Puttalam Online
art-culture

எனக்குக் கற்றுத் தந்த சகல ஆசிரியர்களுக்கும் நன்றி…

  • 11 October 2016
  • 1,477 views

எனக்குக் கற்றுத் தந்த சகல ஆசிரியர்களையும் நன்றியுணர்வுடன் இந்நாளில் நினைவு கூறுகிறேன். ஆசிரிய தின வாழ்த்துக்கள்.என் இனிய நல்வாழ்த்துக்கள்!

ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார்.

அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை, நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார்.

அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள்.

ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.

அன்பான ஆசிரியர்களுக்கு,

ஆசிரிய பணி ஒரு அறப்பணியாகும். இவர்களின் சேவை புனித போருக்கு ஒப்பானது அல்லது அதைவிட உயர்வானது அதனால்தான் போர் வீரனின் கரத்திலுள்ள வாளைவிட அறிவாளின் கைகளிலுள்ள எழுதுகோள் புனிதமானது என்று சொல்லப்படுகிறது.

எனவே இப்படிப்பட்ட புனித பணியை செய்யும் ஆசிரிய செம்மல்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். சொல்வதெல்லாம் சரி செய்வதெல்லாம் சரி என்றில்லாமல் சரியானதையே சொல்ல வேண்டும் சரியானதையே செய்ய வேண்டும் மேதைகளை உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை நல்ல மனிதர்களை உருவாக்கும் திறன் உங்களிடம்தான் இருக்கிறது.

ஒரு பிள்ளையின் இண்டாவது தாய் தந்தை நீங்கள்தான் உங்கள் கைகளில்தான் எதிர்கால சமூகத்தின் எழுச்சி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

எனவே தன்னையே உருக்கி உலகிற்கு ஒளி கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் அல்லாஹ் நம்மனைவரையும் பொருந்திக் கொள்வானாக..!

whatsapp-image-2016-10-05-at-7-00-47-pmwhatsapp-image-2016-10-05-at-6-59-46-pm

IKN

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All