Puttalam Online
ladies

கெட்டிக்கார முஸ்லிம் பெண்பிள்ளைகள்…

  • 2 November 2016
  • 889 views

தேடல்களின் முடிவுகள்….
****************************
ஒரு காலம் இருந்தது,எத்தனையோ கெட்டிக்கார முஸ்லிம் பெண்பிள்ளைகள் எட்டாம் தரத்துடனும் ஐந்தாம் தரத்துடனும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர்.அடிப்படை கல்வியும் தடுக்கப்பட்டனர்.
உலகம் சுழல கால மாற்றத்துடன் இஸ்லாம் பெண்களுக்கான கல்வியை தடைசெய்யவில்லை என்பதன் உணர்ந்து,சமுகத்திற்கான அவர்களது தேவைகள் உணரப்பட்டு தடைகள் கலையப்பட்டன.
அன்று முதல் இன்று வரை என்னென்ன காரணமோ தெரியவில்லை முஸ்லிம் ஆண்களை விட கல்வியில் முஸ்லிம் பெண்கள் தமது இருப்பை உறுதி செய்து கொண்டு முன்னேறினார்கள்.பெற்றோரும் தன் மகள் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்பதையே இலட்சியமாகக் கொண்டு இயங்கத் தொடங்கினார்கள்.
விளைவு இலங்கையின் பல்கலைக் கழகங்கள்,கல்வியியற் கல்லூரிகளில் சராசரி முஸ்லிம்ஆண் ,பெண் அனுமதி விகிதம் 100:450 ஆக அதிகரித்துள்ளது.
பெருமையாக உள்ளது தானே!!
இன்னொரு உண்மை சொல்லவா??
450 பெண் பிள்ளைகளில் வழி தவறுவோர் கிட்டத்தட்ட 60- 75%.
ஆச்சர்யமாக இருக்கிறதா?ரத்தம் கொதிக்கிறது.

மலையகத்தின் மறைவிலிருந்த பெண் பிள்ளைகளை கிழக்கில் கட்டுப்படுத்தவோ வேவு பார்க்கவோ யாருமில்லை,சுதந்திரம் கிழக்கின் கடற்கரை அடம்பன் கொடிகளுக்குள் சிக்கித் தவிக்கிறது.

கரையோர மாவட்ட பிள்ளைகளை பாதுகாக்க மலையகத்தில் யாருமில்லை,பேராதெனிய பூங்காவிலும்,அம்புலுவாவை மலைச் சரிவிலும் விடுதலை கீதம் பாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆயிஷாக்களும் ஹப்ஸாக்களும்.
மற்ற பல்கலைக் கழக நிலவரங்களும் இதுவே…

உயர்தரம் வரை அடக்கி வளர்க்கப் படுகிறார்கள் நம் பிள்ளைகள்.சொந்த மாமியின் மகனுடனும் வீதியில் கதைக்க கூடாது.வகுப்பறையில் சக மாணவரையும் பார்க்க முடியாது.பாடசாலைகளிலாகட்டும் வீடுகளிலாகட்டும் ஒருவித கண்காணிப்புடனேயே வளர்க்கப் படுகிறார்கள்.அது பிழையே இல்லை. கட்டாயம் தேவை தான்.ஆனால் அதன் பின் கொடுக்கப் படும் எல்லை மீறிய சுதந்திரம் தான் பிரச்சினையே!!
தடைகள் மீறி பல்கலைக் கழகம் புகுந்து விட்டால் மகள் சாதித்து விட்ட உணர்வு பெற்றோருக்கு.நினைத்த மொடல் போனும்,தேவைக்கேற்ப ரீலோடும்.பரவாயில்லை.
ஆனால்…
ஒரு பெண் வாழ வேண்டிய வயது அது என்பதை மறந்துவிடக் கூடாது.ஹோர்மோன்களின் ஆளுகையிலிருந்து விடுபட்டு உணர்வுகளுக்கு தீனி போடத் துடிக்கும் வயது அது.
கட்டி வைத்த ஒட்டகம் எப்படி வேகமாக ஓடுமோ அது போல தறிகெட்டு ஓடத் தொடங்கி விடுகிறார்கள்.
—————————————– —————————————– ——————-
அண்மையில் பேஸ் புக்கில் ஒரு போட்டோ.ஹபாயா உடுத்திய பெண்பிள்ளை கையில் நூல் கட்டிய ஒரு ஆடவனுடன்.பஸ்ஸினுள் எடுத்த படம்.சும்மா பயணிக்கையில் எடுத்தது என நினைத்து விட்டு கொஞ்சம் ஸும் பண்ணிப் பார்த்ததும் வியந்தே போனேன்.அந்த ஆணின் கால்களின் மேல் அவளது கைகள் இருக்கிறது.எவ்வளவு அன்னியோன்யம்??அசிங்கமில்லையா??

சமுக முன்னேற்றத்திற்காக,சமுக விடிவிற்காக போதிக்கப் படும் கல்வி எதை நோக்கி போகிறது??

ஒழுக்கத்தை இழந்த ஆளுமைகள் எமக்குத் தேவையா?

இறை கட்டளையை,ஹதீஸ்களை மறந்த பட்டதாரிகள் எதற்காக??

கற்பா??கல்வியா??

சிந்திக்கும் நேரம் இது.

ஏற்கனவே பல்கலைக் கழகங்களில் கற்ற(அனைத்து பீடங்களிலும் தான்) பல முஸ்லிம் ஆண்களாகட்டும்,பெண்களாகட்டும் அந்நியர்களை திருமணம் செய்து,தான் என்ன மதமென்றே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.முஸ்லிம்களின் பல்கலைக் கழக அனுமதி விகிதம் அதிகரிக்கிறது என்றால் மதம் மாறும் விகிதமும் மறைமுகமாக அதிகரிக்கிறது தானே!

பல்கலைக் கழக மாணவர்களே!!
உங்களது கல்வி பீடங்களில் யாரோ ஒருவர் இப்படியான தொடர்பிலிருந்தால் தயங்காமல் முஸ்லிம் மஜ்லிஸிற்கு தெரியப் படுத்துங்கள்.அகில இலங்கை முஸ்லிம் மாணவர் ஒன்றியத்திற்கு தெரிவியுங்கள்.குறிப்பிட்ட மாணவரின் பெற்றோருக்கு தெரிவியுங்கள்.மதத்தை மீறிய ஒழுக்கமற்ற கல்வியால் சமுகத்திற்கும் பயனில்லை,குடும்பத்திற்கும் பயனில்லை.கண்ணீர் மட்டுமே மிஞ்சும்.

பெற்றோர்களே!!
உங்கள் பிள்ளைக்கு சுதந்திரத்தை கொடுக்க முன் அவர்களது நண்பர்களாக மாறி அவர்களது செயற்பாடுகளை ஒவ்வொரு நாளும் அறிந்து கொள்ளுங்கள்.
வழங்கப்பட்ட சுதந்திரம் எதற்கானது?என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
முடியுமென்றால் பல்கலைக் கழக அனுமதியுடனேயே அவர்களுக்கு திருமணம் முடித்து வையுங்கள்.இது பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும்.
பிள்ளை பற்றி பல்கலைக்கழக மஜ்லிஸினர் அறியப் படுத்தினால் சில தீர்வுகளை அவசரமாக எடுங்கள்.பிள்ளை படிக்கட்டும் என்ற உங்கள் எண்ணம் உங்களது பிள்ளையை சந்தூக்கை விடுத்து பெட்டியில் பயணிக்க செய்யக் கூடாதில்லையா??

**ஒழுக்கமான,மார்க்க வரையறையில் வாழும் பல்கலைக்கழக மாணவ முத்துக்களே இது உங்களுக்கான பதிவல்ல..
தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள்…

பல்கலைக் கழக மாணவர்களை நோக்காகக் கொண்டு இவ்வாக்கம் எழுதப் பட்டிருந்தாலும் O/L,A/L மாணவர்களுக்கும் இது பொருந்தலாம்.

IKN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All