Puttalam Online
health

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு

  • 28 December 2016
  • 354 views

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க  சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்தினத்தில், டெங்கு நுளம்பு பரவும் இடங்களை பரிசோதனை செய்து புகை அடித்தல் உட்பட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்படவுள்ளன.

டெங்கு நுளம்பு அதிகமாக காணப்படும் மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்தறை, காலி மற்றும் கல்முனை ஆகின இனங்காணப்பட்டுள்ளன. இம்மாவட்டங்கள் பாடசாலை டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது கூடிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய ரீதியிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் இன்றும் (28) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All