Puttalam Online
editorial

கருத்து–22: நீண்ட பயணத்தில் சாஹிராவும் நாமும்

  • 21 February 2017
  • 692 views

emathu karuththu

புத்தளம் நகரின் ஒரேயொரு ஆண்கள் பாடசாலையான சாஹிரா தேசிய கல்லூரி பல அகவைகளை தாண்டி 72வது அகவையில் காலடி எடுத்துவைக்கும் இத்தருணத்தில் எம் அன்னை சாஹிராவோடு நாம் எவ்வகையான பங்காளராகவுள்ளோம் என்பதை சற்று மனம்திறந்து பார்க்கவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.

இக்கல்லூரி இம்மண்ணில் ஆரம்பமாவதற்கு பல தனவந்தர்கள் எவ்வாறு உதவினார்கள், என்ன நோக்கத்திக்காக இக்கல்லூரி உதயமானது என்பதனை சற்று வரலாற்றை திரும்பி பார்த்தால் அறிந்து கொள்ளலாம். அன்று ஒருசிலரால் தூயநோக்கோடு வழங்கப்பட்ட காணிகளும், கட்டிடங்களும் சாஹிராவின் நீண்ட பயணத்தின் வழித்தடங்கள் என்றால் மிகையாகாது.

WhatsApp Image 2017-02-20 at 5.14.59 AMஅந்தவகையில் மெதுவாக தனது பயணத்தை ஆரம்பித்த சாஹிரா விளையாட்டு, கல்வி, ஒழுக்கம் என்பவற்றில் தனி முத்திரை பதித்து வரலாறு படைத்தமையை யாரும் எளிதில் மறந்து விடமாட்டர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அண்மைக்காலமாக சாஹிராவின் நாமத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அதன் ஒழுக்கம், கல்வியில் பின்னடைவு காணப்படுவதாலும், ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை என்பவற்றாலும் சாஹிராவின் வளர்ச்சி குன்றிப்போவதையை காணக்கூடியதாகவுள்ளது.

எனவே தான் எம்முடைய வளர்ச்சியில் ஏணியாய் இருந்த, சமூகத்தில் உயர் அந்தஸ்துக்கு எம்மை உயர்த்திய சாஹிராவின் வளர்ச்சிக்கு எமது பங்களிப்பு இத்தருணத்தில் கண்டிப்பாக வேண்டும் அல்லவா.

ஒவ்வொரு வருடமும் பாடசாலையை விட்டு வெளியாகும் மாணவர் குழாம், சாஹிராவின் பெயரில் தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி சமூக சேவை மையங்களாக இயங்குவது ஒரு பக்கம் சந்தோஷத்தை அளித்தாலும் மறுப்புறம் சாஹிராவின் இச்சமூக சேவை மையங்கள் சாஹிராவுக்கு என்ன பங்களிப்பு செய்திருக்கிறது என்றால் அவைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். தன்னை வளர்த்த இக்கலாசாலையின் கல்வி பின்னடைவுக்கு, வளப்பற்றாக்குறைக்கு நாம் உதவிடாமல் வேறுயாரு உதவிடமுடியும்.

அன்றைய காலங்களிருந்து சாஹிராவில் கற்றிட, சாஹிராவின் கல்வித்தாரதரத்தில் தாமும் இணைந்திட வெளியூர்களில் இருந்து, தூர தூர இடங்களில் எல்லாம் இருந்து எல்லாம் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை தந்த நிலைமை மாறி இப்போது சாஹிராவுக்கு இடம்மாற்றல் கிடைக்கும் ஆசிரியர்கள் இடமாற்றலை மாற்றி வேறு பாடசாலைக்கு செல்வதும், சாஹிராவில் கல்வி கற்ற மாணவர்கள் உயர்தர கல்வியை தொடர்வதற்கென வெளியூர்களுக்கு செல்வதும் சாஹிராவின் நீண்ட பயணத்தில் விழுந்த தடைகற்களாலும்.

விளையாட்டுக்களில், வெளிக்கள செயற்பாடுகளில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த சாஹிராவின் புதல்வர்கள் மாவட்ட மட்டத்தோடு தமது திறமைகளை முடிவுக்கு கொண்டுவந்து விடுகின்றனர். ஒழுக்கம் விடயத்தில் தனது எல்லையை தாண்டி சென்றுகொண்டிருக்கின்றமை கவலையளிக்கிறது.

WhatsApp Image 2017-02-20 at 2.49.36 PMஎனவே தான் அகவை எழுபத்திரண்டில் காலடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில் விட்டுப்போன எமது தொடர்புகளை மிக இருக்கமாக பேணி துவண்டு போயிருக்கும் சாஹிராவுக்கு புத்துயிர் அளித்திட நாம் அனைவரும் முன்வர வேண்டும்.

எமக்கு பிறகு ஆரம்பித்த எத்தனையோ பாடசாலைகள் கல்வி, விளையாட்டு, வெளிக்கள செயற்பாடுகள், ஒழுக்கம் என்பவற்றில் முன்னேறி சென்றுக்கொண்டு இருக்கையில் நாம் பின்னோக்கி செல்வது ஏற்றுக்கொள்ள தகாது. உதாரணமாக சாஹிராவின் தாய் கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஒவ்வொரு வருட பழைய மாணவர் சங்கங்களும் திட்டமிடல்கள் மற்றும் வழிகாட்டல்களால் அதன் பெயரை உன்னத இடத்திற்கு கொண்டு செல்லும் போது நாம் என்ன குறைந்தவர்களா..! அதன் அளவுக்கு என்றில்லாவிட்டாலும் ஓரளவுக்கு சரி முயற்சி செய்யலாமே.

குறை சொல்லிய காலம் மலையேறிவிட்டது. இனிவரும் காலங்களிலாவது எமது சந்ததிகள் கற்கப்போகும் எமது சொத்தை பாதுகாத்திட, சிறந்த எதிர்காலத்தை எமது ஊருக்கு விட்டு சென்றிட அதன் நீண்ட ஆரோக்கியமான பயணத்தில் இணைந்திடுவோம். நற்சமூகத்தை உருவாக்கிடுவோம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All