Puttalam Online
social

புத்தளத்தின் பட்டுப் பாதைகளும் கெனல் வீதியும் – அமைச்சர் ரிசாதுக்கு ‌ஒரு திறந்த மடல்..!

  • 28 October 2016
  • 2,720 views

1705f842-90d3-424b-8428-f1a343728f33

புத்தளத்தின் பாதைகளில் பெரும்பாலானவை முழுமையாகச் சேதமடைந்துள்ள நிலையில், எங்கோ நகரின் கோடியிலுள்ள முகாம் பாதைகள், அரசியல் பிரமுகர்களின் செல்வாக்கிற்குட்பட்ட அல்லது வௌ்ளை மாளிகை பிரபுக்கள் வாழுகின்ற  இன்னும் சில பாதைகள் காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் அதேவேளை, கெனல் வீதி மற்றும் சாரா நெசவாலையில் ஆரம்பித்து நூர் நகர புகையிரத நிலையத்துடன் முடிவடையும் நூர் மஸ்ஜித் வீதி போன்ற முக்கிய பாதைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.

இது தொடர்பாக Newton isac தனது முகநூலில் இட்ட பதிவினை அதன் முக்கியத்தவம் கருதி இங்கு பிரசுரிக்கின்றோம்.

—————————————————————————————————————————————————

கௌரவ அமைச்சர் ரிசாத் பத்ருத்தீன் ‌அவர்களுக்கு,

”தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கு என்று அடிக்கும்” என்ற சொற் தொடரின் ஆழ அகலத்தைப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். அதன் அடிப்படையில்தான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். சிங்கத்தின் வால்களுக்கு விளங்காததை சிங்கத்தால் விளங்கிக் கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை.

நேற்று முன்தினம் புத்தளம் வான் வீதிக்கு கார்பட் இடப்வடுவது பற்றியும், அதுவும் உங்கள் கடைக் கண் பார்வையின் நிமித்தம் சிலருக்குக் கிடைத்தது பற்றியும் பெருமைபட்டுக் கொண்ட தகவல் ஒன்றை முகநூலில் படித்தேன்.

efdd13aa-1b85-40b4-aef7-d8401551d803

புத்தளம் வான் வீதியின் தென் அந்தத்தில் இருந்து இடப் பக்கமாகத் திரும்பும் ”கெனல் வீதி” யுடன் ஒப்பீட்டளவில் நோக்கினால் வான் வீதி முதலாம் தர வீதி என்று சொல்லாம். அந்த ‘கெனல் வீதி” இந்த புத்தளத்துக்கு கலா ஓயா நீரைக் கொண்டுவரும் பிரதான ஊட்டக் குழாய்கள் புதைக்கப்டுவதற்காய் பழுதாக்கப்பட்டது. அதற்காக நீர் விநியோக வடிகால் அமைப்புச் சபை அல்லது அந்த குழாய் பதிக்கும் ஒப்பந்த நிறவனத்தால் 20 இலட்சம் ரூபாய்கள் புத்தளம் நகர சபைக்கு வ‌ழங்கப்பட்டுள்ளது. அப் பணத்துடன் ‌மேற் கொண்டும் கிடைத்த நிதியைக் கொண்டு அந்தப் பாதையை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டபோது ”அதிகாரம்” உள்ளவர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களால் நிறுத்தப்பட்டு அந்த பணம் பத்தளம் ”சமகி” மாவத்தைப் பக்கமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என மிகவும் பொறுப்புடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அந்த ‘கெனல் வீதி” வழியாக ஐந்து கோடி ரூபா பெறுமதியான பென்ஸ் கார்கள் ஓடுவதில்லை, குறைந்த பட்சம் மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட ”லேன்ட் குரூஷர்” வாகனங்கள் கூட ஓடுவதில்லை. அங்கு ஓடுவதெல்லாம் முகம்மதுகளின் ஆட்டோக்களும், அகுமதுகளின் மோட்டார் சைக்கிள்களும், பைசிகள்களும்தான். வான் சந்தியில் இருந்து நிவ் செட்டில்மன்ட் சந்தி வரை அவை விழுத்து விழுந்து, பாய்ந்து பாய்து ஓடும் வேதனையை அந்த முகம்மதுகளும், அகுமதுகளும்தான் அறிவார்கள்.

இந்த நிலையில்தான் மாகாண சபை வீதியான வான் வீதி மத்திய அமைச்சரான உங்கள் நிதி ஒதுக்கீட்டில் இருந்து செய்யப்படுவதாக நாம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது. இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ஒரு முகநூல் பக்கத் தகவலின்படி அந்த காப்பட் வீதியில் வெகு விரையில் 5 கோடி ரூபா பெறுமதியான பென்ஸ் வாகனம் ஒன்று ஒடவுள்ளதாக அறிகிறோம்.

அந்தப் பாதைக்கு வலக்கப்பமாக ஓடும் தூசு படிந்த சாரா நெவசவாலை ஒழுங்கைக்கு காப்பட் இடப்பட்டது. அங்கிருக்கும் உள்ளூர் வெள்ளை மாளிகைக்கு வரும் வெள்ளை ஆடம்பர வாகனத்துக்கு பட்டுப் பாதை ஒன்று அமைத்துக் கொடுக்க அது அமைக்கப்பட்டது. அது அந்த வெள்ளை மாளிகைக் காரரின் சொந்தப் பணம் என்று நியாயம் கற்பிக்கப்படுகிறது.

யாருடைய பணம் என்பதல்லை. அந்த நபர் நகரத்தைச் சேர்ந்தவர் அல்ல. பள்ளமும் படுகுளியுமான பாதைகளில் எங்களைத் துயருற வைத்துவிட்டு நீங்கள் எல்லாம் நினைத்தபடி சொந்தப் பணத்தையும், மத்திய அரசுப் பணத்தையும் அள்ளிக் கொட்டி பட்டுப் பாதைகளை அமைத்துக் கொள்வீர்களா?

நீங்கள் தான் என்ன எங்கள் ஊர் காரரா? வான் வீதியைக் கடந்து பல கிலோ மீட்டருக்கு அப்பால் உங்களவர்கள் வசிக்கும் கிராமபுறப் பாதைகளுக்கு கார்பட் போட்டுவிட்டு எங்களை இப்படி அந்தரிக்க விடுவது பற்றிய நியாயம் கோரத்தான் இதை எழுதுகிறேன்.

சாரா நெசவாலை ஒழங்கைக்கு உங்களைச் சார்ந்த ஒரு ஒப்பந்தக் காரர் தனது சொந்த செலவில் தனது வீட்டுக்கு முன் பட்டுப் பாதை ஒன்றை அமைத்துக் கொள்ள முடியுமானால், மாகாண வீதியான வான் வீதிக்கு மத்திய அரசுப் பணத்தை உபயோகிக்க முடியுமானால், குக்கிராம பகுதியான தம்பண்ணிப் பிரதேசத்துக்கு மத்திய அரசுப் பணத்தில் பட்டுப் பாதைகள் அமைக்க முடியுமானால் நாங்கள் வரிக்கட்டும் நகர சபை பாதையான ”கெனல்” வீதியை அமைக்க மாத்திரம் உங்களால் நிதி ஒதுக்க முடியாதா?

மாரி காலம் இந்தா அந்தா என்று இருக்கிறது. மழை தொடங்கிவிட்டால் எமது பாடு என்னவாகும் என்று நினைக்கும் போது இப்போதே அச்சம் ஏற்படுகிறது.

நான் பெரியவன். நீ சிறியவன் என்று ‌வெட்டிச் சண்டை போடவும், அரசியல் கிளித்தட்டு பாயவும்தான் எங்கள் மண்ணின் தலைவர்கள் லாயக்கு.

நிதி மனுச் சோளனாக உங்களை நினைத்துக் கொண்டு நியாயம் கேட்க வரவில்லை.

கயமைத் தனத்தை உறைக்கச் சொல்ல வேண்டும் என்று எழுதுகிறேன். நீங்களும் உங்கள் அடிவருடிகளும், கையாலாக எமது தலைமைத்துவங்களுக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All