Puttalam Online
chikva

குறை கண்:13 ஒழுங்கில்லாத கழிவறைகளால் அவதியுறும் மாணவர்கள்

  • 1 December 2016
  • 921 views

kurai-13
(வசீம் ஏ பஸீர்)

புத்தளம் நகரின் பிரசித்திபெற்ற ஒரேயொரு ஆண்கள் பாடசாலையாக சாஹிரா தேசிய கல்லூரி திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அகவை எழுபதை தாண்டி பயணித்து கொண்டிருக்கும் இச் சாஹிரா கல்லூரி விளையாட்டுக்களில், படிப்புக்களில் என்று பல்வேறு சாதனைகளை படைத்திருந்தாலும், சரித்திரங்களில், வரலாறுகளில் எழுதப்பட்டிருந்தாலும் ஒரு கசப்பான வடு காலம் காலமாக தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது.

தரம் 6 தொடக்கம் உயர்தர பிரிவு வரை சுமார் 1500 க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்விப்பயிலும் இக்கல்லூரியில் பாரியதொரு பிரச்சினையாக, வெள்ளை தாளில் ஒரு கரும்புள்ளியாக இவ் ஒழுங்கில்லாத கழிவறை இருந்து கொண்டிருக்கின்றது.

இவ் ஒழுங்கில்லாத கழிவறையினால் காலை 7.30 மணிக்கு கல்லூரிக்குள் நுழையும் மாணவர்கள் பகல் 2 மணி வரை சிறுநீர், மலகழிவு என்பவற்றை வெளியேற்ற இயலாது தர்ம சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாறு கழிவுகளை வெளியேற்றாது அவற்றை அடக்கும் போது கட்டாய நோய் காரணிக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.

அதேநேரம் சிற்சில மாணவர்கள் இதனையே காரணம் காட்டி பாடசாலை மதிற்சுவரை தாண்டுகின்றனர். பாடசாலை இடைநேரத்தில் வீடு செல்கின்றனர்.

இன்னுமொரு பார்வையில் பார்த்தோமேயானால் அனைத்து மாணவர்களும் தொழுகை கடமையானர்கள். அவ்வாறிருக்கும் போது அவர்களுடைய லுஹர் தொழுகை பாதிக்கப்படுகிறது. முன்னைய நாள் அதிபர் சீ.எஸ்.எம் ஹனிபா அவர்களுடைய பதவி காலத்தில் லுஹர் தொழுகையை மாணவர்கள் ஜமாஅத்தாக தொழுத வரலாறுகள் எம்மிடம் உள்ளமை நினைவு கூறத்தக்கது.

இவ்வாறாக மிக முக்கிய தேவையாக இருக்கும் இவ் கழிவறை ஒழுங்கு செய்யப்படாது தொடர்ந்து அவ்வாறே இருக்குமா.? அல்லது இதன் தேவை உணர்ந்து புனர்நிர்மானம் செய்யபப்பட்டு மாணவர்கள் பாவனைக்கு மீள வழங்கப்படுமா.? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கல்லூரி அதிபர், பாடசாலை அபிவிருத்தி குழு, பழைய மாணவர் சங்கம் என்பன இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதேவேளை உயர்தர பிரிவில் பயிலும் மாணவர்களும் தங்களது குழு செயற்றிட்டம் மூலமாக இதற்கு தீர்வு காண இயலுமாக இருக்கும்.

இவை புனர்நிர்மானம் செய்யப்பட்டால் அதனை முறையாக பராமரிப்பு செய்து, எப்போதும் சுத்தமாக வைத்திருக்க பாடசாலை சூழல் முயல வேண்டும். இல்லாது போனால் மீண்டும் “பழைய குருடி கதவை திறடி” என்ற கதையாகி போய்விடும் என்பது திண்ணம்.

தேசிய பாடசாலை – கழிவறை – தர்மசங்கடம்…

WAK

whatsapp-image-2016-11-26-at-4-21-19-pm whatsapp-image-2016-11-26-at-4-21-21-pm whatsapp-image-2016-11-26-at-4-21-22-pm whatsapp-image-2016-11-26-at-4-21-23-pm whatsapp-image-2016-11-26-at-4-21-24-pm-1 whatsapp-image-2016-11-26-at-4-21-24-pm whatsapp-image-2016-11-26-at-4-21-26-pm whatsapp-image-2016-11-26-at-4-21-27-pm


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All