Puttalam Online
chikva

குறை கண்:14 பாத்திமா கழிவறை – நிர்வாக அசமந்த போக்கினால் சங்கடத்துக்குள்ளாகும் மாணவிகள்

  • 15 December 2016
  • 2,307 views

kurai-14

(வசீம் ஏ பஸீர்)

புத்தளம் நகரின் இரு கண்களில் ஒரு கண்ணாக வரலாறு நெடுகிலும் எம்மவர்களால் கூறப்பட்டு வரும் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தூசு படிந்தாற்போல் ஒரு கரையாக இக்குறை எம் கண்களில் தென்படுகிறது.

பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி புத்தளத்தில் பல்வேறு வைத்தியர்கள், கணக்காய்வாளர்கள், கிராம சேவகர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட துறைசார் வல்லுனர்களை உருவாக்கி காட்டியுள்ளதையும், ஒவ்வொரு வருடமும் பல்வேறுபட்ட துறைகளுக்கு பட்டபடிப்புக்காக பல மாணவிகளை உருவாக்கி வந்தமை, வருகின்றமை இதன் சாதனைகள் என்றால் மிகையாகாது.

இவ்வாறானதொரு நிலையில் நான் மேலே சொன்ன அந்த குறை இப்பாடசாலையின் நட்பெயரில், வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரம் இதனை ஒரு பெரிய குறையாக காணாவிட்டாலும் சிறிய குறையாகவும் எடுத்துவிடலாகாது.

அந்தவகையில் இப்பாடசாலைக்கு ஊரின் பல பாகங்களில் இருந்தும் மாணவிகள் வருகை தருகிறார்கள். சில போது அது பாடசாலைக்கு அண்மித்ததாகவும் இருக்கலாம், ஆனால் பெரும்பாலும் தூரத்திலிருந்தே வருகை தருகின்றனர். அதேநேரம் வெளியூர்களில் இருந்து வருகை தரும் எதிர்கால கல்வியலாளர்களை வரவேற்க மறுப்பதில்லை.

இது இவ்வாறு இருக்கும் போது பாடசாலையின் முறையில்லாத கழிவறை முகம் சுழிக்க வைக்கின்றது. அத்தியவசிய தேவைகள் நிமித்தம் இக்கழிவறைகளை பயன்படுத்த நாடும் மாணவிகள் முறையில்லாது இருக்கும் இதனை பார்த்து தர்ம சங்கடத்திற்குள்ளாகின்றனர். பாடசாலையின் அதிபர், ஆசிரியைகள், பழைய மாணவிகள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் இது தொடர்பில் ஏதாவது செய்து இருக்கின்றார்களா.! என்றால் இதுவரைக்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

நேரடியாக சொல்வதென்றால் பாடசாலை நிர்வாகத்தின் அசமந்த போக்கே காரணம் எனலாம். இதனால் சங்கடத்திற்கு உள்ளாகுவர்கள் மாணவிகளே.! பெண் பிள்ளைகள் பயிலும் இப்பாடசாலையில் படிப்பில் மாத்திரம் கரிசனை காட்டாது பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொள்ள வேண்டியது கட்டாய தேவையாகின்றது.

ஒரு முக்கிய தேவையாக இருக்கும் இவ் கழிவறை முறையாக செய்யப்பட்டு மாணவிகள் பாவனைக்கு மீள வழங்கப்பட வேண்டும். அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் உரியவர்கள் எவ்வளவு சீக்கிரம் இவற்றிற்கு தீர்வு காண இயலுமோ அவ்வளவு சீக்கிரம் தீர்வு காண்பது நன்று. அதேநேரம் இவ்விமர்சனம் ஆரோக்கியமாக ஏற்கப்பட்டு, வளர்ச்சியை நோக்கி செல்லும் இப்பாடசாலை மேலும் திடமாக செல்ல வழிவகுக்கும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

பிரபல மகளிர் பாடசாலை – முறையற்ற கழிவறை – தர்மசங்கடம்…

WAK

whatsapp-image-2016-12-07-at-4-30-22-pm whatsapp-image-2016-12-07-at-4-30-45-pm whatsapp-image-2016-12-07-at-4-31-59-pm whatsapp-image-2016-12-07-at-4-35-09-pm whatsapp-image-2016-12-07-at-4-35-21-pm whatsapp-image-2016-12-07-at-4-35-25-pm whatsapp-image-2016-12-07-at-4-35-59-pm whatsapp-image-2016-12-07-at-4-36-24-pm whatsapp-image-2016-12-07-at-4-37-59-pm whatsapp-image-2016-12-07-at-4-39-33-pm


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All