Puttalam Online
health

உணவுப் பழக்கவழக்க மாற்றம் ஏற்படுத்தியுள்ள பேராபத்து தொற்றா நோய்கள்

  • 3 February 2017
  • 2,016 views

மர்லின் மரிக்கார்

WHO_Non_Communicable_Diseases

சுகாதார கல்விப் பணியகம் அண்மையில் ஒழுங்கு செய்திருந்த விஷேட செய்தியாளர் கருத்தரங்கில் டொக்டர் பாலித மஹீபால, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் பிரசாத் கட்டுலந்த. சுகாதார அமைச்சின் தொற்ற நோய் தடுப்பு பிரிவின் சமூக நோயியல் நிபுணர் திருமதி வெர்ஜினி மல்லவராச்சி ஆகியோர் “தொற்றா நோய்கள் (Non Communicable Diseases)” தொடர்பில் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.

images

இலங்கையில் அண்மைக் காலம் முதல் தொற்றா நோய்கள் பெரும் சவாலாக மாறியுள்ளன. அதற்கு நான்கு காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன. அவற்றில் ஒழுங்கு முறையற்ற உணவுப் பழக்கவழக்கம். சீனி, உப்பு மற்றும் எண்ணெண்ணையை அதிகம் நுகரப்படுதல், மரக்கறி வகைகள் அதிகம் உண்ணப்படாமை என்பன குறிப்பிடத்தக்கவையாகும். இவை ஆரோக்கியத்திற்கு உகப்பற்ற உணவுப் பழக்கவழக்கம். அத்தோடு ஒழுங்குமுறையான வியர்வை சிந்திய உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி இன்மை. புகைப்பிடித்தல், மதுப்பாவனை, அன்றாடம் ஆன்மீக செயற்பாடுகள் மற்றும் உள அமைதியைத் தரக் கூடிய செயற்பாடுகளில் ஈடுபடாமை, வாழ்க்கையமைப்பு இயந்திரமயமாகி உள்ளமை, நொறுக்குத் தீனி, விரைவு உணவு இரசாயனங்கள் நிறைந்த சுவையூட்டி உணவு வகைகள், பழங்களை உண்பதன் முக்கியத்துவம் உணரப்படாமை என்பனவும் இச்சவாலுக்கு பெரிதும் பக்க துணையாக அமைந்திருக்கின்றன. இவற்றின் விளைவாகவே தொற்றா நோய்கள் இந்த நிலைமையை அடைந்திருக்கின்றது.

ncdஆனால் இந்நாட்டினரின் வாழ்க்கை அமைப்பு முன்பு இவ்வாறான நிலையில் காணப்படவில்லை. அன்று மிக சாதாரணமானதாகவே வாழ்க்கையமைப்பு காணப்பட்டது. 80 வீதத்திற்கும் மேற்பட்டோர் கிராமப் புறங்களிலும், 20 வீதத்திற்கும் குறைவானோர் நகரப் பிரதேசங்களிலும் தான் வாழ்ந்தனர். பெரும்பாலானவர்கள் அதிக உடலுழைப்பு மிக்க விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபட்டனர். பாரம்பரிய உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். அத்தோடு அன்றாடம் ஆன்மீக செயற்பாடுகளிலும் உள அமைதி தரக் கூடிய செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தனர். அதன் பயனாக அவர்கள் மத்தியில் தொற்றா நோய்களும் உள நெருக்கடிகளும் மிகவும் அரிதாகவே காணப்பட்டது.

ஆனால் அப்படியான நிலைமை இன்றில்லை. இந்நாட்டினர் அன்றைய வாழ்க்கை அமைப்பிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுள்ளனர். மூவரில் ஒருவர் அதாவது 33 வீதத்தினர் மதுப்பாவனை மிக்கவர்களாகவும் சுமார் 20 வீதத்தினர் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர். அத்தோடு சீனி, உப்பு, எண்ணெய் நுகர்வு பெரிதும் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதனால் இந்நாட்டினர் தொற்றா நோய்களின் நவீன சிறைக்கைதிகளாக மாறியுள்ளனர். இதன் விளைவுகளையே தொற்றா நோய்களாகவும் மன அழுத்தமாகவும் இப்போது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அது எந்தளவுக்கென்றால் இந்நோய்கள் இப்போது இந்நாட்டில் பெரும் பிரச்சினையாக விளங்குகின்றன. குறிப்பாக இருதய நோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுததம், கொலஸ்ரோல், புற்று நோய்கள், உடல் பருமன் சிறுநீரகப் பாதிப்பு போன்றவாறான தொற்றா நோய்கள் அவற்றில் சுட்டிக்காட்டத்தக்கவை.

Non-Communicable-Diseasesஇந்நாட்டில் 1994 இல் 2 வீதமாகக் காணப்பட்ட நீரிழிவு நோயாளர்கள் கடந்த இரு தசாப்த காலப்பகுதியில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளனர். நகரப் பிரதேசங்களில் மாத்திரம் 14 – 15 வீதத்தினர் இந்நோய்க்கு உள்ளானவர்களாகக் காணப்படுகின்றனர். அத்தோடு ஒவ்வொரு நால்வரிலும் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளானவர்களாக உள்ளனர். இதே நிலை தான் கொலஸ்ரோல், இருதய நோய்கள் மற்றும் புற்றுநோய்களிலும்  காணப்படுகின்றது. அத்தோடு 42 வீதமான பெண்கள் உடல் பருமனுக்கு இப்போது உள்ளாகியுள்ளதாக ஆய்வொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது ஆண்கள் மத்தியில் 20 வீதத்தை விடவும் அதிகம். அத்தோடு நகர்ப்புறப் பாடசாலை மாணவர்களில் 15 வீத்த்தினர் உடல் பருமனுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கின்றது.

இத்தொற்றா நோய்களின் பிரச்சினையை இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான வளர்முக நாடுகள் எதிர்கொண்டிருக்கின்றன. குறிப்பாக இலங்கையைப் போன்று விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான மொறீசியஷியஸில் தற்போது ஒவ்வொரு மூன்று பேருக்கு ஒருவர் நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளார் என்று சுட்டிக்காட்டிய டொக்டர் பாலித மஹீபால மொறீஷியஸ் நாட்டின் இந்நிலைக்கு இலங்கையைப் போன்று உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றமே பிரதான காரணம் என்றும் குறிப்பிட்டார்.

இதன்படி இத்தொற்றா நோய்களின் அச்சுறுத்தலுக்கு அடிப்படைக் காரணமாக உடல் உள ஆரோக்கியத்திற்குப் உகப்பற்ற வாழ்க்கையமைப்பு விளங்குவதால் இலங்கையில் இடம்பெறுகின்ற மரணங்களில் 65 வீதத்திற்கும் மேற்பட்டவைக்கு இத்தொற்றா நோய்கள் தான் மூல காரணிகளாக விளங்குகின்றன. இதனை மருத்துவ நிபுணர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலைக்கு பெரும்பாலான வளர்முக நாடுகள் முகம் கொடுத்துள்ளன.

அதன் காரணத்தினால் தான் உலகில் தொற்றா நோய்கள் ஏற்படுத்துகின்ற மரணங்களை குறைக்கவென உலக சுகாதார ஸ்தாபனம் அதன் உறுப்பு நாடுகளுக்கென 2013 இல் 09 இலக்குகளை முன்மொழிந்திருக்கின்றது. அதிலும் இலங்கை உள்ளிட்ட தென்னாசிய நாடுகளுக்காகவென மேலும் சில இலக்குகளும் அவற்றோடு சேர்த்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொற்றா நோய்களினால் மரணமடைவதை வருடாந்தம் 2 வீதம் படி குறைக்க வேண்டும் என்றும் ஆலோசனை  முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் தான் அன்றாட உணவில் அதிகம் மரக்கறி வகைகளை சேர்த்துக் கொள்ளுமாறும், சீனி மற்றும் உப்பு நுகர்வைக் குறைத்து கொள்ளுமாறும், புகைப்பிடித்தல், மதுப்பாவனையைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் உள நெருக்கடிகளைத் தவிர்த்துக் கொள்ளக் கூடிய செயற்பாடுகளிலும், வியர்வை சிந்தக் கூடிய உடற்பயிற்சி போன்ற உடலுழைப்புக்களில் ஈடுபடுமாறும் வலியுறுத்தப்படுபகின்றது. இவை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவென விரிவான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான அடிப்படையில் அன்றாட வாழ்க்கை அமைப்பை அமைத்துக் கொள்ளும் போது தொற்றா நோய்களின் அச்சுறுத்தலைப் பெரிதும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அதுவே மருத்துவ நிபுணர்களின் முக்கிய ஆலோசனையாகவும் உள்ளது.

ஆகவே இத்தொற்றா நோய்களின் அச்சுறுத்தலைத் தவிர்த்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் விஷேட கவனம் செலுத்த வேண்டும். இதற்கு முன்பைப் போன்று சாதாரண வாழ்க்கை அமைப்பை நோக்கி மீண்டும் நகருவது சிறந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அது இந்நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமையும். இதைவிடுத்து எந்நாளும் மருந்துகளைப் பயன்படுத்தி ஒழுங்குமுறையற்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவே முடியாது.

 நன்றி  தினகரன் – மகுடம்

21.01.2017


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All