Puttalam Online
kids

சிரியாக் குழந்தைகளை அதிகம் பலிகொண்ட ஆண்டு – 2016

  • 10 December 2016
  • 585 views

Fairooz Mahath

பல்லாயிரக்கணக்கான பச்சிளம் பாலகர்களை பலி கொண்டு வெற்றி முழக்கம் போடும் ஈரானிய தரப்புகள் பலியை சவூதி மீதும் கருங்குஞ்சுகள் மீதும் எத்தனை நாளைக்குப் போட முடியும் ?

15267693_10202846000748170_1732018080658219001_n 15284151_10202845990987926_4979234073725373689_n 15319023_10202846000988176_3921680472950903935_n 15326328_10202845992547965_5562557887725046747_n

ரஷ்யா இரவு பகல் பாராமல் போடும் பரல் குண்டுகள் மற்றும் சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் குறித்து கண்டனம் கூற ஒரு நேர்மையான ஊடகவியலாளன் இல்லாத முகாமாகி விட்டது பாரசீக முகாம்….

சவூதி போன்ற எல்லா அரபு நாடுகளினதும் பாராமுகம் மற்றும் வாய்ச்சவாடல் அறிக்கைகள் தான் இந்த நிலைமைக்கு இன்னொரு காரணம் என்பதில் உண்மையிருக்கிறது… ஆனால் தாம் முற்றுகையிட்டுள்ள சிரியா பகுதிகளுக்குள் அரை மில்லியன் குழந்தைகள் இருக்கின்றார்கள் என்பதைப் பற்றி… தாம் வெற்றி கொள்ளும் கிழக்கு எலப்போவில் மாத்திரம் ஓரிலட்சம் குழந்தைகள் (ஒரு மாதம் முதல் 16 வயது வரையானவர்கள்) இருக்கின்றார்கள் என்ற எந்தப் பொருட்டும் பாரசீக, ரஷ்ய முகாமுக்கு கிடையாது என்பது எத்தனை பெரிய இழிவு என்பதை உணர்ந்ததாக தெரியவில்லை.

15326589_10202845998788121_397447835482338597_n 15326595_10202845998428112_8732417248827859377_n 15327241_10202845995268033_8167603104665873943_n 15327353_10202845993187981_349351867998357460_n 15327459_10202845990867923_5357334569339022696_n 15337656_10202845992827972_8996786456644249774_n

கருங்குஞ்சுகளுக்கு எப்படி ஆயுதம் வந்தது என்று அங்கலாய்ந்து அந்தப் பலியை துருக்கி மற்றும் கட்டாரின் மீது போட முயலும் தஜ்ஜால் தனத்தை என்னவென்பது? கருங்குஞ்ச்சுகள் யாருடன் எண்ணெய் வியாபாரம் செய்தார்கள் என்று தெரியாதா? இராக்கில் கயவன் நூரி அல்மாலிகி இருபத்து நாலு மணி நேரங்களுள் சில நூறு கருங்குஞ்சுகளிடம் பாரிய கனரக ஆயுதங்களையும் ஏராளமான நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகளையும் கையளித்து விட்டு பல்லாயிரக்கணக்கான இராக்கிய இராணுவத்தினரை தோல்வியுற்றவர்கள் போல் நாடகமாடி பின்வாங்கச் செய்தது நினைவில்லையா? மதீனாவிலும் இஸ்தான்பூலிலும் தற்கொலை தாக்குதல் நடாத்தும் கருங்குஞ்சுகள் ஈரானுக்குள் இதுவரை எட்டிப் பார்க்காத சங்கதி தெரியாதா?

15338789_10202845999388136_2212558950423635137_n 15338868_10202845997548090_8254819228339732995_n 15349569_10202845994548015_5512936118260227219_n 15349768_10202845995668043_3077102987086876921_n 15350605_10202845998148105_3951129185686978007_n 15350704_10202845997748095_7531265029633395155_n-1

லிபியாவில் கருங்குஞ்சுகளின் ஆபிரிக்க தலைநகரான ஸர்த்தினை லிபியா புரட்சிப் படையினர் வெற்றி கொண்ட போது கருங்குஞ்சுகள் உலகுக்கு அச்சுறுத்தல் என்று நிமிடத்துக்கு அறுபது தடவைகள் ஜபம் செய்யும் அமெரிக்காவும் ரஷ்யாவும் அதைக் கண்டு கொள்ளவே இல்லையே ஏன்? ஐரோப்பா அந்த வெற்றியால் கலங்கிப் போனதேன் ?

இந்த கருங்குஞ்சு கூட்டம் மக்களை அழிப்பதற்கான வெற்றுக் காரணமே அன்றி வேறில்லை…. பாரசீகத்துக்கும் சரி இம்பீரியலிசத்துக்கும் சரி….

மனிதம் மரித்த வெற்றிகளை பறையடித்து, இருக்கும் நல்லெண்ணத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பதே குறைந்தளவு நேர்மை.

15355782_10202845993507989_4568708881858117119_n 15355788_10202845999108129_5906611106529279223_n 15355843_10202845997148080_8474884546033815039_n 15356636_10202846000548165_6587657400026664987_n 15356715_10202846001428187_5042363632046091739_n 15380280_10202845996108054_4277101577827040276_n 15380289_10202845985827797_4856275334859169559_n 15380435_10202845999748145_9129428902258793444_n 15380809_10202845991747945_895138203222991427_n 15380827_10202845994068003_7397954784952955354_n 15401019_10202845991427937_3784321263402228622_n 15401172_10202846001188181_3774845128464998827_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All