Puttalam Online
other-news

அற்புதமான மனிதர் திரு லாபிர் ஆசிரியர்

  • 21 March 2017
  • 1,121 views

– Shazma –

“ நீங்கள் அனைவரும் மேய்ப்பாளர்களே. நாளை மறுமையில்; உங்கள் பொறுப்புக்கள் பற்றி நீங்கள விசாரிக்கப்படுவீர்கள்…மேலும் நீங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்..” என்ற அல்குர்ஆனின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தாற் போல் கடமையைக் கண்ணும் கருத்துமாய் செய்கின்ற எங்கள் அன்பின் திரு எம். ஏம். எஸ். லாபிர் ஆசிரியர் அவர்கள் மன்னார் விடத்தல் தீவு எனும் கிராமத்தில் 1957 ஆம் ஆண்டு மாசி மாதம் 23 ஆம் திகதி; அவதரித்தார்.

இவர் தனது குடும்பத்தின் நான்காவது பிள்ளையாவார். உயரிய மனித விழுமியங்களுடன் திகழ்ந்த எம் அன்பின் ஆசான் திரு லாபிர் அவர்கள் தனது ஆரம்ப கல்வியை மன்னார் விடத்தல் தீவு அலிகார் மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றதோடுää தரம் 8 தொடக்கம் இடைநிலைக் கல்வியை மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியில் பயின்றார். இவர் சிறந்த கல்விப் பெறுபேறுகளுடன் 1977 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரியாக வெளியானார். தனது பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் கொழும்பு பல்கலைக்கழகத்திலேயே மேற்கொண்டார்.

1982 ஆம் வருடம் தனது ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்ட இவர் தனது முதல் நியமனப் பாடசாலையான கொழும்பு சாஹிரா கல்லூரியிலிருந்து ஆரம்பித்தார். இங்கு 2 வருடங்கள் கடமையாற்றிய பின் மன்னார் வேப்பங்குளம் மகா வித்தியாலயத்திற்கு மாற்றலாகிச் சென்றார். அதன்பின் மீண்டும் தான் ஆரம்ப கல்வி கற்ற பாடசாலையான மன்னார் அலிகார் மகா வித்தியாலயத்திலேயே தனது சேவையை ஆற்றும் வாய்ப்பினைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து மன்னார் பேசாலை பாத்திமா மகா வித்தியாலயத்திலும் கடமையாற்றினார். யுத்த நிலைமைகளின் காரணமாக தனது சொந்த இடத்திலிருந்து இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதன் காரணமாக புத்தளத்தை நோக்கி வந்தபோதுää புத்தளம் உளுக்காபள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் சேவையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. இறுதியாக தனது இளைப்பாறுதல் வரையும் கிட்டத்தட்ட 7 வருடங்கள் புத்தளம் சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலத்தில் மிகச் சிறப்பாக தனது சேவையினை எமது லாபிர் ஆசிரியர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலத்தில் கணக்கியல் கணிதம் போன்ற பாடங்களை மிகவும் அருமையான முறையில் கற்பித்து சிறந்த பெறுபேறுகளையும் மாணவர்கள் பெறுவதற்கு மிகவும் முயற்சியினை மேற்கொண்டார். அதேபோல் பாடசாலை நிர்வாகத்தில் மிக கண்ணியமான முறையில் தனது கணக்கீட்டு செயற்பாடுகளில் ஈடுபட்டு பாடசாலைக்கு மிகவும் உன்னதமான கீர்த்தியை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு எமது லாபிர் ஆசிரியரையே சாரும்.

பாடசாலைக்கு நேரத்திற்கு சமுகமளித்து தனது அன்றைய வேலையை அன்றைக்கே முடிக்கும் செயற்றிறமை கொண்ட ஓர் அற்புதமான ஆசிரியர் திரு லாபிர் அவர்கள். நேர்மை நேரந் தவறாமைபொறுப்புணர்வு தூர சிந்தனை பொறுமை போன்ற உயரிய மனித விழுமியப் பண்புகளுடன் வாழ்ந்த ஒரு ஆசிரியர் இவரென்றால் அது மிகையாகாது. பாடசாலையில் தான் ஓர் அனுபவசாலியாக இருந்தபோதிலும்ää மற்றவர்களை அதிகாரம் பண்ண முற்படவில்லை. மாறாக தனது அன்பினாலும் பொறுமையினாலும் பெருந்தன்மையுடன் உதவி செய்வதனாலும் அனைவரையும்; அடிமை சங்கிலியில் இணைத்திருந்தார்.

மாணவர்களின் ஒழுக்கத்திலும் கல்விச் செயற்பாடுகளிலும் மிகவும் ஆர்வம் உள்ள ஓர் ஆசிரியராகவே ஆரம்பத்திலிருந்து இறுதி வரை செயற்பட்ட ஓர் அருமையான ஆசிரியர் இவராவார்.

இவர் இலங்கையின் பலபாகங்களிலும் கடமையாற்றியிருப்பதனால் பல்வேறு அதிபர்களின் கீழ் தனது சேவைக்காலத்தில் வித்தியாசமான அனுபவங்களைப் பெற்றிருந்தார். அந்தவகையில் தனது அதிபர்களாக கொழும்பு சாஹிராவின் அதிபர்கள் மர்ஹ_ம் ஷாபி மரைக்கார் திரு யு.வு.எம். அலஸ் எமது கல்லூரியின் முன்னைய அதிபர் அருட் சகோதரி மலர் லூய்ஸ் மற்றும் தற்போதைய அதிபர் அருட் சகோதரி மெடில்டா லசாரஸ் போன்றோரை தன் வாழ்வில் மறக்க முடியாதவர்களாக அடையாளம் காட்டினார்.

தனது பாடசாலை தொடர்பான கனவுகளில் ஆரம்ப பிரிவில் இருக்கக்கூடிய இரண்டு மாடிக் கட்டடம் வெகு விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதை முதன்மைப்படுத்தினார்.

அமைதியாக ஆரவாரமின்றி செயற்படும் இவர் உலகின் மிக முக்கியமான பல நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புpரான்ஸ் பிரஜாவுரிமை இருக்கின்றபோதிலும் தனது வாழ் நாட்களை இலங்கையில் கழிக்க வேண்டும் என்பதே தனது அவாவாகக் கொண்டுள்ளார்.

இவரின் சேவையினை இறைவன் பொருந்திக் கொள்ளப் பிரார்த்திக்கின்றோம்.

IMG-20170321-WA0007

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All