Puttalam Online
puttalam-notice

கே.ஏ.பீ. சார்பானவர்கள் நடத்திய பெருநாள் பந்தயத்தை ஏன் எதிர்த்தோம்.?

முன்பொரு தடவை நாங்கள் புத்தளத்தில் பெருநாள் ரேஸ் வைக்க முயற்சித்தபோது அப்போது நகர சபை தலைவராக இருந்த பாயிஸ் அவர்கள் அதற்கு அனுமதி தராமல் மறுத்ததோடு வெளி பிரதேசமொன்றில் நடத்தவிருந்ததையும் கோர்ட் உத்தரவு பெற்று தடுத்து நிறுத்தினார்…எனவே அன்று நாங்கள் பட்ட மானசீக வேதனையையும் ரேஸ் பார்க்க வந்த பொது மக்களின் ஏமாற்றத்தையும் அவருக்கு உணர்த்த வேண்டும் என்பதும் எனது நோக்கங்களில் ஒன்றாகும்.

22-07-2016 வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரத்திலிருந்து சில வரிகள்..!

WAK

sabri 1

முதலாவது பக்கம்

sabri 2

இரண்டாவது பக்கம்

 


One thought on “கே.ஏ.பீ. சார்பானவர்கள் நடத்திய பெருநாள் பந்தயத்தை ஏன் எதிர்த்தோம்.?

  1. Mohamed SR Nisthar says:

    “,…அன்று நாங்கள் பட்ட மானசீக வேதனையையும் ரேஸ் பார்க்க வந்த பொது மக்களின் ஏமாற்றத்தையும் அவருக்கு உணர்த்த வேண்டும் என்பதும் எனது நோக்கங்களில் ஒன்றாகும்.”

    நல்லது, மற்றய நோக்கங்கள் என்ன என “ஏன் எதிர்த்த்த்தோம் ” என்ற அறிக்கையில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. கடைசியில் இந்த விளையாட்டுப் போட்டியை ஏன் ஆதரித்த்தோம் என்று அறிக்கை முடிக்கப்பட்டுள்ளது. அதுவும் நல்லதே.

    ஆனால் நீங்கள் இருவருமே ஊரை குத்தகைக்கு எடுக்கும் முகமாக அல்லது ஊர் உங்களுக்கு மாத்திரம் தான் சொந்தம் என்ற நினைப்பில் காரியமாற்றுவது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

    நீங்கள் இருவரும் பாடசாலையில் படித்த கதை ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்., அதுதான் “ஆமையும் முயலும்” கதை. நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விடாமல் ஏட்டிக்கு போட்டியாய் காரியங்களை செய்யுங்கள். உங்கள் இருவருக்கும் இடையில் ஒரு மூன்றாம் சக்தி புத்தளத்தில் உருவாவதாக கதை. அதற்கான ஏற்பாடுகள் “சாடை மாடையாக” நடைபெறுவதாகக் கேள்வி.

    கவனம், நம்மைவிடால் ஊரில் யாரிருக்கிறார்கள் என்ற மமதையில் நீங்கள் இருவரும் இருக்க உங்களை ஆமை வேகத்தில் முந்திக்க கொள்ள ஒருவர் வருகிறார். உங்களால் தடுக்க முடியுமா?

    “அல்லாஹு”வின் உதவியால் வி.போ இனிதாக முடிவுற்றதாக பாயிஸ் சந்தோசப்பட , “அல்லாஹு “வின் உதவியால் தான் இருக்கும் வரை ஊரில் சமாதானம் நிலவும் என்று சப்ரி கூற, இதை பார்க்கும் மக்களுக்குத்தான் தெரியும் உண்மையில் இங்கு ஏன் “அல்லாஹு” பெயர் பாவிக்கப்படுகின்றது என்ற விடயம் . ஆகவே மக்களை முழு முடடாள்களாக கருத வேண்டாம்.

    அதே நேரத்தில் 3000 பார்வையாளர்கள் அங்கே கூடினார்கள் என்றால் அனைவரும் வி.போ. ரசிக்கவல்ல சப்ரி சொன்ன “வெட்டு, கொத்து” நடந்தால் அதை கண்குளிர பார்க்கவும்.

    உங்களுக்கு அதிகாரம் தருவதும், துரத்தியடிப்பதும் பொது மக்கள். மறக்க வேண்டாம். மக்களை மதியுங்கள். பொய் சொல்லாதீர்கள். நல்லது மாத்திரம் செய்யுங்கள். அப்போதுதான் அல்லாஹு வின் உதவி “பதவி” வடிவில் கிடைக்கும். இல்லாவிட்டால் ஏதோர் ஒரு வகையில் தண்டனைதான் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All