Puttalam Online
interviews

தனது துறையில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்  – அமீர் ஹம்ஸா

புத்தளம் நோர்த் வீதியை சேர்ந்த அமீர் ஹம்ஸா நீண்ட காலம் கத்தாரில் பணியாற்றி வந்தவர். சமூக சேவையாளராக பல நபர்களோடு அன்பாக பழகக்கூடிய இவர், கத்தார் நாட்டை விட்டு செல்லமுன்னர் புத்தளம் ஒன்லைன் இனையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகிறது.

சந்திப்பு: கத்தாரிலிருந்து வசீம் ஏ. பஸீர்

முதல் முதலாவது எப்போது வெளிநாடு  வந்தீர்கள், வந்ததற்கு ஏதாவது காரணம் உண்டா.?

நான் 1992 ம் ஆண்டு வெளிநாடு என்று கத்தார் வந்தேன். பிற்பாடு 2000 ஆம் ஆண்டு நாட்டுக்கு திரும்பி போய்விட்டேன்.  2010 ஆம் ஆண்டு மீண்டும் கத்தார் வந்தேன். நீங்கள் கேட்பது போல் இங்கே வருவதற்கு காரணங்கள் பல சொல்லலாம். பெரிதாக சொல்வதென்றால் சேமிப்பு மட்டும் தான். இங்கே உழைப்பவற்றில் செலவு போக மிகுதியை சேமிக்கலாம்.

திரும்பி நாட்டுக்கு சென்ற நீங்கள் மீண்டும் கத்தார் வருவதற்கு காரணம்.?

காரணம் இருக்கின்றது. நீண்ட காலம் கத்தாரில் உழைத்த நாங்கள், உழைகின்ற நாங்கள், சேமித்து கொண்டு போகும் பணத்தினை சரியான முறையில் முதலீடு செய்யாமையினாலேயே மீண்டும் வெளிநாடு அழைக்கிறது. வெளிநாடு என்று வந்தால் சேமிப்பு கட்டாயம் இருக்க வேண்டும். அந்த சேமிப்பு ஒழுங்கான முறையில் முதலீடு செய்யப்பட வேண்டும் இல்லையேல் திரும்பி திரும்பி வெளிநாடு வரவே வேண்டும்.

hamza (3)திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டுமென்கிறீர்கள். அப்படியானால் எவ்வாறு, எத்துறையில் முயற்சி செய்ய வேண்டும்.?

எமது ஊரில் நிறைய தொழில் முயற்சிகள் உள்ள போதும், ஒருவர் ஒரு முயற்சியை செய்கிறாரா..! அதனையே கொப்பி (Copy) பேஸ்ட் (Paste) செய்வது தான் நிறைய நடந்தவண்ணம் உள்ளது. வித்தியாசமான முறையில் சிந்தித்து ஒன்றை செய்வதற்கு நாம் முன்வருவது இல்லை. பொதுவாக சொல்வதென்றால் ரொம்ப குறைவு எனலாம்.

இன்னும் வாங்கி விற்கும் தொழிலேயே நிறைய பேர் செய்கின்றனர். உற்பத்தி துறைகளில் காலடி எடுத்து வைக்க வேண்டும். இதன்மூலம் நிறைய இலாபத்தை சம்பாத்தித்து கொள்ள இயலுமானதாக இருக்கும்.

வெளிநாடு சென்று நாடு திரும்புபவர்கள் பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுனர்களாக இருப்பதற்கு சரியான முதலீடு இன்மையை காரணமாக கொள்ளலாமா.?

அப்படியும் சொல்லலாம், குறைந்த சேமிப்பு என்று இப்படியும் சொல்லலாம். நிறைய சேமிப்பு இருந்தால் தான் பெரிய முதலீடு செய்யலாம். குறுகிய காலத்தில் குறைந்த பணத்தை உழைத்து நாடு திரும்பியவர்களே, இருக்கின்ற சேமிப்புக்கேற்ப ஆட்டோ வாங்கி தொழில் செய்கின்றனர். அதற்கு ஏதாவது இடையூறு வந்தவுடன் மீண்டும் வெளிநாட்டை நோக்கி வருகின்றனர்.

கத்தாரில் நிறைய எம்மவர்கள் இருக்கும் இடங்கள் உங்களுக்கு தான் தெரியும் என்கிறார்களே..!

அப்படி சொல்வதற்கு இல்லை. PAQ ன் செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுவதால் நிறைய ஆட்களை சந்திப்பது வழக்கம்.

அப்படியானால் ஊரில் எவ்வாறான சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளீர்கள்.?

சமூக சேவை என்றால் என்னால் இயன்றளவு, சிறியதாக சிலவற்றை ஊரில் செய்திருக்கின்றேன்.. (சிரித்தப்படி) ஊரில் பெரிதாக இருந்ததில்லை தானே. இங்கு தான் அதிகமாக செய்திருகின்றேன்  என்றே சொல்லவேண்டும். PAQ தான் இதற்கு களம் அமைத்து தந்தது. ஆரம்ப காலம் தொட்டே (Puttalam Association Qatar-PAQ) ல் அங்கத்தவராக இருக்கிறேன்.

hamza (1)சில பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு வந்தவர்களுக்கும் இப்போது வெளிநாடு வந்தவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்..!

முதலாவது எட்டு வருட கத்தார் வாழ்க்கை அனுபவம் எனும் போது யாரும் யாருக்கும் உதவி என்பது வெகு குறைவு. இல்லை என்று சொன்னாலும் குறையாகாது. கத்தார் நாட்டு சட்டங்கள் தெரியாது நிறைய நபர்கள் வந்திருக்கிறார்கள். பொய்யான கம்பனிகளில் சிக்கி சம்பளம் இல்லாது நிறைய பேர் நாட்டுக்கு திரும்பிய வரலாறும் இருக்கிறது..

இப்போது இவ்வாறன நிலை இல்லை. தொழிலாளியாக யாரும் வருவது இல்லை. புதிதாக வருபவர்களுக்கு வழிகாட்டியாக நிறைய நபர்கள் இருக்கிறார்கள். இங்கு வருவதற்கு முன்னரே நிலைமையை அறிந்து கொண்டுதான் வருகிறார்கள்.

புத்தளத்தின் ஆற்று கலாச்சாரம் இங்கு எம்மவர்களை தனிமைப்படுத்துகின்றதா.?

தனிமைப்படுத்தவில்லை என்று சொல்லமுடியாது.  எங்கள் ஊரைபோலவே இங்கும் சில வசதிகள் இருக்கத்தான் செய்கின்றது. நிறைய கடற்கரைகள் சூழ இருப்பதால் அங்கு போய் தங்கி நிற்பதும், மீன்,நண்டு பிடிப்பதும், கூட்டாஞ்சோறு சமைத்து உண்பதும் நடக்கத்தான் செய்கிறது. அந்த ஆற்று வாசம் இல்லாவிட்டாலும் ஓரளவு தாக்கி பிடிக்கலாம்.

வெளிநாட்டு வாழ்கையை முடிவுக்கு கொண்டு வர போகின்றீர்களாமே.!

ஆம், எவ்வளவு நாளைக்குத்தான் கடல் கடந்து வாழ்வது. எப்போதும் உழைப்பு இருக்கத்தான் வேண்டும். அதேநேரம் குடும்பங்கள், பிள்ளைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

புதிதாக வரவிருப்பவர்களுக்கு உங்களது அனுபவத்திலிருந்து ஏதாவது..!

எந்த துறைக்கு வேலைக்கு வருகின்றீர்களோ., அத்துறையில் தொழில் பயிற்சியோடு வர வேண்டும். வருவதற்கு முன்னரே ஆங்கில மொழியை படித்து விட்டு வருவது இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஒரே நிலையில் இருக்காது அத்துறையில் தமது திறமையை வெளிகாட்டி மேலும் மேலும் முன்னே செல்ல முயற்சி செய்ய வேண்டும்.

WAK


One thought on “தனது துறையில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்  – அமீர் ஹம்ஸா

  1. Mohamed Raslan says:

    Really superb words. It’s hundred percent true about foreign life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All