இராஜதந்திர நகர்வுகளிற்கும், உளவு செயற்பாடுகளி்றகும் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகும். ஸ்டேட்டிற்கே அவமானத்தை தோடித்தந்த விடயம். அதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் முயல்வார்கள் என்பது மட்டும் உறுதி.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All