Puttalam Online
international-affairs

ஷிமோன் பெரஸ் – மத்திய கிழக்கின் சமாதானப் பந்தை தன் இஷ்டம் போல அடித்தாடியவன்

  • 28 September 2016
  • 634 views

Fairooz Mahath

ஷிமோன் பெரஸ் (93 வயது) தன் விவகாரத்துக்காக, தன் திட்டத்துக்காக, தன் தேச நிர்மாணத்துக்காக வாழ்நாள் முழுதும் உழைத்து அடங்கிய ஒரு சமுக தலைவன்.

14446127_10202515726051509_2002931377159317262_n

அவனது வரலாறு பயங்கரவாதத்தாலும் கொலைகளாலும் கறைபடிந்து காணப்படுகிறது. ஆயினும் தன் தேசத்தின் பலத்தை அணுவாயுதங்கள் மூலம் அதிகரித்த பெருமை அவனுக்குரியது.

மனித உரிமைகளுக்கும் முழு உலக நாடுகளுக்கும் சவாலாக இயங்கியது மட்டுமன்றி நோபல் சமாதான பரிசைத் தட்டி மத்திய கிழக்கின் சமாதானப் பந்தை தன் இஷ்டம் போல அடித்தாடியவன்.

போலந்தில் பிறந்த இந்த சியோனிசவாதி 1934 இல் பலஸ்தீனுக்கு குடிபெயர்ந்து இன்று உலகைப் பிரிந்த நிலையில் அவனது மரணம் ஒரு சாதாரண யூதனின் மரணம் போல மனிதாபிமானம் கொண்டு இரங்கல் தெரிவிக்கப் படக் கூடியதல்ல என்பதே என் நிலைப்பாடு.

அவன் யூதன் என்பதற்காகவல்ல… கடாபி, பஷ்ஷார், ஹிட்லர்…. என எந்த அராஜக கொடுமைக்காரனின் மரணமும் இரங்களுக்குரியதல்ல என்பதே என் நிலைப்பாடு.

இந்நிலையில் பெரசின் மரணம் “மனித குலத்தினதும் பிராந்திய சமாதானத்தினதும் இழப்பு” என்ற பலஸ்தீன அதிகாரசபையின் மேனேஜர் மஹ்மூத் ரிழா அப்பாஸின் இரங்கல் செய்தியும் சில அரபிகளின் மனிதாபிமான அறிக்கைகளும் நகைப்புக்கிடமாகவே தெரிகிறது.

குழந்தைகளையும் அப்பாவிகளையும் கொன்றுகுவித்த காட்டுமிராண்டிப் படையின் நிறுவனர்களுள் கடைசி ஆளான ஷிமோன் பெரஸ் சந்தேகமின்றி சியோனிசத்துக்கும் அதன் அடிவருடிகளுக்கும் பேர் இழப்புத்தான்.

மோஷே தயான், கோல்டா மாயேர், இட்சாக் ஷாமீர், மனாஹெம் பேகன், இட்சாக் ராபின், ஏரியல் ஷரோன் வரிசையில் கடைசியாக ஷிமோன் பெரஸ் என்ற மனித குல எதிரி தன் வாழ்வில் நாம் பாராட்டத் தக்க ஒரே நல்ல விடயத்தை செய்திருக்கிறான்… ஆம் அவன்இறந்தான் அவன் வாழ்க.

“மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.”

14517646_10202515959137336_1380885915077718293_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All