Puttalam Online
regional-news

புத்தளத்தின் முதலாவது ஆங்கில சஞ்சிகை “me” வெளியீடு – ஒரு கண்ணோட்டம் (புகைப்படங்கள் இணைப்பு)

_DSC6165

உலகில் பல்வேறு நாகரிகங்கள் தோன்றி மறைந்திருந்தபோதிலும் அதன் கலை கலாசார பண்பாட்டு பாரம்பரிய அம்சங்களை அவை விட்டுச் சென்ற எழுத்துருவான சுவடிகள் மூலமாகவே அறிந்துக் கொள்ள முடிகின்றது.

_DSC6183 _DSC6186

எழுத்துக்கள் எப்போதும் பருவங்களையும், காலங்களையும் தாண்டிப் பயணிக்கும் ஆற்றல் கொண்டவை. அந்தவகையில் புத்தளத்து வரலாற்றுப் பக்கங்களில் தன்னை முதன்மையாகப் பதித்துக் கொண்டுள்ள “me” என்ற ஆங்கில சஞ்சிகையின் வெளியீடு கடந்த 29.01.2017 அன்று புத்தளம் சாஹிரா கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில், முன்னால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. குமார ஹிரிபுரகெம பிரதம அதிதியாகவும், கேகாலை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி திரு. எ.எம்.எம்.இஷட்.எம். அம்ஜாத் கௌரவ அதிதியாகவும், ஏனைய புத்தள கல்விச் சமூகத்தின் பிரதிநிதிகளும்; கலந்து கொண்ட மாபெரும் சபையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

“me” சஞ்சிகையானது புத்தளத்தில் மிகப் பிரபல்யமான ஆங்கில கல்வி நிறுவனங்களில் ஒன்றான English Education centre – EEC  இன் தனித்துவமானதொரு வெளியீடாகும்.

புத்தளத்தின் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இச்சஞ்சிகையானது வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பாரம்பரியங்களைக் கொண்ட பல்கலாசார சமூகமாக விளங்கும் புத்தள சமூகத்தின் தனித்துவமான பாங்கினை ஆங்கில சாயலுடன் எழுத்துருவில் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் EEC மிகப் பாரிய வெற்றியைக் கண்டுள்ளது.

_DSC6244

ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் ஆக்கங்களுக்கு உயிர் கொடுத்து, அதன் பிரத்தியேக தன்மையை புத்தள மற்றும் பல்லின சமூகத்திற்கும் எடுத்துச் சொல்லும் மிகப் பெரிய பொறுப்பை இத்தனியார் கல்வி நிறுவனம் தனித்துவமான முறையில் செய்து முடித்துள்ளது என்பது பாராட்டக்கூடிய ஒன்றாகும்.

இன்றைய இளைஞர்களின் எண்ணங்கள், மனப்பாங்குகள், சிந்தனைகள், நடத்தைக் கோலங்கள் மற்றும் வாழ்க்கை பாணிகள் அனைத்தும் வேறு திசைகளில் பயணிக்கின்றபோது, அவற்றை ஒரே சீர்மையின் கீழ் கதைகளாக, கட்டுரைகளாக, கவிதைகளாக மற்றும் எதிர்பார்ப்புகளாக தொகுத்து, “me” ஆங்கில சஞ்சிகை அவற்றிற்கு அடையாளமொன்றை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எத்தனையோ கனவுகளை சுமந்து நிற்கும் இளைஞர்களின் சிந்தனைகளுக்கு வேலியிடுவதாய் அமையும் கல்வித் திட்டங்கள், பரீட்சைகளுக்கு அப்பால் அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மனவெழுச்சிகளின் வெளிப்பாட்டை எழுத்துருவில் கொண்டு வந்ததோடு, அவற்றை உலக மொழியொன்றில் குறித்து சொல்லியிருப்பது பெருமைப்படக்கூடிய ஒன்றாகும்.

_DSC6231 _DSC6222

இச்சஞ்சிகை தனித்துவமானதாக அமைய வேண்டும் என்பதற்காக இளம் மாணவர்கள் தங்களின் உள்ளக்கிடக்கைகளில் உருவான எண்ணங்களுக்கு எழுத்துருவம் வழங்கியதோடு, அவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட முடியாதவாறு பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளது மிகவும் பாராட்டக்கூடிய விடயமாகும்.

_DSC6525 _DSC6261 _DSC6250 _DSC5867 _DSC5925 _DSC6207

English Education Centre  தன்னுடன் கைக்கோர்த்து கல்விப் பயணத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் ஆங்கில புலமையினையும் சரளத்தன்மையையும் வெளியுலகத்திற்கு உரக்கச் சொல்ல வேண்டும் என்பதில் எப்போதும் பின் நிற்பதில்லை. அந்தவகையில், ஆங்கில புலமைத்தன்மைக்குச் சான்றாக தனது “me” சஞ்சிகையை வெளியிட்டு, இளம் எழுத்தாளர்களுக்கு புதுத் தெம்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. காலத்தால் எப்போதும் அழியாதவாறு புத்தளத்தில் ஆங்கில எழுத்தாளர்களின் முன்னோடிகளாகத் தன்மைப் பதிவு செய்து கொள்ள அனைத்து இளம் எழுத்தாளர்களுக்கும் EEC ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

_DSC5749 _DSC5846 _DSC5911 _DSC6011 _DSC6391 _DSC6444

பிரத்தியேகமாக ஆங்கில கல்வியினை வழங்கும் இந்நிறுவனத்தின் எல்லைகளுக்கு அப்பால் இளம் எழுத்தாளர்கள் ஜொலிக்க வேண்டும் என்பதே EEC அவாவாகும். மேலும், இச்சமூகத்தில் வாழும் அனைத்து தரப்பினரும் இளம் எழுத்தாளர்களுக்கு மேலும் களங்களையும், ஊக்கங்களையும் வழங்கி அவர்களின் எதிர்கால எழுத்துத் துறை சார்ந்த பயணத்திற்கு வழியமைக்க வேண்டும் என்பது English Education Centre இன் மிகத் தாழ்மையான வேண்டுகோளாக அமைகின்றது.

Front Page


2 thoughts on “புத்தளத்தின் முதலாவது ஆங்கில சஞ்சிகை “me” வெளியீடு – ஒரு கண்ணோட்டம் (புகைப்படங்கள் இணைப்பு)

  1. Hapsa Firthous says:

    Very good keep it up. Our well wishes always there.

  2. MASHAALLAH RISKIYA TEACHER UNGALUDA YA SAVEI INNUM MELUM VALARANUM INSHAALLAH ENGADA DUA EPPAVUM ENGALUKKU IRIKKUM KEEP IT UP TEACHER NAAN UNGATA STUDIE PANNUNA DHILLAI ANAL UNGALA EPPOVUM NINAITHUKKITTU IRIKKUM URU NALAN VIRUMBI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All