Puttalam Online
regional-news

புத்தளம் தெற்கு கோட்ட கல்வியியலாளர்களின் யாழ் விஜயம்…

  • 17 November 2016
  • 640 views

_MRM RIJAZ_

புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட புத்தளம் தெற்கு கல்வி கோட்ட பாடசாலை அதிபர்களும் ஆசிரிய ஆலோசகர்களும் இணைந்து கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு. நிமல்சிரி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2016.11.10 ஆம் திகதி யாழ் மாவட்டத்தை நோக்கி களப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.

841ee4e7-324b-4cb7-bee8-6e1cfd7546be

இக் களப்பயணம் யாழ் மாவட்ட பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக கட்டமைப்பை பார்வையிடும் நோக்கில் அமைந்திருந்தது.

இக் களப்பயணத்தை மேற்கொண்ட இக் குழுவினர் சாவகச்சேரி இந்து கல்லூரி, யாழ் இந்து கல்லூரி, யாழ் இந்து ஆரம்ப கல்லூரி, கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர்.

மேலும் இக்குழு நெடுந்தீவு போன்ற இன்னும் சில முக்கிய இடங்களுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

9b2ac1bb-27f1-4dc0-8e12-e0653d4d2088 f7d69ea0-9610-44d7-902d-21a4eaee2acc 7a2b7c14-cd93-4f67-97f1-25740bef303f 6fe7de28-d07e-4a34-8293-5e3de70391d2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All