Puttalam Online
art-culture

“ஒற்றையடி” – மைல் 01

  • 9 February 2017
  • 791 views

“ஒற்றையடி” – மைல் 01

1c10609b-c55b-4834-adda-ef59f8d41706

“ப்ரேக் அப்டா மச்சான்…” என்று பிரியங்கன் தந்த சோக KFC பார்ட்டி நாவை சுட்டுக்கொண்டே போனது இன்னும் நினைவிருக்கிறது. இந்த காதலர்களுக்கு பொதுவான நண்பனாக இருப்பதன் அனுபவம் அலாதியானது, அவளது ஒப்பாரியும் இவனது முணகல்களும் நம்மை நிரப்பிக்கொண்டே இருக்கும், குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி……. ஹ்ம்ம்… அதற்கென தனி டயரி ஒதுக்கலாம்!

4ஜி யுகத்தில் காதலும் பக்கேஜ் ஆகி போனது,நைட் டேட்டாவுடன்!

ஒரு காலம் இருந்தது, கடிதமும் கார்டுகளும் பரிசுகளும் பூக்களுமென!
அவள் கொடுத்த கடதாசியில் பவுடர் மணமும், இவன் கொடுக்கும் மல்லிப்பூவில் வியர்வை நெடியும் தேடிய அந்த சில்லறை ஏக்கங்களை தாண்டி இன்று ATM வாழ்வுக்குள் வந்துவிட்டோம், தேயும் இன்பம்! புனிதத்தை அபத்தம் ஆக்கிய நாமே அதை பார்த்து விமர்சிப்பதுதான் “லொல்…” காமெடி!

ஒரு கொப்பி நிறைய கடிதம் எழுதி அதை இருவரும் பரிமாறுக்கொள்ளும் அந்த புராதன காதல் இன்று கேலி ஆகிப்போனதுதான் காலக்கொடுமை!
இன்று ஒரே ரிங்கில் தொடங்கி ஒற்றை Sms இல் சாகும் காதல்கள்(?)தாம் அதிகம்!

காதலில் மதம் விட்டு மதம் தாவிய தணுகர், சீனியருக்கு நூல் விட்ட அஸார், கண்டதும் காதல் அதீஷ் என பல விசித்திரங்களை கடந்தாயிற்று! இந்த காதல் கண்ணை கட்டித்தான் விடுகிறது, அதனால்தான் நமக்கு விசித்திரம் ஆனவை அவர்களுக்கு வாழ்க்கை ஆகின!
இந்த காதலுக்காக உயிர்விடுவார்களா என சினிமாக்களை கண்டு சிரித்த வயது போய், இப்போது சிந்திக்கும் வயது இது!
தள்ளி வைத்த ஒரு வரிசை திரைக்காவியங்கள் இப்போது சீரியஸாக திரையில் ஓடுகின்றன!

ஆண்கள் முதல் காதலை மறப்பதில்லை என்பார்கள், கல்வெட்டாகிய நினைவுகள் வரலாறுகளை தினமும் கூவ அதை மல்லாக்க கிடந்து கண்ணீர் விட்டு ஆற்றும் சுகம் அம்சமானது!………

ஆனால் “காதலும் கடந்து போகும்” யுகத்தில் வாழ்ந்து கொண்டு காதலுக்காக கண்ணீர் வடிப்பது அவ்வளவு மனிதமாக எனக்கு படவில்லை!
What is more human than survival? என்ற கருவில் வெளிவந்த Ex-machina சொன்ன இரத்தினச்சுருக்க கருவே காதலா? வாழ்தலா? என்பதுதான்!
SURVIVAL OF THE FITTEST!

இன்னும் 4 நாட்களே இடையில் இருக்க நம்மை சூழப்போகும் அந்த அபத்தங்களின் இறந்த காலத்தின் நித்தியத்துவம் பெற்ற நினைவுகளை சுமந்து கொண்டு, காதலர் தினம் கொண்டாடுவோர் மத்தியில் அழப்போகும் உண்மைக் காதல்கள்தான் என் போன்ற பார்வையாளர்களை நிச்சயம் உறுத்த போகின்றன!

வழித்த மொட்டைத்தலையுடன் திடீர் என வந்து நிற்கின்றான், மறுக்கப்பட்ட காதலின் நினைவுகளுடன் ‘விக்கி’!
அந்த ஹிரோஷிமாவின் அதிர்வுகளை மொத்தமாக விழுங்கியவனின் முகத்தை கண்ணாடியில் காண்கிறேன்!

-அப்ஸல் இப்னு லுக்மான்-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All