Puttalam Online
chikva

குறை கண்:12 போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்கள்

  • 18 October 2016
  • 566 views

kurai-12

புத்தளம் முஜாஹிதீன் மஸ்ஜித் மஹல்லாவை அண்மித்த பகுதிகளில் போதை பொருள் விற்கும், வாங்கும் நடவடிக்கைகளாலும் பாவனைகளாலும் மக்கள் பெரும் அசெளகரியங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றனர்.

அதிகமான பாடசாலை மாணவர்களே இப்போதை பொருளுக்கு அடிமையாகி இருக்கின்ற அதேநேரம் இரவு நேர பஜார்களில் இருந்து கொண்டு பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்களின் பெற்றோர்கள் கண்டும் காணாமல் போல் இருக்கின்றனர். பள்ளிவாயல் மூலம் எச்சரிக்கை விடுத்தும், போலிஸ் நிலையத்திற்கு அறிவித்தும் எந்த பயனும் இதுவரை இல்லை.

வீதியால் இரவு நேரத்தில் பெண்களோ, சிறுவர்களோ என யாரும் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. இவ்வாறன துர்ப்பாக்கிய நிலையிலிருந்து அனைவரும் சீரான நிலைக்கு மாற வேண்டும் என்பதே எமது அவாவாகும்.

எப்போது இந்நிலை மாறும் என்பதை உங்கள் முன் நிறுத்தியவனாக..!

_நாசிஹ் அலி_


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All