Puttalam Online
chikva

குறை கண்:15 தேசிய ரீதியில் வெட்கத்திற்கு உள்ளாகும் தேசிய பாடசாலை

  • 12 January 2017
  • 1,102 views

kurai 15(வசீம் ஏ பஸீர்)

கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 80ஆம் வருட குழுவினரின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் வருடாந்த ஜனாதிபதிக் கிண்ண கால்பந்து தொடர் இம்மாதம் 07ஆம் திகதி முதல் ஆரம்பமாகி உள்ள நிலையில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியும் 21 அணிகளில் ஒன்றாக களம் இறங்கியுள்ளது.

பல முன்னணி பாடசாலை கால்பந்து அணிகள் பங்குகொள்ளும் இந்தத் தொடரை இம்முறை பாடசாலைகள் கால்பந்து சங்கம் மற்றும் இலங்கை கால்பந்து சங்கம்  என்பன இணைந்து நடாத்துகின்றது.

இவ்வாறானதொரு போட்டி தொடரில் அன்று தொட்டு இன்று வரை புத்தளம் பிரதேசத்தில், மாவட்டத்தில், வடமேல் மாகாணத்தில், தேசியத்தில் என உதைபந்தாட்ட துறையில் “புத்தளம் சாஹிரா” தனது பெயரை நிலை நாட்டி வந்துள்ளமை அனைவரும் அறிந்ததே.

அவ்வாறானதொரு வெற்றியினையே இத்தொடரிலும் சாஹிரா அணி சுவிகரித்து அரையிறுதியை நோக்கி முன்னேறியுள்ளது. இவ்வெற்றியினை நினைத்து ஒரு பக்கம் மனம் சந்தோஷம் கொண்டாலும் இன்னொரு பக்கம் வெட்கப்படுகிறது..

ஒரு தேசிய பாடசாலையின் கால்பந்தாட்ட அணி, அனைத்து போட்டிகளிலும் சாதித்துவரும் ஒரு அணி சொந்தமாக ஜெர்ஸி (Jersey) இல்லாது போட்டிகளில் விளையாடுவது என்பது ஆரோக்கியமற்ற செயற்பாடாகவே பார்க்கப்படுகிறது.

இவைகள் சிறிய விடயமாக பார்க்கப்பட்டாலும் தேசியம் எனும் போது புத்தளம் அவமானப்படுகிறது. கல்லூரி அதிபர் இவற்றை முதலில் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். அதேநேரம் விளையாட்டு பொறுப்பாசிரியர்களும் இதனை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை என்றே விளங்குகிறது.

இதனை தனியே பாடசாலை அதிபர், ஆசிரியர் என்று பொறுப்பு என்று அல்லாது பாடசாலையின் அபிவிருத்தி குழு, பழைய மாணவர் சங்கம் என்பனவும் சரி செய்ய வேண்டும். வெறுமனே பெயரை மாத்திரம் வைத்திருந்து எந்த பிரயோசனமும் இல்லை.

எழுபதுகளை கடந்திருக்கும் இச்சாஹிராவில் படித்த எத்தனையோ நபர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உயர் பதவிகளில் பணி புரிகின்றனர், துறைசார் துறைகளில் சேவையாற்றுகின்றனர். ஆனாலும் பாடசாலை என்று வரும் போது யாரும் அருகில் இல்லை. அந்தோ பரிதாபம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அனைத்து பாடசாலைகளும் தமது பெயர் அணிந்த ஜெர்ஸி (Jersey) அணிந்து போட்டிகளில் விளையாடும் போது நமது பாடசாலை ஒரு கழகத்தின் பெயர் கொண்ட ஜெர்ஸி (Jersey) அணிந்தமை புத்தளத்தின் மைந்தர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும் வேதனைப்பட வேண்டிய விடயம் என்றால் மிகையாகாது.

WAK

zahira 1 zahira 2 zahira 3 zahira 4 zahira


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All