Puttalam Online
international-affairs

சதிகாரர்களை தண்டிப்பது ஜனநாயக அரசியலை ஒழித்துக் கட்டுவதாக அமையாது

  • 22 July 2016
  • 588 views

Inamullah Masihudeen

அன்று ஈரானில் புரட்சி இடம் பெற்றபொழுது எகிப்தில் அன்வர் சாதாத் மன்னர் ஷாவிற்கு புகலிடம் வழங்குவதாக அறிவித்தவுடன் மக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதாம்.

உடனே அன்வர் சாதாதின் ஊது குழல் ஊடகங்கள், மன்னர் ஷா அவரது செல்வங்களுடன் வருவதாகவும் எகிப்தின் பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்க்கப் போவதாகவும் பிரச்சாரம் செய்தார்களாம்.

13775807_1810237632539754_141368467734535750_n

தற்பொழுது அமெரிக்க சென்றுள்ள எகிப்தின் வெளியுறவு அமைச்சர் துருக்கி சதிப்புரடச்சி காதாநாயன் என துருக்கி ஜனாதிபதி ஆர்துகான் குற்றம் சுமத்துகின்ற பதுஹுல்லாஹ் குலானிற்கு அரசியல் தஞ்சம் வழங்க பேரம் பேசல்கள் செய்வதாகவும் அரபு ஆய்வாளர்கள் ஊகங்கள் வெளியிட்டுள்ளனர்.

நேற்று சில சீச்சீ ஊடகங்கள் துருக்கி சதிகாரர்களுக்கு புகலிடம் வழங்குவதால் எகிப்தில் பொருளாதார எழுச்சி ஏற்படுமென ஊதித் தள்ள ஆர்பித்துள்ளதாக ஊடகவியலாளர் ஷாபான் அப்துல் ரஹ்மான் ஸ்தான்பூலில் இருந்து தெரிவிக்கின்றார்.

அவ்வாறு நடக்கும் என்றால் அது துருக்கியில் புரட்சி மீண்டும் வெடிப்பதனை விட கிட்டிய எதிர்காலத்தில் எகிப்திலும் மற்றும் எண்ணை வள சுல்தான்களின் தேசங்களிலும் அமைதியின்மையை ஏற்படுத்தும் அதுவே முஸ்லீம் உலகிற்கெதிரான சதிகாரர்களின் பிரதான இலக்கு என்றும் நான் கருதுகின்றேன்.

சியானிச சிலுவை மங்கோலிய பாரசீக படைகளின் அரபுலக ஆக்கிரமிப்புக்களுக்கு குறுக்கே நிற்கும் துருக்கிக்கு எதிரான சரவதேசிய பிராந்திய சதிமுயற்சிகள் தொடர்கின்றன.

ஜனாதிபதி ஆர்துகான் சொல்வது போல் “ஜனநாயக அரசிற்கு எதிரான சதிகாரர்களை சட்டம் தண்டிப்பது துருக்கியில் பாத்ஹுல்லா குலானின் அமைப்பை அல்லது அவர்களின் ஜனநாயக அரசியலை ஒழித்துக் காட்டுவதாக அமையாது” என்றே நானும் கருதுகின்றேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லீம் உம்மத்தில் உண்மையான தலைவர்களை பாது காத்து உள் வீட்டு கூலிப் படைகளையும் அவர்களது சதிமுயற்சி களையும் தவிடுபொடியாக்கி விடுவானாக.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All