Puttalam Online
regional-news

பு /மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலய இரண்டு மாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா

  • 14 November 2016
  • 3,343 views

புகைப்படங்கள் – ஹஸ்னி அஹ்மத்

புத்தளம் மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று (14.11.2016 ) காலை மிக விமர்சையாக இடம்பெற்றது.

_dsc0553

பாடசாலை அதிபர் ஜனாப் பஷீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாகாண சபைகள் உளூராட்சி இராஜாங்க அமைச்சர் ப்ரியங்கர ஜயரத்ன, வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்திமா ராஜபக்ஷ, வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் தாஹிர் புத்தளம் வலயக் கல்விப் பணிமனை உதவிப் பணிப்பாளர் இசட் .ஏ சன்ஹிர் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வை பாடசாலையின் பிரதி அதிபரும் முன்னாள் பிரதச சபை உபதலைவருமான முஹம்மத் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் பாடசாலை நிர்வாகமும் அபிவிருத்தி குழுவும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் அரபிக் கல்லூரி அதிபர் ஊர் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களது கலை நிகழ்வுகளும் இங்கு மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதியில் நன்றியுரையினை பாடசாலை ஆசிரியர் ஹனீஸ் வழங்கினார்.

_dsc0561 _dsc0587 _dsc0619 _dsc0633 _dsc0641 _dsc0649 _dsc0655 _dsc0657 _dsc0660 _dsc0670 _dsc0673 _dsc0676_dsc0679 _dsc0698 _dsc0688_dsc0689_dsc0693_dsc0708_dsc0713 _dsc0727

_dsc0735_dsc0736


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All