Puttalam Online
calendar

பிரபஞ்ச நியதிக்கு புறம்பான பிறை அறிவிப்பு; ஷரீஆவில் ஆதாரமுண்டா?

  • 15 September 2016
  • 2,523 views

solar-eclipse-cartoon-lrg-enஇஸ்லாமிய மாதத்தின் அடிப்படை சந்திரனாகும். அந்த மாதத்தின் நாட்களை மிகச் சரியாக காட்டுபவை. பிறை தேய்ந்து வளரும் போது தோன்றும் அதன்  வடிவங்களாகும். இந்த மாபெரும் உண்மையை அல்குர்ஆனின்  2:189 வசனம் தெளிவாகவே குறிப்பிடுகின்றது.

நபியே! (மாதந்தோரும் வளர்ந்தும் தேய்ந்தும் தோன்றும்) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு நீர் கூறும், அவை மனிதர்களுக்கு (ஒவ்வொரு மாதத்தையும்) காலங்களையும் ஹஜ்ஜையும் அறிவிக்கக் கூடியவை’ 2:189

சந்திரனின் சுற்றில் அதன் இறுதி நாள் கண்களுக்கு மறைக்கப்படும். அதனை நாம் அமாவாசை என்கின்றோம். அவ்வாறு மறைக்கப்படும் சந்திரனின் இறுதி வடிவம் 29ம் நாளில் அல்லது 30ம் நாளில் நிகழும். இதனையே ரஸூல் (ஸல்) அவர்கள் சந்திர மாதம் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டது என குறிப்பிட்டார்கள்.

சூரியனை பூமி சுற்றி வருகின்றது. பூமியை சந்திரன் சுற்றி வருகின்றது. இதனால் சந்திரன் அதன் சுற்றின் இறுதியில் மறைக்கப்படுகின்றது. அவ்வேளை சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வருகின்றது. எனவே அமாவாசை மாத இறுதியில் தோன்றுகின்றது. எனினும் இந்த சுற்றில் சூரியனின் மையப் பகுதி சந்திரனால் மறைக்கப்படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதுவும் அமாவாசை தினத்திலேயே இடம்பெறும்.

மேற்சொன்ன பிரபஞ்ச நியதிப் படியே கடந்த 01.09.2016 வியாழன் அன்றைய தினம் சூரிய கிரகணம் ஏற்பட்டது. பிரபஞ்ச நியதிப்படி அது அமாவாசை நாளாகும். 01.09.2016 (வியாழன்) இல் இடம்பெற்ற சூரிய கிரகணம் ஒரு பிரபஞ்ச நிகழ்வாகும். அது இலங்கையில் தென்படவில்லை. எனினும் ஆபிரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதி எமனின் தென் பகுதி அவுஸ்திரேலியாவின் சிறு பகுதி ஆகிய இடங்களில் இது முழுமையாகவும் பகுதியாகவும் தென்பட்டுள்ளது. எனவே வியாழன் 01.09.2016 அமாவாசை என்றால் அடுத்த நாள் வெள்ளிக் கிழமை (02.09.2016) அன்று துல்ஹிஜ்ஜா முதல் நாள் ஆகும். இந்த  தெளிவான பிரபஞ்சப் பேருன்மையை மறுப்பவர் யார்? ஆனால் நம் நாட்டில் பிறை தீர்மானம் எடுக்கும் உத்தியோகப்பூர்வ அமைப்பு 02.09.2016 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் வேளையில் பிறை பார்க்கும்படி அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு முந்திய வியாழன் பி.ப. 2:30 மணிக்கு புவிமைய சங்கமம் (சூரியன் சந்திரன்  பூமி என்பன ஒரு தினத்தில் ஒரே தளத்தில் வருதல்) ஏற்பட்ட பின்னர் மறுநாள் தோன்றும் வடிவம் வெள்ளிக் கிழமைக்குறிய பிறையாகும். மேற்படி பிறை மறையும் போது வெள்ளிக் கிழமை மஃரிப் வேளையில் வானில் தெரியும் தானே! அதனை 03.09.2016 சனிக்கிழமை பிறையாக எடுத்துக்கொள்வது எப்படி? இந்நடைமுறைக்கு ஷரிஆவில் ஆதாரமுண்டா?

இதோ! இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் நபி மொழி: இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் வந்த சிலர் நாங்கள் பிறையைக் கவனித்தோம். 2ம் நாளுக்குரியது என்று சிலரும் 3ம் நாளுக்குரியது என்று சிலரும் கூறினோம். அதற்கு அவர்கள்  நீங்கள் எந்தக் கிழமையில் கவனித்தீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் இன்ன கிழமைகளில் கவனித்தோம் என விடையளித்தோம். அதற்கு அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்  காட் சிக்காக அதை வழங்கியுள்ளான்  எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். அறிவித்தவர் அபுல் பக்தரி,  நூல்: ஸஹீஹ்  புஹாரி (1885).

ஆகவே இங்குள்ளவர்கள் வெள்ளிக்கிழமை (02.09.2016) அன்று மஃரிபிலேயே பிறையைப்பார்த்தார்கள். அது வெள்ளிக்கிழமைக்குரிய பிறையே என்பது மேற்கூறிய ஹதீஸின் படி தெளிவானது. இப்பிறையை சனிக்கிழமைக்குரியதாக எடுத்து துல்ஹிஜ்ஜா மாத நாட்களை தீர்மானிப்பது சரியானதா? உலமா பெருமக்களும், புத்தி ஜீவிகளும் சிந்திப்பார்களா?

உரிய நாட்களை அவ்வமே விட்டுவிட்டு வேறு நாட்களில் ஆரம்பிக்கும் இபாதத்தின் நிலை என்ன? உரிய நாளில் உரிய இபாதத்தில் ஈடுபடுவதே நபி வழியாகும். மற்றவை அனைத்தும் சுன்னாவுக்கு முரணானதே! அல்லாஹ்  மிக அறிந்தவன். இலங்கை முஸ்லிம்கள் உரிய நாளில் உரிய இபாதத்தை நிறைவேற்றும் காலம் என்றுதான் கனியுமோ? அல்லாஹ்  போதுமானவன்.

solar-eclipse-cartoon-lrg-en

(படத்திற்கான அறிவியல் விளக்கம்: பார்க்க. http://spaceplace.nasa.gov/venus-transit/en/)

எம்.என். நிஸார்

செயலாளர், ஹிஜ்ரி கொமிட்டி

விருதோடை, புத்தளம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All