Puttalam Online
other-news

எமது கதாநாயகி திருமதி ஞானசேகரம்

  • 21 March 2017
  • 2,937 views

– Shazma Aashiq –
“தோன்றிற் புகழொடு தோன்றுக, அஃதிலாற் தோன்றலிற் தோன்றாமை நன்று ” என்ற வள்ளுவன் வாக்குக்கு இலக்கண வியாக்கியானம் செய்வது போல் இப்புவிதனில் தன் சேவையினால் மக்கள் மத்தியில் புகழோடு வாழ்கின்ற திருமதி ஞானசேகரம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சில்லாலை என்ற ஊரில் 1956 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 24 ஆம் திகதி அவதரித்தார்.

இவர் தபால் அதிபராக இருந்த ஜேக்கப் ஸ்ரனிஸ்லாஸ் அவர்களுக்கும், இளைப்பாறிய ஆசிரியை மரியம்மா அவர்களுக்கும் மகளாக இவ்வவனியில் உதித்தார்.

தனது ஆரம்ப கல்வியை முல்லைத்தீவு திருக்குடும்ப கன்னியர் மடம் மகா வித்தியாலயத்தில் கற்றார். இடைநிலைக் கல்வியைத் தொடர்வதற்கு புத்தளம் சென். மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்வதற்காக யாழ்பாணம் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம் மகா வித்தியாலயத்தில் இணைத்துக் கொண்டதோடு, சிறந்த பெறுபேறுகளுடன் கலைப்பிரிவில் பல்கலைக்கழகத்திற்கும் தெரிவானார்.

1984 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்பு கலைமானி பட்டதாரியாக வெளியானார். அதைத் தொடர்ந்து கல்வியியல் டிப்ளோமாவையும் மகரகமயிலுள்ள தேசிய கல்வி நிறுவகத்தில் பூர்த்தி செய்தார்.

இவர் 1985 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 26 ஆம் திகதி ஆசிரியராக நியமனம் பெற்று,தனது முதற் கடமையை கிளிநொச்சி கோயில் வயல் C.C.T.M.S  கல்லூரியில் தொடங்கினார். இவர் இப்பாடசாலையில் 1992.09.08 ஆம் திகதி வரை ஆசிரியராக மட்டுமன்றி 1987 தொடக்கம் 1990 வரையும் 1991 தொடக்கம் 1992.09.08 வரை அதிபராகவும் பொறுப்பேற்று தனது கடமையினை செவ்வனே செய்துள்ளார் என்பது பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.

கால ஓட்டத்தில் 1992.09.08 இல் யாழ்ப்பாணம் இலாவலயிலுள்ள சென். ஹேன்றிஸ் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். ஆன்றைய காலகட்டத்தில் நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் தற்காலிக இணைப்பின் பேரில் பின்வரும் பாடசாலைகளில் தனது சேவையினைச் செய்துள்ளார்.
01.01.1996 மன்னார் முருங்கள் மகா வித்தியாலயம்
01.02.1996 மன்னார் மாவிலன் கேணி சுஊவுளு
12.05.1997 வவுனியா ஊ.ஊ.வு.ஆ.ளு
22.12.1997 புத்தளம் சென். மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயம்
1997 மார்கழி மாதம் 12 ஆம் திகதி இப்பாடசாலையில்
காலெடுத்து வைத்தபோது, அருட் சகோதரி ஜெஸின்தா அவர்கள் அதிபராகவும், அருட் சகோதரி மலர் அவர்களும், திருமதி கந்தசாமி அவர்களும் உதவி அதிபர்களாக கடமையாற்றிக் கொண்டிருந்தனர்.

திருமதி ஞானசேகரம் பாடசாலையின் வளர்ச்சியிலும், மாணவர்களின் முன்னேற்றத்திலும் பாரிய பங்கினை வகித்த ஓர் ஆசிரியர், பிரிதி அதிபர் மற்றும் ஓர் அதிபருமாவரார். இவர் இந்தப் பாடசாலையிலே கற்று இந்தப் பாடசாலையிலேயே கடமையும் ஆற்றக் கொடுத்து வைத்தவர். ஆரம்பத்தில் அதிபர் அருட் சகோதரி ஜெஸிந்தா அவர்களின் வழிகாட்டலில் தான் எடுத்த பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றி செயற்றிறமைமிக்க ஓர் ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் தொழிற்பட்டுள்ளார். ஒரு திறமைமிக்க புவியியல் ஆசிரியராக தன்னை இனங்காட்டிக் கொண்ட திருமதி ஞானசேகரம் அவர்கள் வரலாறு பாடத்தையும் கற்பிப்பதில் பின் நிற்கவில்லை.

1998 மற்றும் 1999 காலப்பகுதிகளில் பாடசாலைக்கென கட்டடமொன்றைப் பெற்றுக் கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டதோடுää நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி 20 X 40 அளவில் இன்றும் எமது பாடசாலையில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் கட்டடமொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு பிரயத்தனம் செய்தார். இக்கட்டடத்தை எமது முன்னால் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சொலமன் அவர்கள் திறந்து வைத்தார்கள். அதேவேளை அதன் திறப்பு விழாவுக்காக வாத்தியக் குழுவை [Band]  தயார்படுத்திய பெருமையும் இவரையே சாரும்.

மேலும் 2003 ஆம் ஆண்டு முதல் உதவி அதிபராக தொழிற்படத் தொடங்கினார். மேலும் விஞ்ஞான ஆய்வு கூடம் திறப்பு விழாவின்போது ஆசிரியர்களுக்கான புதிய சீருடையொன்றையும் அறிமுகப்படுத்தினார். அதே காலப்பகுதியில் பாடசாலையின் சுற்று மதில் தொடர்பாகவும்ää பாடசாலையின் நுழைவாயில் தொடர்பாகவும் குழுச் செயற்றிட்டங்களை நெறிப்படுத்தி பாடசாலைக்கு ஒரு வெளித்தோற்றமொன்றை அமைப்பதில் பாடசாலை சமூகத்துடன் தோழோடு தோள் நி;ன்றார்.

கற்பித்தலோடு தனக்குக் கொடுக்கப்படும் ஏனைய பொறுப்புக்களையும் செவ்வனே செய்து முடித்தல் இவரின் சிறப்பம்சமாகும். சுமூக விஞ்ஞான போட்டிகளை ஏற்பாடு செய்தல்ää பாடசாலை மட்டக் கணிப்பீடுகளை நெறிப்படுத்தலும் மேற்பார்வை செய்தலும்ää பண்புத்தர சுட்டி தொடர்பான வேலைத்திட்டங்களை மேற்பார்வை செய்தல்ää புள்ளிப் பதிவேடுகளை முறையாகப் பேணுவதை உறுதி செய்தல்ää முறையான உள்ளக மேற்பார்வையினை மேற்கொள்ளல் போன்ற இன்னோரன்ன வேலைகளை சிரமேற்கொண்டு தொழிற்பட்டார் என்றால் மிகையாகாது.

பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளில் அதிக சிரத்தை காட்டியவர்களில் மிக முக்கியமானவர் எமது திருமதி ஞானசேகரம் அவர்கள். 2000 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சையின் முடிவுகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததால் 2001 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த வகுப்புகளில் மாணவர்கள் கல்வியற் கல்லூரிகளுக்குத் தெரிவானார்கள் என்பது ஒரு சிறப்பம்சமாகும். அதே போல் 2009 ஆம் ஆண்டு முதன் முறையாக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்கள். அதேவேளை, 2012 ஆம் உயர் தரத்தில் வர்த்தகப் பிரிவை தொடக்கி வைப்பதிலும் முன்னோடியாகத் தொழிற்பட்டார். இவ்வாறு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக நேரிய சிந்தனையுடன் தொழிற்பட்டதனால் மாணவர்களின் உள்ளத்தில் என்றும் நீங்கா ஒளியாகக் காட்சி தருகிறார்.

திருமதி ஞானசேகரம் அதீத திறமை கொண்ட ஒரு பேச்சாளராக பெரிதும் போற்றப்படுபவர். எந்த நேரத்திலும் எவ்வகையான சபையாக இருந்தாலும் அதற்குப் பொருத்தமான முறையில் தனது பேச்சாற்றல் மூலமாக கேட்போரைக் கவரச் செய்யும் ஆற்றல் இயற்கையாகவே இறைவனால் அருளப் பெற்றவராக இருக்கின்றார்.

இத்துணை சிறப்பு வாய்ந்த ஆசிரியரும் பிரதி அதிபருமான எமது திருமதி ஞானசேகரம் அவர்கள் 2007 ஆம் ஆண்டு வடமேல் மாகாணத்தினால் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான விருதான “பிரதீபா பினாமய ” விருதைப் பெற்றதோடுää 2010 ஆம் இலங்கைப் பாடசாலைகளில் தலை சிறந்த ஆசிரியர்களுக்கான வழங்கப்படும் “சமசிரி” விருதையும் சுவீகரித்துக் கொண்டார்.

இவர் எப்போதும் பெண்களின் கல்வி தொடர்பாக சிந்திக்கக் கூடியவராக காணப்பட்டார். எதிர்கால தாய்மார்கள் கற்றவர்களாகவும், ஒழுக்கம் உள்ளவர்களாகவும் தாயின் பெறுமதியை உணர்ந்தவர்களாகவும் தொழிற்பட வேண்டும் என்பதில் அதிக கரிசணை காட்டினார். கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு அப்பால் பாடசாலையை பூக்கன்றுகளால் அலங்கரிப்பதில் அலாதி விருப்பமுடையவர். மிக நீண்ட காலம் இந்தப் பாடசாலையில் உதவி அதிபராகச் சேவையாற்றிய இவர் முன்னால் அதிபர் அருட் சகோதரி மலர் அவர்கள் ஓய்வு பெற்றபின் 2014 ஜ}ன் மாதம் தொடக்கம் 2014 செப்டெம்பர் 25 ஆம் திகதி வரை அதிபராகவும் தொழிற்பட்டார் என்பது அவரின் பாடசாலை வரலாற்றில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாகும்.

பாடசாலையிலிருந்து எமது உதவி அதிபர் ஓய்வு பெற்று சென்றபோதிலும், அவர் பாடசாலையுடனான உறவை மிகவும் மதிக்கும் ஒருவராகவே செயற்படுகின்றார். அவர் எப்போதும் நேர் சிந்தனையுடன் செயற்படுவதால்ää பாடசாலையில் ஏற்கனவே உருவாக்கப்பட்டு வழக்கமாக செய்து வரும் விடயங்களை கைவிட வேண்டாம் என அடிக்கடி அன்புக் கட்டளையிடக் கூடியவராக இருக்கின்றார். பாடசாலையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றாலும் தனது பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பதற்காக தனது கணவன், தனது தந்தை ஆகியோரை பராமரித்துக் கொண்டு பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்புக்களையும் மேற்கொள்கின்றார்.

இத்தகைய சிறப்புமிக்க ஒரு ஆசிரியப் பெருந்தகையை பாடசாலை இழந்திருப்பதென்பது வேதனையான விடயமாக இருந்தபோதிலும், இவர் பலருக்கு முன்மாதிரயாக வாழ்ந்து காட்டியிருக்கின்றார். இவரின் சேவையினை இறைவன் பொருத்திக் கொள்ள வேண்டும் என பிராரத்திக்கும் அதேவேளை, இவரினதும் இவரின் குடும்பத்தினருடைய உடல், உள ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்திக்கின்றோம். இவர் பாடசாலை தொடர்பில் கண்ட கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதே நாம் இவருக்கு செலுத்தும் நன்றிக் கடனாக அமையும் என்பதில் ஐயமில்லை.

IMG-20170321-WA0006

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All